பாயாசம் தமிழர்களின் உணவு பழக்க வழக்கங்களில் மட்டுமல்லாமல் அவர்களின் கலாச்சாரத்தோடும் ஒன்றியவை. விழாக்கள், பண்டிகை காலங்கள், மற்றும் திருமண விருந்துகளில் பாயாசம் முக்கிய இடம் பிடிக்கிறது. பேரீச்சம்பழம் அதிக சத்தானது. ஆரோக்கியமான குடல் இயக்கங்களுக்கு உதவுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்களின் அதிக செறிவு கொண்டது. மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. ஆப்பிள் சத்தான உணவு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த பதிவின் மூலமாக உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் ஆப்பிள் பேரிட்சை பாயாசம் செய்வது எப்படி என்பதை நாம் பார்ப்போம் வாருங்கள்.
ஆப்பிள்களில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. இது நம்முடைய பிள்ளைகளுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. அதுமட்டுமல்லாமல், இதனில் வைட்டமின் C மற்றும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. பொதுவாக பிள்ளைகளை பற்றி நாம் சொல்ல வேண்டுமெனில், அவர்களுக்கு பால் சாப்பிட பிடிக்காது. ஆப்பிள் போன்ற பழங்களை சாப்பிடவும் பிடிப்பதில்லை. இது போன்ற சூழலில், நாம் பாலையும், பழங்களையும் வேறு சில சுவாரஸ்யமான வழிகளில் கொடுக்க முயல்வது சிறந்தது. அதற்கு தான் இந்த இனிப்பான, ஆரோக்கியமான ஆப்பிள் பேரிட்சை பாயாசம். இதனை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆப்பிள் பேரிச்சை பாயாசம் | Apple Dates Payasam Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 2 ஆப்பிள்
- 10 பேரிட்சை
- 10 முந்திரி
- 10 திராட்சை
- 150 கி வெல்லம்
- 1 கப் துருவிய தேங்காய்
- 1 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்
- 3 டேபிள் ஸ்பூன் நெய்
செய்முறை
- முதலில் ஆப்பிள் பழத்தை துருவி எடுத்துக் கொள்ளவும். பேரிட்சை பழத்தை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை சேர்த்து அதில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து வடிகட்டி கொள்ளவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காயை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி துருவி வைத்துள்ள பழத்தை போட்டு வதக்கவும்.
- சிறிது வெந்து வந்ததும் கரண்டியால் மசித்து வெல்லக் கரைசலை அதில் ஊற்றவும். ஐந்து நிமிடங்கள் கொதிக்க விட்டு அதன் பின் தேங்காய் பால் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
- வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் தூள், நறுக்கி பேரிட்சை சேர்த்து இறக்கினால் சூடான சுவையான ஆப்பிள் பேரிட்சை பாயாசம் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : சுவையான கேரட் பாயாசம் நாக்கில் எச்சில் ஊறக்கூடிய அளவிற்கு மிக அருமையாக இருக்கும்!