கருப்பு உளுந்து பெண்களுக்கு ரொம்ப ரொம்ப ஆரோக்கியமான ஒன்னு. இந்த கருப்பு உளுந்து வச்சு செய்யக்கூடிய எல்லா ரெசிபியுமே அவ்ளோ ஆரோக்கியமானது அப்படின்னு சொல்லலாம். சின்ன குழந்தைகள் அந்த பெரியவங்க வரைக்கும் எல்லாருமே கண்டிப்பா வாரத்துக்கு ஒரு முறை கருப்பு உளுந்து வச்சு செய்யக்கூடிய கஞ்சி கூழ் லட்டு ஏதாவது ஒன்னு சாப்பிடணும் அந்த வகையில கருப்பு உளுந்து வச்சு செய்யக்கூடிய ஒரு சூப்பரான லட்டு ரெசிபியை உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. கண்டிப்பாக உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய எல்லாமே விரும்பி சாப்பிடுவாங்க.
குழந்தைகள் ஸ்னாக்ஸ் கேட்கும் போது இதை எடுத்து கொடுக்கலாம். அவங்க ஸ்கூலுக்கு போகும் போது கூட ஸ்கூல் ஸ்னாக்ஸ் பாக்ஸ்க்கு இந்த அருமையான ரெசிபியை கொடுத்துவிடலாம். முக்கியமா பெண் குழந்தைகளுக்கு சின்ன வயசுல இருந்து இந்த மாதிரி ஹெல்தியான ஸ்னாக்ஸ் கொடுக்கிறது பெரியவங்க ஆன உடனே அவங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும். அதனால கண்டிப்பா இதை சின்ன வயசுல இருந்தே கொடுத்து பழகுங்க. வேற ரெசிபி ஏதும் சாப்பிட மாட்டேங்கிறாங்க அப்படின்னா இனிப்பான இந்த லட்டு செஞ்சு கொடுங்க. கருப்பு உளுந்து சாப்பிடுவதால் மூட்டு வலி கால் வலி இடுப்பு வலி போன்ற எல்லா பிரச்சனைகளுமே சரியாகும்.
இது எல்லாருமே உணர்ந்த ஒரு விஷயம். அதனால கண்டிப்பா இதை செஞ்சு கொடுங்க. ஸ்னாக்ஸ்ல கூட கொஞ்சம் ஆரோக்கியமானதா செஞ்சு கொடுத்தா தான் குழந்தைகளுக்கு சின்ன வயசுல இருந்தே நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க முடியும். இந்த லட்டுல வாசனைக்காக ஏலக்காய் சேர்க்கிறதால மணமா இருக்கும். அதுமட்டுமில்லாம இதுல பேரிச்சம் பழமும் சேர்க்கறதால டேஸ்ட் ரொம்பவே வித்தியாசமா சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும்.இப்ப வாங்க இந்த சுவையான கருப்பு உளுந்து லட்டு எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
கருப்பு உளுந்து லட்டு | Black Gram Laddu Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1 கப் கருப்பு உளுந்து
- 1/2 கப் நாட்டு சர்க்கரை
- 10 பேரிச்சம் பழம்
- 2 ஏலக்காய்
- 2 டேபிள் ஸ்பூன் பச்சரிசி
- 1/4 கப் நெய்
- 15 முந்திரி பருப்பு
செய்முறை
- ஒரு கடாயில் கருப்பு உளுந்து பச்சரிசி இரண்டையும் தனித்தனியே சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் பேரிச்சம்பழம் ஏலக்காய் நாட்டு சர்க்கரை சேர்த்து அரைத்து பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் நெய் சேர்த்து முந்திரி பருப்பு போட்டு வறுத்து அதனை அப்படியே அரைத்து வைத்ததில் சேர்த்து கலந்து உருண்டையாக பிடித்து எடுத்தால் சுவையான கருப்பு உளுந்து லட்டு தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : தின்ன தின்ன திகட்டாத சுவையில் ரவா லட்டு ஒரு தடவை இப்படி ஈஸியாக வீட்டிலயே செஞ்சி பாருங்க!