நமது பழந்தமிழரின் உணவில் மிக முக்கியமானது களி. பல்வேறு வகையான களிகளை நம் மக்கள் உண்டு வந்தார்கள். நீண்ட நேர பசியைத் தாங்குவதற்கும், உடலை உரமாக்கவும் களி சிறந்த உணவு. இப்போதைய தலைமுறையில் பலர் களி வகைகளை வீட்டில் செய்வது கிடையாது. ஆனால் ஆரோக்கிய வாழ்வை நாடும் மக்கள் மீண்டும் பழந்தமிழர் உணவு முறையை மீட்டெடுக்க விரும்புகிறார்கள். சிறுதானிய உணவு வகைகளையும், களி வகைகளையும் பலர் பரிமாற ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்த பதிவில் கருப்பு உளுத்தம் களி எப்படி செய்வதென்று பார்க்கலாம். களியில் கால்சியம் மிகவும் அதிகம் என்பதால், வளரும் குழந்தைகள், விளையாட்டு வீரர்கள், பெண்கள், தாய்மார்களுக்கு ஏற்ற உணவு இது. இது பசியைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. உடல் வெப்பத்தைத் தணிக்கும் ஆற்றல் கொண்டது.
கோடையில் அனைவருமே காலை அல்லது மதிய உணவாக இந்த உளுந்தம் களியை எடுத்து கொள்ளலாம். இந்த களியில் வைட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்தது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். குடல் புண்களை ஆற்றும்.குறிப்பாக பெண்கள் உடல் நலனுக்கு அத்தியாவசிய உணவாக இதைக் குறிப்பிடலாம். பெண்கள் இதைச் சாப்பிட்டால், மாதவிடாய் காலத்தில் முதுகு வலி வராது. எலும்புக்கு மிகவும் நல்லது. நவீன உணவு முறை கலாச்சாரத்தால் துரித உணவுகளுக்கு அடிமையாகி, நமது இந்த பாரம்பரிய உணவை மறந்து விட்டோம். இனியாவது நமது குழந்தைகளுக்கு கடைகளில் விற்கும் துரித உணவுகளை வாங்கி கொடுக்காமல் இந்த ஆரோக்கியம் நிறைந்த உணவை செய்து கொடுப்போம்.
கருப்பு உளுந்து களி | Black Urad Dal Kali Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 அடி கனமான பாத்திரம்
தேவையான பொருட்கள்
- 250 கி கருப்பு உளுந்து
- 150 கி சிகப்பு அரிசி
- 250 கி வெல்லம்
- 1 டீஸ்பூன் வெந்தயம்
- நெய் தேவையான அளவு
- 5 ஏலக்காய்
செய்முறை
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் உளுத்தம் பருப்பு, சிகப்பு அரிசி சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின் இவை நன்கு ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து பொடித்து வைத்துள்ள மாவை சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு கட்டிகள் இல்லாமல் கலந்து விடவும்.
- பின் அடுப்பை மிதமான தீயில் வைத்து வெல்லம், நெய் மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்கு கலந்து விடவும். பின் இது அல்வா பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
- அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான கருப்பு உளுத்தம் களி தயார். இதை நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
Nutrition
இதனையும் படியுங்கள் : உடலுக்கு புத்துணர்வு தரும் அரிசி களி இப்படி செய்து பாருங்கள் சூப்பராக இருக்கும்!!!