எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்து போர் அடிக்கிறதா? இனி இதை செய்து பாருங்கள்! இட்லி தோசை என்றாலே அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒருவகையான உணவு. இவை காலை மற்றும் இரவு உணவுகளில் அதிகம் இடம் பெற்றிருக்கும். இத்தகைய இட்லி தோசைக்கு சட்னி தயார் செய்வது தான் மிக பெரிய வேலையாகும். இல்லத்தரசிகள் பலர் இட்லி தோசை என்றால் அதற்கு என்ன சட்னி தயார் செய்வது என்ற குழப்பமும், கேள்வியும் எழும். இனி இந்த கேள்விக்கும், குழப்பத்திற்கும் முற்று புள்ளி வையுங்கள். இந்திய வீடுகளில் சட்னி இல்லாமல் எந்த டிபனும் நிறைவடையாது.
தோசை, இட்லி, இடியாப்பம், அடை தோசை, ரொட்டி, பொங்கல், வடை என எந்த ரெசிபியாக இருந்தாலும் சட்னி எப்போதும் சுவையை அதிகரிக்கிறது. அந்த வகையில் இதுவரை நீங்கள் எத்தனையோ சட்னிகளை செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் கொண்டைக்கடலை கொண்டு சட்னி செய்து சாப்பிட்டுள்ளீர்களா? ஆம் கொண்டைக்கடலை கொண்டு சட்னி செய்யலாம். இதுவரை கொண்டைக்கடலை கொண்டு நிறைய ரெசிபிஸ் செய்திருப்போம். புளிக்குழம்பு, புலாவ், கொண்டைக்கடலை தாளிப்பு என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்த கொண்டைக்கடலையில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. தினமும் ஒரு கப் சாப்பிடுவதால் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் எல்லாமே கிடைக்கும். ஆனால் கொண்டைக்கடலையை அப்படியே கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் அந்த மாதிரி சாப்பிடாதவங்களுக்கு இந்த மாதிரி ஒரு சூப்பரான சட்னி செய்து கொடுங்கள். இந்த சட்னி இட்லி, தோசை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். அந்த வகையில் கொண்டைக்கடலை வைத்து சுவையான சட்னி எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
சென்னா சட்னி | Chana Chutney Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 வாணலி
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1 கப் கொண்டைக்கடலை
- 1 துண்டு இஞ்சி
- 5 பல் பூண்டு
- கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
- 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
- 2 காய்ந்த மிளகாய்
- 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் கொண்டைக்கடலையை நன்கு ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கொண்டைக்கடலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் இவை ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான சென்னா சட்னி தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ஒரு முறை இப்படி கொண்டைக்கடலை கத்தரிக்காய் கார குழம்பு ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!





