வெளிநாட்டுல நிறைய ஹோட்டல்ஸ்ல கிடைக்கக்கூடிய கறி ரொட்டி ஒரு சிலர் வெளிநாடு போகும்போது சாப்பிட்டு இருப்பீங்க ஆனா ஒரு சிலருக்கு இந்த கறி ரொட்டி ரெசிபி எப்படி செய்வது அப்படின்னு சுத்தமாவே தெரியாது ஆனா இந்த கறி ரொட்டி ஒரு தடவ செஞ்சு பாத்துட்டீங்க அப்படின்னா அதுக்கப்புறம் அடிக்கடி செஞ்சு சாப்பிட தோணும். இதுக்கு மைதா மாவு கோதுமை மாவு எது வேணும்னாலும் எடுத்துக்கலாம் ஆனா ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சாப்பிடணும் அப்படின்னா மைதா மாவுல இந்த கறி ரொட்டி செய்யலாம்.
இந்த கறி ரொட்டிக்கு நம்ம சிக்கன் தான் பயன்படுத்த போறோம். சிக்கன் உங்களுக்கு பிடித்தமான காய்கறிகள் சேர்த்து உள்ள வைக்கிறதுக்கு ஸ்டஃபிங் ரெடி பண்ணிட்டா சூப்பரான கறி ரொட்டி செஞ்சிடலாம். குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே இதை விரும்பி சாப்பிடுவாங்க. இதுக்கு எந்தவிதமான சைடு டிஷ்மே தேவைப்படாது. சூப்பரா இந்த கறி ரொட்டி செஞ்சு சாப்பிடலாம். வேணும்னா தயிர் வெங்காயம் வச்சு சாப்பிடலாம் அது டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.
இதுக்கு ஸ்டஃபிங் செய்வதற்கு நிறைய மசாலா பொருட்களும் நமக்கு தேவைப்படாது இதுல நம்ம காய்கறிக்காக கேரட் மட்டும் தான் சேர்க்க போறோம். சுவையான இந்த ரெசிபிய கண்டிப்பா நீங்க வீட்ல ஒரு தடவ ட்ரை பண்ணி பாக்கணும். நைட்டு டின்னருக்கு மதியம் லஞ்சுக்கு எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான சாப்பாடாக இது இருக்கும். சுவையான இந்த கறி ரொட்டி செய்வதற்கு கம்மியான பொருட்கள் மட்டுமே போதுமானது.
வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தாங்கன்னா அவங்களுக்கும் நீங்க இந்த சுவையான கறி ரொட்டிய செஞ்சு சுவையான இந்த ரெசிபியை ஒரு தடவை சாப்பிட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி சாப்பிடணும். ஒரு தடவை மட்டும் வெளிநாட்டுக்கு போய் சாப்பிட்டவங்க இந்த டேஸ்ட் பிடிச்சு போய் நம்ம ஊர்ல எங்கயாவது கிடைக்காதானு தேடுவாங்க ஆனா அப்படி தேட வேண்டிய அவசியமே கிடையாது வீட்டிலேயே செய்யலாம். அதுவும் ரெஸ்டாரன்ட் ஸ்டைல்ல அப்படியே செய்யலாம். இப்ப வாங்க இந்த சுவையான கறி ரொட்டி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
கறி ரொட்டி | Curry Roti Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 தோசை கல்
தேவையான பொருட்கள்
- 1/4 கி சிக்கன்
- 1 கப் மைதா மாவு
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 2 பெரிய வெங்காயம்
- 2 கேரட்
- 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் மைதா மாவு தண்ணீர் எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கியதும் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்துக் கொள்ளவும்.
- மிளகாய் தூள் இஞ்சி பூண்டு விழுது கரம் மசாலா உப்பு பொடியாக நறுக்கிய கேரட் அனைத்தையும் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்றாக வேக வைக்க வேண்டும்.
- பிசைந்து வைத்துள்ள மைதா மாவில் இருந்து சிறு உருண்டைகளாக எடுத்து பரோட்டாவிற்கு தேய்ப்பது போல் நன்றாக தேய்த்து அதனுள் ஸ்டப்பிங் வைத்து மூடி தோசை கல்லில் போட்டு நன்றாக வேக வைத்து எடுத்தால் சுவையான கறி ரொட்டி தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : இரவு உணவுக்கு ருசியான ரூமாலி ரொட்டி இப்படி வீட்டிலே செய்து பாருங்க! இதன் ருசியே தனி!