என்னதான் நம் சம்பாதித்த பணத்தை உங்களுக்கு ஏற்றார் போல் செலவு செய்கிறீர்களா என்று பார்த்தால் நிச்சயமாக இருக்காது கண்டிப்பாக நீங்கள் நினைத்த காரியத்திற்காக பணம் சேர்க்கும் பொழுது அதற்கு இடையூறாக பல சிக்கல்கள் வரும். உதாரணமாக உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு திடீர் உடல்நல குறைவால் மருத்துவ செலவுக்காக பணம் விரையமாகலாம். திடீரென வீட்டில் இருக்கும் பொருட்களோ அல்லது வீட்டில் ஏதேனும் இடத்தில் ஒரு பகுதி சேதமாகி இருந்தால் அதை சரி செய்ய வேண்டி இருக்கும். நீங்கள் யாருக்காவது கடன் கொடுத்து இருந்தால் அவர்களிடம் இருந்து பணம் திரும்ப பெற இயலாமல் போகும் சூழ்நிலை உண்டாகும். இதுபோன்று நீங்கள் சேர்க்கும் பணம் வீணாக செலவாகும். அப்படியானால் உங்கள் சமையலறையில் இருக்கும் இந்த டப்பாவில் நீங்கள் சம்பாரிக்கும் பணத்தை வைத்தால் வீணா செலவாகிறதை தடுக்கலாம். நாம் அதைப் பற்றி இந்த தொகுப்பில் தெளிவாக காணலாம் வாருங்கள்.

ஒரே இடத்தில் வைக்காதீர்
முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் பணத்தை ஓரிடத்தில் தேக்கி வைத்திருந்தால் பணம் வீண் விரயம் ஆகிவிடும். ஆகையால் பணத்தை ஒரே இடத்தில் தேக்கி வைக்காதீர்கள் அது உங்களுக்கு பயன்படாமலே கூட போகும், அதனால் நீங்கள் சம்பாரிக்கும் பணத்தை தாராளமாக செலவு செய்வதற்கு கற்றுக் கொள்ளுங்கள்.
காய்ந்த மிளகாய்
நீங்கள் சம்பாரிக்கும் பணத்திற்கு தோஷம் வரலாம் உதரணமாக நீங்கள் வேலை பார்க்கும் இடத்திலேயோ அல்லது உங்கள் தொழில் போட்டியாளர் நீங்கள் சம்பாரிக்கும் பணத்தை பார்த்து பொறாமை படும் போது பணத்திற்கு திருஷ்டியாகும். எனவே இத்தகைய பணத்தை முதலில் வாங்கி வந்தவுடன் சமையல் அறையில் இருக்கும் காய்ந்த மிளகாய் அல்லது துவரம் பருப்பு வைத்திருக்கும் டப்பாவில் போட்டு வையுங்கள். காய்ந்த மிளகாய் டப்பாவில் பணம் வைத்தால் தோஷம் கழியும், துவரம் பருப்பு டப்பாவில் பணம் வைத்திருந்தால் பணம் மேலும் உங்களுக்கு பெருகும்.

தாந்தீரக பராகாரம்
செலவு போக மீதம் இருக்கும் பணத்தை ஒரு காட்டன் துணியில் மடித்து காய்ந்த மிளகாய் டப்பாவில் போட்டு வையுங்கள். மீண்டும் உங்களுக்கு தேவைப்படும் பொழுது எடுத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். காய்ந்த மிளக்காயில் இருக்கும் நெடி பணத்தில் இருக்கும் தோஷங்களை நீக்கும் என்பது தாந்த்ரீக பரிகாரமாகும். இது போல ஒவ்வொரு முறை பணம் உங்களிடம் வரும் பொழுது இந்த டப்பாவில் வைத்து எடுப்பதால் உங்களிடம் உள்ள பணத்தை தக்க வைத்துக் கொள்ளவும், பணத்தில் இருக்கும் தோஷம் மற்றும் ஏவல்கள் நீங்கி பணம் வீண் விரயமாகாமல் இருக்கும்.