மாலை நேரத்துல பஸ் ஸ்டாண்ட் பக்கம் இல்லனா வீட்டு பக்கத்துல யாராவது ஒருத்தர் வண்டில தட்டிக்கிட்டு வேர்க்கடலை சுண்டல் இதெல்லாம் கொண்டு வருவாங்க. அத வாங்கி சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். ஆனா அது நம்ம வீட்லையே செய்ய முடியும். வீட்லையே செய்ய முடிகிற ரெசிபி நம்ம வீட்ல செஞ்சு சாப்பிடுறதா நம்ம உடம்புக்கு ஆரோக்கியமானது. அந்த வகையில ஆரோக்கியமான இந்த வேர்க்கடலை சாட் ரெசிபியை கடையில வாங்கி சாப்பிடாம வீட்டிலேயே சூப்பரா செஞ்சு சாப்பிடுங்க.
இது உடம்புக்கு நிறைய ஆரோக்கியங்களை கொடுக்கக்கூடியது. தினமும் ஒரு கப் வேர்க்கடலை சாப்பிட்டாலே நம் உடம்பில் இருக்கக்கூடிய பல நோய்கள் சரியாகும் அப்படின்னு சொல்லுவாங்க. அந்த வகையில இந்த வேர்க்கடலை அப்படியே சாப்பிட பிடிக்கலைன்னா இந்த மாதிரி ஒரு சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸா வேர்க்கடலை சாட் செஞ்சு சாப்பிடுங்க. இதுக்கு நம்ம குறைவான பொருட்கள் மட்டும் தான் சேர்க்க போறோம் வேர்க்கடலை மட்டும் வேக வச்சா போதுமானது. மத்தபடி வேற எதையும் நம்ம வதக்கவோ சமைக்கவோ தேவையில்லை.
அப்படியே பச்சையாவே எல்லாத்தையும் சேர்த்து சாப்பிட்டாலே அவ்ளோ ருசியா இருக்கும். காரத்துக்கு மிளகாய் தூளும் சாட் மசாலாவும் மட்டும் தான் சேர்க்க போறோம் குறைவான பச்சை மிளகாய் சேர்த்து செஞ்சோம் அப்படின்னா கண்டிப்பா இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப சூப்பரா வரும். மாலை நேரத்தில் டீ காபி குடிச்சுகிட்டே இந்த ரெசிபியை சாப்பிடலாம். குழந்தைகள் வேர்க்கடலை அப்படியே கொடுத்தா கண்டிப்பா சாப்பிட மாட்டாங்க அதனால அவங்களுக்கு இந்த மாதிரி செஞ்சு கொடுத்து பாருங்க. கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க.
குழந்தைகளுக்கு எப்பவுமே அவங்களுக்கு பிடிச்ச மாதிரி நம்ம செஞ்சு கொடுத்தாதான் அவங்க ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. அந்த வகையில இந்த ரெசிபியை குழந்தைகளுக்கு செஞ்சு கொடுத்து பாருங்க. இந்த ரெசிபி செய்றது ரொம்ப ரொம்ப ஈஸி. குக்கர்ல வேர்க்கடலையை வேக வச்சுட்டு வெங்காயம், தக்காளி எல்லாமே சட்டுனு நறுக்கிடலாம். சீக்கிரத்துல வேலை முடிஞ்ச மாதிரி இருக்கும் அதே நேரத்துல ரொம்ப ரொம்ப சுவையா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான வேர்கடலை சாட் ரெசிபி எப்படி செய்றதுன்னு பாக்கலாம்.
வேர்க்கடலை சாட் | Groundnut Chat Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 குக்கர்
தேவையான பொருட்கள்
- 1 கப் வேர்க்கடலை
- 1 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி
- 1 பச்சை மிளகாய்
- 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் சாட் மசாலா
- 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- உப்பு தேவையான அளவு
- 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
செய்முறை
- வேர்க்கடலையை குக்கரில் சேர்த்து இரண்டு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
- அதனுடன் பொடி பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கிய தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து கலந்து விடவும்.
- தேவையான அளவு உப்பு சாட் மசாலா மிளகாய் தூள் எலுமிச்சை சாறு தேங்காய் எண்ணெய் அனைத்தையும் சேர்த்து கலந்து பரிமாறினால் சுவையான வேர்க்கடலை சாட் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : சுவையான தஹி பப்டி சாட் இப்படி ஓரு தரம் செய்து பாருங்க!