Home ஜோதிடம் ராசி பலன் வாராந்திர ராசிபலன் – 10 ஜூன் 2024 முதல் 16 ஜூன் 2024 வரை

வாராந்திர ராசிபலன் – 10 ஜூன் 2024 முதல் 16 ஜூன் 2024 வரை

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் பெறலாம்.‌ இந்த வாரம் வணிகர்களுக்கு பெரிய நிதி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது அதனால் கவனமாக இருக்கவும். பணப் பரிவர்த்தனைகளில் முன்பை விட அதிக எச்சரிக்கையாக இருக்கவும். இந்த வாரத்தில், குடும்ப உறுப்பினர்களிடம் பேசும் போது உங்கள் வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்கவும். இந்த வாரம் தொழிலில் நல்ல பலன்கள் கிடைக்கும். நினைத்த காரியங்களில் சிற்சில தடங்கல்கள் ஏற்படும். இந்த வாரம் தொழிலிலும் உத்தியோகத்திலும் போட்டிகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும்.

-விளம்பரம்-

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதிலும் வெற்றி கிடைக்கும். இந்த வாரம் உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கடந்த காலத்தில் எதிர்கொண்டிருந்த ஏதேனும் சிரமங்கள் இந்த நேரத்தில் முற்றிலும் நீங்கும். நீங்கள் நீண்ட நாட்களாக சொந்த வீடு வாங்க முயற்சி செய்து கொண்டிருந்தால், இந்த வாரம் அதில் வெற்றி கிடைக்கும். பண வரவு ஓரளவுக்கே இருக்கும். ஆனாலும் தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கு இல்லை. இந்த வாரம் எதைச் செய்தாலும் எச்சரிக்கையோடு செய்ய வேண்டும், அலட்சியம் காட்ட வேண்டாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன அமைதி கிடைக்கும். இந்த வாரம் வாகனம் ஓட்டும்போது மிகவும் கவனமாக இருக்கவும்.‌உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் சுற்றுலா செல்ல இது ஒரு சிறந்த வாரம். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் ஏற்படும். உடல் நலனில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு உரிய சிகிச்சையினால் உடனுக்குடன் சரியாகும். வேலைக்குச் செல்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலையே காணப்படுகிறது. வேறு வேலைக்கு அல்லது வேறு இடத்துக்கு மாற நினைப்பர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். இந்த வாரம் முதலீடுகள் போன்றவற்றில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படாது என்பதால் உற்சாகமாக காணப்படுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியும். எதையும் சாதுரியமாக எதிர்கொள்வீர்கள். நிதானத்தோடு நடந்து கொள்வீர்கள். கவுரவம் கூடும். புதிய பொறுப்புக்கள் வரும். பொருளாதாரத்தில் சிறந்த முன்னேற்றம் இருக்கும். சிலர் பழைய வாகனங்களை கொடுத்துவிட்டு புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.

சிம்மம்

சிம்ம‌ ராசிக்காரர்கள் இந்த வாரம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இந்த வாரம் நிதி நெருக்கடியை சந்திக்கலாம்.‌ இந்த வாரம் குடும்ப வாழ்க்கையில் நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த நேரத்தில், பணியிடத்தில் உங்கள் மீதான பொறுப்புகளின் சுமை ஆரம்பத்திலிருந்தே அதிகரிக்கலாம். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும் வாய்ப்புண்டு. கலைத்துறையினர் ஆதாயமான நல் வாய்ப்புகள் பெறுவார்கள். கணவன் – மனைவி கருத்து வேறுபாடுகளுக்கு இடம் தராது அனுசரித்து வாழ்ந்தால் சிக்கல்கள் வராது. வெளியூர் பயணங்கள், வெளிநாட்டு பயணங்கள் வாய்ப்புண்டு.

-விளம்பரம்-

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் சிறந்த வாரமாக இருக்கும்.‌ எதிர்பாராத செலவுகள் ஏற்படும். இந்த வாரம் நீங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மீது உங்கள் ஆலோசனைகளை திணிப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனை இருந்தாலும்கூட அதற்கேற்ற லாபம் கிடைக்காது. எனவே பொறுமையை விடாமல் வியாபாரத்தில் கவனமாக இருப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சில ஏமாற்றங்கள் வர வாய்ப்புண்டு. குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் முன்னேற்றம் உண்டு. ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். சுபகாரியங்கள் வெற்றிகரமாகும். வார இறுதியில் கடன் சுமை குறையும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இந்த வாரம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இந்த வாரம் முழுவதும் உங்கள் நிதி வாழ்க்கை நன்றாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளன. மேலும், இந்த நேரத்தில் உங்கள் மரியாதை மற்றும் மரியாதை கூட அதிகரிக்கும். இந்த வாரம் அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். மற்றபடி பதவி உயர்வோ சலுகை உயர்வோ இந்த வாரம் எதிர்பார்க்கமுடியாது. பணப்புழக்கங்கள் தேவையான அளவுக்கு வந்துவிடும். சேமிப்பு அதிகரிக்கும். வீடு இடம் வாங்குவதில் முனைப்போடு செயல்படுவீர்கள். தேவையற்ற பிரச்னைகள் தலைதூக்கும் என்பதால், அதனை எதிர்கொள்வதில் கவனம் தேவை.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஆரோக்கியத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். எந்தவொரு நிதி முடிவுகளை எடுக்கும் போதும் சற்று கவனமாக இருக்கவும். இந்த வாரம் குடும்ப உறவுகளில் இருந்து வந்த அனைத்து வகையான பிரச்சனைகளும் நீங்கும். இந்த வாரம் வருகின்ற பிரச்சனைகளை நிதானமாக எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். மாணவர்கள் மேல் படிப்பிற்காக வெளிநாடு செல்வார்கள். அரசாங்க ஒப்பந்தக்காரர்கள் வேலைகளை நிறைவு செய்து புதிய ஒப்பந்தத்திற்காக விண்ணப்பம் செய்வார்கள். கலைத்துறையினர் வெளிநாடு சென்று தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி புகழ் அடைவார்கள்.

-விளம்பரம்-

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் வழக்கத்தை விட இந்த வாரம் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு செலவுகள் அதிகரிப்பதால் மன அமைதி குறையும். இந்த வாரம் வேலைக்குச் சென்று வரும் பெண்மணிகள் அலுவலகத்தில் மற்றவர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. தொழிலை விரிவுபடுத்தும் முயற்சி வெற்றிகரமாகும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வாய்ப்புண்டு. சுக்கிரன் பலத்தோடு இருப்பதால், ஆடை ஆபரணச் சேர்க்கைகள் உண்டு. கணவன் – மனைவி உறவுகளில் கருத்து வேற்றுமைகள் மறைந்து சந்தோஷம் நிலவும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் இந்த வாரம் அனைத்து விஷயங்களையும் சற்று கவனமாக கையாள வேண்டும். அலுவலகத்தில் உங்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஊதிய உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. தந்தை வழி உறவினர்கள் உதவுவார்கள். அரசாங்க காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும். வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இந்த வாரம் பொருளாதார நிலை உயரும். திருமண வயதினருக்கு வரன் கிடைக்கும். இந்த வாரம் புதிய முயற்சி வெற்றியாகும். உத்தியோகம், தொழிலில் ஏற்பட்ட சங்கடம் விலகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இந்த வாரம் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். திருமண வாய்ப்புகள் தள்ளிப் போகலாம். பெரியவர்கள் முயற்சியால் மீண்டும் கை கூடி வருவதற்கான வாய்ப்பு உண்டு. வீட்டில் மங்கள நிகழ்ச்சிகள் நடக்கும். அதற்காக அதிகம் செலவு செய்வீர்கள். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்ட சகோதரர்களும் உறவினர்களும் உங்களைப் புரிந்துகொண்டு அன்பு பாராட்டுவார்கள். ஒரு சிலருக்கு புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். வழக்கு சாதகமாகும். தொழிலில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த வருமானம் வரும். பொன் பொருள்சேரும். ஒருசிலர் புதிய வாகனம் வாங்குவீர்.

மீனம்

மீன‌ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஆரோக்கியத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் மிக எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். அனாவசியமாக கடன் வாங்காதீர்கள். பின்னர் அதை அடைக்க மிகவும் சிரமப்படுவீர்கள். மனை இட விற்பனையில் உங்களுக்கு எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். ஆன்லைன் வர்த்தகங்களில் துணிந்து ஈடுபடலாம். தேவையில்லாத ஒரு செலவுகள் வந்து திக்கு முக்காட வைக்கும். வருமானம் உயரும். பணியாளர்களுக்கு லாபம் அதிகரிக்கும். முயற்சி சாதகமாகும். புதிய முயற்சி லாபமாகும். உங்கள் செல்வாக்கு உயரும்.

இதனையும் படியுங்கள் : குருவால் அடுத்த ஜூன் மாத 30 நாட்களில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 4 ராசிகள்