பால் வைத்து செய்த ஸ்வீட் அப்படினாலே நமக்கு ஞாபகத்துக்கு வருவது பால்கோவா ரசகுல்லா இந்த மாதிரியான ஸ்வீட் தான். ஆனா பால்கோவாவும் இல்லாமல் ரசகுல்லாவும் இல்லாம பால் வச்சு ரொம்பவே சுலபமாக செய்யக்கூடிய ஒரு சூப்பரான சுலபமான பால் ஸ்வீட் தான் இப்ப நம்ம பாக்க போறோம். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் சொல்லாமல் கொள்ளாம வந்துட்டாங்கனா அவங்களுக்கு ரொம்பவே ஈசியா இந்த ஸ்வீட் செஞ்சு கொடுத்து அசத்தலாம். உங்க வீட்டு குழந்தைகளுக்கும் இந்த சூப்பரான ஸ்வீட் செஞ்சு கொடுத்து பாருங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க.
இந்த அருமையான பால் ஸ்வீட் உங்க வீட்டு குழந்தைகளில் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஒரு தடவை இந்த பால் ஸ்வீட் உங்க வீட்டுல செஞ்சுட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செஞ்சு சாப்பிட்டு தான் இருப்பீங்க அந்த அளவுக்கு ரொம்பவே ருசியா இருக்கும். நம்ம வீட்ல இருக்கக்கூடிய பொருட்களை வைத்து இந்த பால் ஸ்வீட் செஞ்சு முடிச்சிடலாம். இந்த பால் ஸ்வீட்ல கொஞ்சம் இனிப்பும் புளிப்பும் கலந்து இருக்கும். கொஞ்சம் வித்தியாசமான சுவைல நீங்க இதுவரைக்கும் சாப்பிடாத ஒரு ஸ்வீட்டாவே இருக்கும். இப்ப வாங்க இந்த சுலபமான சூப்பரான பால் ஸ்வீட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
பால் ஸ்வீட் | Milk Sweet Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 அடி கனமான பாத்திரம்
தேவையான பொருட்கள்
- 1/2 லி பால்
- 50 கி சர்க்கரை
- 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
- 2 டேபிள் ஸ்பூன் நெய்
- 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
செய்முறை
- ஒரு அடி கனமான பாத்திரத்தில் பால் ஊற்றி சுண்ட காய்ச்சிக் கொள்ளவும்.
- அதில் எலுமிச்சைச் சாறை ஊற்றி ஐந்து நிமிடங்களுக்கு கிளறி விடாமல் அப்படியே வைத்திருக்கவும்.
- ஐந்து நிமிடங்களுக்கு பிறகு நன்றாக கிளறிவிட்டு அது திரிந்து சுண்டும் வரையில் கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
- நன்றாக சுண்டி வந்த பிறகு அதில் சர்க்கரை ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
- பின் நெய் சேர்த்து கலந்து கெட்டியாகும் வரை கிளறிவிட்டு அடுப்பை அணைத்து விடவும்.
- பத்து நிமிடத்திற்கு பிறகு நன்றாக அது ஆறியதும் கையில் கொஞ்சம் நெய் தடவிக் கொண்டு உங்களுக்கு தேவையான வடிவத்தில் செய்து சாப்பிட்டு பார்த்தால் சுவையான பால் ஸ்வீட் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : வீட்டிலயே ஸ்வீட் செய்ய நினைத்தால் சுலபமாக அவகேடோ பர்பி இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்! வாயில் வைத்தவுடன் கரையும்!