நல்லா மொறு மொறுன்னு காரசாரமா 65 வகைகள் எது செஞ்சு கொடுத்தாலும் எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. காலிஃப்ளவர் 65 சிக்கன் 65 இறால் 65 அப்படின்னு எக்கசக்கமான 65 வகைகள் இருக்கு அது எல்லாமே சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். அந்த வகையில இன்னைக்கு நம்ம ஒரு சூப்பர் டேஸ்டான மஷ்ரூம் 65 தான் பாக்க போறோம். இந்த மஷ்ரூம் வச்சு மஷ்ரூம் கிரேவி மஷ்ரூம் பிரியாணி அப்படின்னு நிறைய செஞ்சு இருந்தாலும் இந்த மஷ்ரூம் 65 ஒரு தடவ உங்க வீட்ல செஞ்சு சாப்பிட்டு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும்.
தக்காளி சாதம் லெமன் சாதம் தயிர் சாதம் வெஜிடபிள் பிரியாணி மஸ்ரூம் பிரியாணி சிக்கன் பிரியாணி எல்லாத்துக்குமே சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிட இந்த 65 ரெசிபி ரொம்பவே சூப்பரா இருக்கும். உங்க குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்லயும் கூட இந்த 65 ரெசிபி செஞ்சு கொடுத்து விடலாம் ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. பொறித்து கொண்டு இருக்கும் போதே கண்டிப்பாக பாதி காலியாகிடும் அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும்.இப்ப வாங்க இந்த சூப்பர் டேஸ்டான மஷ்ரூம் 65 மொறு மொறுன்னு காரசாரமா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
காளான் 65 | Mushroom 65 Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 250 கி காளான்
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
- 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
- 1 டேபிள் ஸ்பூன் சோள மாவு
- 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- மஷ்ரூமை கழுவி சுத்தம் செய்து மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு கரம் மசாலா, மிளகுத்தூள் இஞ்சி பூண்டு விழுது அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- 20 நிமிடங்களுக்கு பிறகு மஷ்ரூமில் இருந்து தண்ணீர் விட்டிருக்கும். அப்பொழுது கடலை மாவு அரிசி மாவு சோள மாவு அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கலந்து வைத்துள்ள மஷ்ரூம்மை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரித்து எடுத்தால் சுவையான மஷ்ரூம் 65 தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ரோட்டுக்கடை ஸ்டைல் காளான் பிரைட் ரைஸ் ஒரு தரம் இப்படி செய்து பாருங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!!