தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழர்களுக்கு மிகவும் விருப்பமான ஒரு தின்பண்டம் என்றால் அது வடை தான். ஒவ்வொரு முறை டீக்கடையை கடக்கும் போதும் நமது கண்கள் நிச்சயம் வடையைத் தேடும். அந்த அளவிற்கு வடை நமக்கு மிகவும் பிடித்தமான தின்பண்டமாகும். வடை எவ்வளவுதான் சுவயானதாக இருந்தாலும் அது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்பது மறுக்க முடியாத உண்மை. பெரும்பாலான வீடுகளில் உளுந்து வடை அல்லது பருப்பு வடை செய்வார்கள். இது ஆரோக்கியமான வடையாக இருந்தாலும் அதை கூடுதல் ஆரோக்கியமானதாக மாற்ற அதில் வேறு சில பொருட்களை சேர்க்கலாம்.
அந்த வகையில் நாம் இன்று ஆரோக்கியமான பொருட்களில் ஒன்றான காளான் சேர்த்து காளான் வடை எப்படி செய்வதென்று பார்க்க இருக்கிறோம். காளான்களில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளன, அதோடு அவை நிறைந்த அளவு நார்ச்சத்துக்களையும் கொண்டுள்ளன. புரதங்கள், வைட்டமின் C, B மற்றும் D, தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ், செலினியம், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற பிற ஊட்டச்சத்துக்களும் காளான்களில் நிரம்பியுள்ளன. காளான் குழந்தைகளுக்கு வலிமையை தரும் ஒரு உணவு ஆகும்.
அதுமட்டுமல்லாமல் எளிதாக கிடைக்கும் ஒரு பொருளாக காளான் உள்ளதால் இதனை அடிக்கடி சமைத்து ருசிக்க முடியும். மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் டீ, காபி குடிக்கும் போது சூடாகவும், காரமாகவும் எதையேனும் சாப்பிட கேட்கிறார்கள் என்றால் அவர்களுக்கு காபி, டீ குடிக்கும் போது சாப்பிட வடை தான் பொருத்தமாக இருக்கும். அதனால் காளான் கொண்டு சுவையான ஒரு வடை செய்யுங்கள். இந்த வடை மிகவும் ருசியாக, அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
காளான் வடை | Mushroom Vada Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 வாணலி
தேவையான பொருட்கள்
- 1/4 கப் கடலை மாவு
- 1/4 கப் அரிசி மாவு
- 1/4 கப் சோள மாவு
- 1 பெரிய வெங்காயம்
- கொத்தமல்லி, கறிவேப்பிலை சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 2 பச்சை மிளகாய்
- 1/4 கப் ஸ்வீட் கார்ன்
- 1/2 கப் காளான்
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
- 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
செய்முறை
- முதலில் வெங்காயம், காளான், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும். சோளத்தை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு பவுளில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, வெங்காயம், கொத்தமல்லி, காளான், கறிவேப்பிலை, உப்பு, சோளம் , பச்சை மிளகாய், மிளகு தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு வடை பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும்.
- ஒரு வாணலியிலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும் பிசைந்து வைத்துள்ள மாவை கொஞ்சமாக எடுத்து வடை போல் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான காளான் வடை தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : அவல் வடை செய்வது எப்படி