- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 2
- Cuisine
- Indian
- Course
- Breakfast
ப்ரேக்ஃபாஸ்ட்க்கு எப்பவுமே நம்ம இட்லி, தோசை பொங்கல் பூரி சப்பாத்தி இதுதான் சாப்பிடுவோம். ஒரு சிலர் சாப்பாடு கூட சாப்பிடுவாங்க. இன்னும் ஒரு சிலர் ஜூஸ் மில்க் ஷேக் சத்துமாவு கஞ்சி இந்த மாதிரி சாப்பிடுவாங்க. ஆனா ஒரு சிலர் பிரட் டோஸ்ட் ஜாம் இதெல்லாம் சாப்பிடுவாங்க. அந்த வகையில இன்னைக்கு நம்ம மஸ்ரூம் ஆனியன் ரெண்டும் சேர்த்து ஒரு சூப்பரான கேரமலைஸ்டு ஆனியன் மஸ்ரூம் டோஸ்ட் செய்ய போறோம். இதை சாப்பிடுவதற்கு அவ்வளவு டேஸ்டா இருக்கும். ஒரு தடவை இதை செஞ்சு பாத்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. இதுக்கு கோதுமை பிரட் கூட நீங்க பயன்படுத்தலாம்.
ஒரு சிலர் மைதா மாவில் செஞ்ச பிரட் சாப்பிட மாட்டாங்க அந்த மாதிரி சாப்பிடாதவங்க அதுக்கு பதிலா இந்த கோதுமை பிரட் பயன்படுத்தி கூட இந்த சூப்பரான ரெசிபியை செஞ்சு சாப்பிடலாம். இதை பிரேக் பாஸ்ட்க்கு செஞ்சு சாப்பிடும்போது வயிறுக்கு நிறைவா இருக்கும். பிரட் சாப்பிட்டா ஒரு சிலர் வயிறு நிறையாது அப்படின்னு நினைப்பாங்க. ஆனா இந்த டோஸ்ட் செஞ்சு சாப்பிட்டு பாருங்க கண்டிப்பா வயிறு நிரம்பிடும். ரெண்டு பிரட் சாப்பிட்டாலே போதுமானதாக இருக்கும். இந்த சூப்பரான பிரட் டோஸ்ட் ரெசிபியை மிஸ் பண்ணாம கண்டிப்பா செஞ்சு சாப்பிட்டு பாருங்க. குழந்தைகளுக்கு இதை காலைல பிரேக் பாஸ்ட்க்கு செஞ்சு கொடுத்து விடுங்கள்.
அதனால கண்டிப்பா இந்த ரெசிபியை குழந்தைகளுக்கு செஞ்சு கொடுங்க. இந்த டேஸ்டான ரெசிபி கண்டிப்பா எல்லாருக்குமே ஃபேவரட் ஆக கூட மாறிடும். இதுல மஸ்ரூம் சேர்த்து செய்றதால டேஸ்ட் இன்னும் அதிகமாக இருக்கும் இதுல மஸ்ரூமுக்கு பதிலா நீங்க பன்னீர் கூட சேர்த்து செய்யலாம். பால் மைதா மாவு எல்லாமே சேர்த்து ஆர்கானோ சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து செய்வதால் ரிச் டேஸ்ட்ல இருக்கும். கண்டிப்பா ஒரு தடவை இந்த ரெசிபியை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க இப்ப வாங்க இந்த கேரமலைஸுடு ஆனியன் மஷ்ரூம் டோஸ்ட் பிரேக்ஃபாஸ்ட்க்கு எப்படி செஞ்சு அசத்துறதுனு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் பிரெட் சில்லி இப்படி ட்ரை பண்ணி பாருங்க! பார்த்தாலே நாவில் எச்சி ஊறும்!
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து நறுக்கிய வெங்காயம் பூண்டு உப்பு சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்கவும்.
மஸ்ரூம் சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு மிளகாய் தூள் சில்லி ஃப்ளேக்ஸ் ஆர்கானோ சேர்த்து நன்றாக கிளறவும்.
மைதா மாவை பாலில் கலந்து அதனையும் சேர்த்து நன்றாக கிளறவும் பட்டர் சேர்த்து நன்றாக வெந்ததும் இறக்கி வைக்கவும்.
தோசை கல்லில் சிறிதளவு பட்டர் சேர்த்து பிரட் சேர்த்து இரண்டு பக்கமும் டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும்.
அதன் மேல் தயார் செய்து வைத்துள்ள காளான் கலவையை பிரட் மேல் சேர்த்து பரிமாறினால் சுவையான ஆனியன் மஸ்ரூம் டோஸ்ட் தயார்.






