பருப்பு வடை ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு பாருங்க செம க்ரிஸ்பியா இருக்கும்!!

- Advertisement -

பருப்பு வடை ஒரு சிலர் ரொம்ப ரொம்ப சூப்பரா செய்வாங்க. ஆனால் ஒரு சிலருக்கு எப்படி செய்வது என்று தெரியாமல் இருக்கும். அந்த மாதிரி தெரியலைனா இந்த மாதிரி செய்முறையில் ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க. அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. இந்த பருப்பு வடை செய்வது ரொம்ப ரொம்ப ஈஸிதான். நல்ல மொறு மொறுன்னு கிரிஸ்பியா சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். ஒரு சிலர் கடலைப்பருப்பு மட்டும் போட்டு செய்வாங்க ஒரு சிலர் கடலைப்பருப்பும், துவரம் பருப்பும் சேர்த்து செய்வாங்க இன்னைக்கு நம்ம இந்த ரெண்டு பருப்பும் சேர்த்து ஊறவைத்து ஒரு சூப்பரான பருப்பு வடை செய்ய போறோம்.

-விளம்பரம்-

இதுல கொத்தமல்லி இலைகள் கருவேப்பிலை எல்லாமே சேர்த்து செய்றதால சாப்பிடுவதற்கு ரொம்ப ரொம்ப வாசனையா இருக்கும். சுவையான இந்த பருப்பு வடையை மாலை நேரத்தில் டீ காபியோட வச்சு சாப்பிடுவதற்கு அவ்வளவு சூப்பரா இருக்கும். தயிர் சாதம் பருப்பு சாதம் சாம்பார் சாதம் ரசம் சாதம் எல்லாத்துக்கும் சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். எல்லாமே ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். சுவையான இந்த பருப்பு வடையை கண்டிப்பா வீட்டிலேயே செஞ்சு சாப்பிட்டு பாருங்க இதுல பருப்பு நிறைய சேர்க்கிறதால கொஞ்சமா பெருங்காயத்தூள் சேர்த்து செய்தால் வாயு பிரச்சனை வராமல் இருக்கும்.

- Advertisement -

சுவையான இந்த ரெசிபியை கண்டிப்பா செஞ்சு சாப்பிட்டு பாருங்க. சுட சுட செஞ்சு சாப்பிடும் போது அவ்ளோ சூப்பரா இருக்கும் ஆறி போச்சுன்னா நல்லாவே இருக்காது அதனால சூடா செஞ்சு இந்த வடைய வீட்ல இருக்கவங்க கூட சேர்ந்து என்ஜாய் பண்ணி சாப்பிட்டு பாருங்க. இப்ப வேற குழந்தைகளுக்கு லீவு வரப்போகுது அதனால அவங்களுக்கு அடிக்கடி ஏதாவது ஸ்னாக்ஸ் செஞ்சு கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம். அந்த மாதிரி சமயத்துல அவங்களுக்கு இந்த சூப்பரான பருப்பு வடைய செஞ்சு கொடுங்க பருப்பு சேர்த்து செய்றதால ப்ரோட்டீன் அதிகமாக கிடைக்கும். இப்ப வாங்க இந்த சுவையான பருப்பு வடை ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

Print
5 from 1 vote

பருப்பு வடை | Paruppu Vadai Recipe In Tamil

பருப்பு வடை ஒரு சிலர் ரொம்ப ரொம்ப சூப்பரா செய்வாங்க. ஆனால் ஒரு சிலருக்கு எப்படி செய்வது என்று தெரியாமல் இருக்கும். அந்த மாதிரி தெரியலைனா இந்த மாதிரி செய்முறையில் ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க. அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. இந்த பருப்பு வடை செய்வது ரொம்ப ரொம்ப ஈஸிதான். நல்ல மொறு மொறுன்னு கிரிஸ்பியா சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். ஒரு சிலர் கடலைப்பருப்பு மட்டும் போட்டு செய்வாங்க ஒரு சிலர் கடலைப்பருப்பும், துவரம் பருப்பும் சேர்த்து செய்வாங்க இன்னைக்கு நம்ம இந்த ரெண்டு பருப்பும் சேர்த்து ஊறவைத்து ஒரு சூப்பரான பருப்பு வடை செய்ய போறோம். இதுல கொத்தமல்லி இலைகள் கருவேப்பிலை எல்லாமே சேர்த்து செய்றதால சாப்பிடுவதற்கு ரொம்ப ரொம்ப வாசனையா இருக்கும். சுவையான இந்த பருப்பு வடையை மாலை நேரத்தில் டீ காபியோட வச்சு சாப்பிடுவதற்கு அவ்வளவு சூப்பரா இருக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Side Dish, snacks
Cuisine: Indian, TAMIL
Keyword: Paruppu Vadai
Yield: 5 People
Calories: 106kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் கடலைப்பருப்பு
  • 1/2 கப் துவரம் பருப்பு
  • 2 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 பெரிய வெங்காயம்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 துண்டு இஞ்சி
  • 4 பல் பூண்டு
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை

  • கடலைப்பருப்பையும் துவரம் பருப்பையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
  • சிறிதளவு பருப்பை மட்டும் தனியாக எடுத்து வைத்துக்கொண்டு மீதி அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.
  • அதனுடன் பூண்டு இஞ்சி சோம்பு, பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
  • அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம் உப்பு ஒரு கொத்து கருவேப்பிலை கொத்தமல்லி இலைகள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • அதனை சிறிதாக தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான பருப்பு வடை தயார்.

Nutrition

Serving: 450g | Calories: 106kcal | Carbohydrates: 2.83g | Protein: 17.2g | Fat: 5.2g | Sodium: 92mg | Potassium: 156mg | Vitamin C: 131mg | Calcium: 18mg | Iron: 12mg

இதனையும் படியுங்கள் : கொண்டைக்கடலை வடை