பீர்க்கங்காய் தோல் சட்னி ஒரு தடவை உங்க வீட்டுல செஞ்சு பாருங்க!

- Advertisement -

பீர்க்கங்காய் வச்சு பீர்க்கங்காய் கூட்டு பீர்க்கங்காய் சாம்பார் அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சிருப்போம். ஆனா பீர்க்கங்காய் தோல் வச்சு யாரும் சட்னி செஞ்சு இருக்கவே மாட்டீங்க. ஒரு சிலர் செஞ்சுருப்பாங்க ஆனா ஒரு சிலருக்கு அதுல செய்யலாம் அப்படின்னு தெரியாது. ஆனா பீர்க்கங்காய் தோல் வச்சு நம்ம சட்னி செஞ்சோம் அப்படின்னா டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். இதுல நம்ம போடப்போற பருப்பு புளி எல்லாம் சேர்த்து ஒரு சூப்பரான சுவையை கொடுக்கும். இந்த பீர்க்கங்காய் தோல் வெச்சி செய்யக்கூடிய சட்னி இட்லி தோசை சப்பாத்தி பூரி ரசம் சாதம்னு எல்லாத்துக்குமே சூப்பரான ஒரு காமினேஷனா இருக்கும்.

-விளம்பரம்-

இந்த சட்னில சாதத்தை போட்டு பிசைஞ்சு கூட குழந்தைகளுக்கு ஊட்டி விடலாம் அவ்ளோ சத்துக்கள் இருக்கு. இந்த பீர்க்கங்காய் தோல் துவையல் சாப்பிடுவதால் தோல் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சினைகளுமே சரியாகும். காய்ச்சல் இருமல் சளி இருக்கும் போது கூட ரசம் சாதம் வச்சு இந்த துவையல் மட்டும் வச்சு சாப்பிடலாம். சூப்பரா கேட்கும். இந்த டேஸ்டான சுவையான அதுலயும் ஆரோக்கியமான பீர்கங்காய் தோல் சட்னி கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவ செஞ்சு சாப்பிட்டு பாருங்க.

- Advertisement -

அதுக்கு அப்புறமா எப்பவுமே பீர்க்கங்காய் தோலை தூக்கி கீழ போடவே மாட்டீங்க. அதுல ஆரோக்கியமான இந்த சட்னி தான் செஞ்சு சாப்பிடுவீங்க. கண்டிப்பா உங்க வீட்ல இருக்க கூடிய எல்லாருக்குமே இந்த சட்னி ரொம்ப ரொம்ப பிடிக்கும். இதுல பீர்க்கங்காய் தோலோட பச்சை வாசனையே தெரியாது அந்த அளவுக்கு சுவையா இருக்கும். எப்பவும் ஒரே மாதிரியா தேங்காய் சட்னி தக்காளி சட்னி, புதினா சட்னி, மல்லி சட்னி செய்யாம டிஃபரண்டா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த டேஸ்டான ஆரோக்கியமான சிம்பிளான பீர்க்கங்காய் தோல் சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

பீர்க்கங்காய் தோல் சட்னி | Peerkangai Thol Chutney Recipe In Tamil

பீர்க்கங்காய் வச்சு பீர்க்கங்காய் கூட்டு பீர்க்கங்காய் சாம்பார் அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சிருப்போம். ஆனா பீர்க்கங்காய் தோல் வச்சு யாரும் சட்னி செஞ்சு இருக்கவே மாட்டீங்க. ஒரு சிலர் செஞ்சுருப்பாங்க ஆனா ஒரு சிலருக்கு அதுல செய்யலாம் அப்படின்னு தெரியாது. ஆனா பீர்க்கங்காய் தோல் வச்சு நம்ம சட்னி செஞ்சோம் அப்படின்னா டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். இதுல நம்ம போடப்போற பருப்பு புளி எல்லாம் சேர்த்து ஒரு சூப்பரான சுவையை கொடுக்கும். இந்த பீர்க்கங்காய் தோல் வெச்சி செய்யக்கூடிய சட்னி இட்லி தோசை சப்பாத்தி பூரி ரசம் சாதம்னு எல்லாத்துக்குமே சூப்பரான ஒரு காமினேஷனா இருக்கும். இந்த சட்னில சாதத்தை போட்டு பிசைஞ்சு கூட குழந்தைகளுக்கு ஊட்டி விடலாம் அவ்ளோ சத்துக்கள் இருக்கு. இந்த பீர்க்கங்காய் தோல் துவையல் சாப்பிடுவதால் தோல் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சினைகளுமே சரியாகும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: chutney
Cuisine: Indian
Keyword: Peerkangai Thol Chutney
Yield: 5 People
Calories: 120kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 2 கப் பீர்க்கங்காய் தோல்
  • 1 டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
  • 5 வர மிளகாய்
  • 1 துண்டு புளி
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 5 பல் பூண்டு
  • 10 சின்ன வெங்காயம்

செய்முறை

  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • சின்ன வெங்காயம் பூண்டு கருவேப்பிலை, புளி அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும்.
  • பிறகு தேங்காயை சேர்த்து பொன்னிறமாக வதக்கி எடுத்ததும் பீர்க்கங்காயின் தோலை சேர்த்து வதக்கவும். அனைத்தையும் ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து உப்பு போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  • பிறகு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்து அரைத்ததில் சேர்த்தால் சுவையான பீர்க்கங்காய் சட்னி தயார்.

Nutrition

Serving: 450g | Calories: 120kcal | Protein: 14g | Fat: 2.9g | Sodium: 35mg | Potassium: 68mg | Vitamin A: 80IU | Calcium: 17mg

இதனையும் படியுங்கள் : வேர்கடலை தக்காளி சட்னி ரோட்டு கடை ஸ்டைலில் இந்த சட்னிக்கு 2 சட்டி இட்லி அவித்தால் கூட பத்தாது!