மாலை நேரம் ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான உருளைக்கிழங்குல மெது வடை இப்படி செஞ்சி பாருங்க!

- Advertisement -

மெதுவடை அப்படின்னு சொன்னாலே நமக்கு டீக்கடைல போடுற மெதுவடை தான் ஞாபகத்துக்கு வரும். டீக்கடை பக்கம் நம்ம கிராஸ் ஆகும் போது சூடா கொதிக்கிற எண்ணெயில வேக வேகமா மாஸ்டர் போன்ற மெதுவடை எழும்பி வரத பார்க்கிறதுக்கே சாப்பிடணும் போல இருக்கும். அந்த அளவுக்கு அந்த வடையோட டேஸ்ட் சூப்பரா இருக்கும். காலைல நம்ம பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடலைன்னா ஒரு டீ குடிச்சிட்டு ரெண்டு மெது வடை சாப்பிட்டா போதும் வயிறு ஃபுல்லாகிடும் வயிறு மட்டும் இல்ல மனசு நமக்கு ஃபுல் ஆயிடும். காரணம் அந்த மெதுவடையோட டேஸ்ட் தான்.

-விளம்பரம்-

ஆனா அதே மாதிரியான மெதுவடைய நம்ம வீட்ல செய்யணும் அப்படின்னா கொஞ்சம் யோசிப்போம் கடையில கிடைக்கிற மாதிரி நமக்கு மெதுவடை கிடைக்குமா அப்படின்னு. ஆனா கடையில கிடைக்கிற மாதிரி வீட்டிலேயே நம்மளால சூப்பரான சாப்டான மெதுவடை செய்ய முடியும். அதிலேயே கொஞ்சம் டிஃபரண்டா இன்னிக்கு நம்ம உருளைக்கிழங்கு வச்சு மெதுவடை செய்ய போறோம். உருளைக்கிழங்கு ரோல் செய்து இருப்போம் போண்டா செஞ்சிருப்போம் இன்னும் உருளைக்கிழங்கு வச்சு நிறைய எக்கச்சக்கமான உணவுகளை செஞ்சிருப்போம்.

- Advertisement -

ஆனா உருளைக்கிழங்கு வச்சு நம்ம கண்டிப்பா மெதுவடை செஞ்சு இருக்க மாட்டோம். ஆனா ஒரு தடவை நீங்க இந்த உருளைக்கிழங்கு வச்சு மெதுவடை செஞ்சீங்கன்னா உங்களுக்கு டேஸ்ட் ரொம்பவே பிடிக்கும். உங்க குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் இந்த உருளைக்கிழங்கு மெதுவடை செஞ்சு கொடுக்கலாம் அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிட வாங்க.

ஈவினிங் ஸ்நாக்ஸ் மட்டும் இல்லாம சாதத்துக்கு சைடு டிஷ்ஷாவும் இந்த உருளைக்கிழங்கு மெதுவடைய நம்ம வச்சுக்கலாம் சாதத்தோட சேர்த்து சாப்பிடும்போது டேஸ்ட் சூப்பரா இருக்கும். குறிப்பா புளிக்குழம்பு கார குழம்பு இது கூட எல்லாம் வைத்து சாப்பிடும்போது டேஸ்ட் செம்ம அட்டகாசமா இருக்கும். இப்ப வாங்க இந்த அட்டகாசமான உருளைக்கிழங்கு மெதுவடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
5 from 1 vote

உருளைக்கிழங்குல மெது வடை | Potato Methu Vada Recipe In Tamil

உருளைக்கிழங்கு வச்சு நம்ம கண்டிப்பா மெதுவடை செஞ்சு இருக்க மாட்டோம். ஆனா ஒரு தடவை நீங்க இந்த உருளைக்கிழங்கு வச்சு மெதுவடை செஞ்சீங்கன்னா உங்களுக்கு டேஸ்ட் ரொம்பவே பிடிக்கும். உங்க குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் இந்த உருளைக்கிழங்கு மெதுவடை செஞ்சு கொடுக்கலாம் அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிட வாங்க. குறிப்பா புளிக்குழம்பு கார குழம்பு இது கூட எல்லாம் வைத்து சாப்பிடும்போது டேஸ்ட் செம்ம அட்டகாசமா இருக்கும். இப்ப வாங்க இந்த அட்டகாசமான உருளைக்கிழங்கு மெதுவடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time7 minutes
Course: Breakfast
Cuisine: tamil nadu
Keyword: Potato Medu Vadai
Yield: 4
Calories: 240kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கப் உளுந்தம் பருப்பு
  • 1 உருளைக்கிழங்கு
  • 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  • 10 சின்ன வெங்காயம்
  • 1 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் நறுக்கிய இஞ்சி
  • 1 கொத்து கருவேப்பிலை
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் உளுந்தை ஒரு மணி நேரம் நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும்.அரை மணி நேரம் கழித்து உளுந்தை நன்றாக அரைத்து ஃப்ரிட்ஜுக்குள் வைத்துக் கொள்ளவும்.
  •  
    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும். பிறகு உளுந்தை பிரிட்ஜில் இருந்து வேலைக்கு எடுத்து அதன் மஸ்த்து உருளைக்கிழங்கை சேர்த்து அரிசி மாவையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • பிறகு அதில் நறுக்கிய இஞ்சி கொத்தமல்லி இலைகள் நறுக்கிய கருவேப்பிலை நறுக்கிய பச்சை மிளகாய் அணியும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கலந்து வைத்துள்ள கலவையில் இருந்து சிறிதளவு எடுத்து நடுவில் ஓட்டை போட்டு என்னையும் சேர்த்து பொன்னிறமாக ஆகும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • சுட சுட எடுத்து பரிமாறினால் சுவையான அட்டகாசமான உருளைக்கிழங்கு மெதுவடை தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 240kcal | Carbohydrates: 36g | Protein: 5.5g | Cholesterol: 12mg | Potassium: 104mg | Calcium: 12mg