மாளை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான இந்த முள்ளங்கி ஃபிங்கர்ஸ் செய்து கொடுங்கள்!!

- Advertisement -

மாலை வேளையில் மேகமூட்டமாக இருக்கும் போது மொறு மொறுவென்றும், சூடாகவும் ஏதேனும் சாப்பிடத் தோன்றும். அப்போது உங்கள் வீட்டில் முள்ளங்கி இருந்தால், அதனைக் கொண்டு அற்புதமான ஓர் ஸ்நாக்ஸ் செய்து சுவையுங்கள். அது வேறொன்றும் இல்லை முள்ளங்கி ஃபிங்கர்ஸ். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும். பெரும்பாலும் நாம் முள்ளங்கி வைத்து குழம்பு, வறுவல் என செய்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் ஹோட்டல்களுக்கு சென்றால் பலரும் விருப்பப்பட்டு வாங்கி சாப்பிடுவது என்னவோ ஃபிங்கர்ஸ் தான். உள்ளே மென்மையாகவும் வெளியே மொறு மொறுவென்று இருக்கும் இந்த முள்ளங்கி ஃபிங்கர்ஸ் சாப்பிட யாருக்குத்தான் பிடிக்காது. அதுவும் குறிப்பாக குழந்தைகளுக்கு.

-விளம்பரம்-

அதனால் ஃபிங்கர்ஸ் சாப்பிட இனி நீங்கள் ஹோட்டல்களுக்கு செல்ல தேவையில்லை. பலரும் ஸ்நாக்ஸ் ஐட்டங்களை வெளியே வாங்கி தங்களது குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள். அப்படி செய்யாமல் வீட்டில் செய்து கொடுத்தால் அது மிகவும் ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கும். வீட்டிலேயே இந்த முள்ளங்கி ஃபிங்கர்ஸ் நம்ம செஞ்சு கொடுத்தா ரொம்பவே வித்தியாசமான முறையில் இருக்கும். இது வரைக்கும் நம்ம இந்த மாதிரி சாப்பிட்டே இருக்க மாட்டோம் அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் ரொம்ப டிஃபரண்டா சாப்பிடுவதற்கு நல்லா வெளியில் மொறு மொறுன்னு உள்ளுக்குள்ள சாப்டா அவ்வளவு அருமையான ருசியில் இருக்கும். ஸ்கூலுக்கு போயிட்டு வர்ற குழந்தைகளுக்கு இந்த முள்ளங்கி ஃபிங்கர்ஸ் செஞ்சு கொடுத்தா போதும் ரெண்டு நிமிஷத்தில் சாப்பிட்டு விடுவார்கள்.

- Advertisement -
Print
5 from 1 vote

முள்ளங்கி ஃபிங்கர்ஸ் | Radish Fingers Recipe In Tamil

மாலை வேளையில் மேகமூட்டமாக இருக்கும் போது மொறு மொறுவென்றும், சூடாகவும் ஏதேனும் சாப்பிடத் தோன்றும். அப்போது உங்கள் வீட்டில் முள்ளங்கி இருந்தால், அதனைக் கொண்டு அற்புதமான ஓர் ஸ்நாக்ஸ் செய்து சுவையுங்கள். அது வேறொன்றும் இல்லை முள்ளங்கி ஃபிங்கர்ஸ். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும். பெரும்பாலும் நாம் முள்ளங்கி வைத்து குழம்பு, வறுவல் என செய்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் ஹோட்டல்களுக்கு சென்றால் பலரும் விருப்பப்பட்டு வாங்கி சாப்பிடுவது என்னவோ ஃபிங்கர்ஸ் தான். உள்ளே மென்மையாகவும் வெளியே மொறு மொறுவென்று இருக்கும் இந்த முள்ளங்கி ஃபிங்கர்ஸ் சாப்பிட யாருக்குத்தான் பிடிக்காது.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: evening, snacks
Cuisine: Indian, TAMIL
Keyword: Radish Fingers
Yield: 4 People
Calories: 199kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1 வேகவைத்த உருளைக்கிழங்கு
  • 1 கேரட்
  • 2 முள்ளங்கி
  • 1 பெரிய வெங்காயம்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1/2 டீஸ்பூன் உப்பு
  • 2 பிரெட்
  • 1 துண்டு இஞ்சி
  • 1 பச்சை மிளகாய்

அரைக்க :

  • 3 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 2 வர மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1/2 கப் பிரெட் தூள்
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் முள்ளங்கி மற்றும் கேரட் இரண்டையும் நன்கு கழுவி விட்டு துருவி வைத்துக் கொள்ளவும். பகரெட்டை தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைக்கவும்.
  • பின் ஒரு பவுளில் வேகவைத்த உருளைக்கிழங்கு, கேரட், பெரிய வெங்காயம், கொத்தமல்லி இலை, கரம் மசாலா, உப்பு, ஊற வைத்த பிரெட், துருவிய முள்ளங்கி, பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  • பின் இந்த கலவையை சிறிதளவு எடுத்து உருண்டைகளாக உருட்டி நீளவாக்கில் தட்டி வைத்துக் கொள்ளவும்.
  • பின் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கடலை பருப்பு, வர மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • பின் இதனை ஒரு பவுளுக்கு மாற்றி அதனுடன் மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு, பிரட் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின் செய்து வைத்துள்ள ஃபிங்கர்ஸை அரைத்து வைத்துள்ள பவுடரில் பிரட்டி 5 நிமிடங்கள் பிரிட்ஜில் வைத்து விடவும்.
  • பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் செய்து வைத்துள்ள வெஜிடபிள் ஃபிங்கர்ஸை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் முள்ளங்கி ஃபிங்கர்ஸ் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 199kcal | Carbohydrates: 3.9g | Protein: 8g | Fat: 3.8g | Sodium: 39mg | Potassium: 164mg | Fiber: 9.1g | Vitamin A: 71IU | Vitamin C: 148mg | Calcium: 25mg | Iron: 13.4mg

இதனையும் படியுங்கள் : வித்தியாசமான முள்ளங்கி வறுவல் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் இனிமேல் இப்படிதான் அடிக்கடி செய்வீர்கள்!!!