ரவா கேசரி கல்யாண வீடுகளில் தரப்படும் கேசரி மிகவும் சுவையாக இருக்கும். நம்மளும் வீட்டில் செய்து பார்த்திருப்போம், அந்த ருசி வராது. அதற்கு காரணம் கல்யாண வீடுகளில் பக்குவமாக செய்யப்படும் பதம் தான்.
-விளம்பரம்-
இனி அந்த கவலை வேண்டாம் கல்யாண வீடுகளில் தரப்படும் அதே சுவையில் கேசரி நம் வீட்டிலேயே செய்து விடலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
ரவா கேசரி | Rava Kesari Recipe In Tamil
ரவா கேசரி கல்யாண வீடுகளில் தரப்படும் கேசரி மிகவும் சுவையாக இருக்கும். நம்மளும் வீட்டில் செய்து பார்த்திருப்போம், அந்த ருசி வராது. அதற்கு காரணம் கல்யாண வீடுகளில் பக்குவமாக செய்யப்படும் பதம் தான்.இனி அந்த கவலை வேண்டாம் கல்யாண வீடுகளில் தரப்படும் அதே சுவையில் கேசரி நம் வீட்டிலேயே செய்து விடலாம்.கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Yield: 4 people
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்:
- 1 கப் வறுத்த ரவை ரவை நைசாக இருக்க வேண்டும்
- ½ கப் நெய்
- ½ கப் எண்ணெய்
- 12 முந்திரி
- 1½ டேபிள் ஸ்பூன் திராட்சை
- 2 கப் சக்கரை
- கலர் சிறிதளவு
- ஏலக்காய் பொடி கொஞ்சம்
செய்முறை
செய்முறை:
- முதலில் ரவை எடுத்த கப் அளவிலே 3 கப் தண்ணீர் எடுத்து நன்கு கொதிக்க விடவும்.
- அடுத்து ஒரு கடாயில் நெய் பாதி அளவு, மற்றும் எண்ணெய் ½கப் சேர்த்து நெய், எண்ணெய் காய்ந்ததும் முந்திரி பருப்பு, திராட்சை சேர்த்து வறுத்து தனியாக வடித்து எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு அதே நெய்யில் ரவை சேர்த்து நன்கு வறுத்து எடுத்து வைத்த நெய்யில் பாதி நெய் சேர்த்து நன்கு வறுபட்டு வரவேண்டும்.
- பிறகு கொதிக்க வைத்த தண்ணீரை சேர்த்து நன்கு கட்டிகள் இல்லாமல் கலந்து விடவேண்டும்.
- இதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து 5 நிமிடம் கிளறாமல் மூடி விட்டு வேக விடவும்.
- பிறகு சர்க்கரை சேர்த்து குறைவான தீயில் வைத்து கிளறிவிடவும். கட்டிகள் இல்லாமல் கலந்த பிறகு கலர், ஏலக்காய் பொடி சேர்த்து மீதி நெய் சேர்த்து கலந்து விடவும்.
- பிறகு வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பை சேர்த்துக்கொள்ளவும்.
- 3 நிமிடம் அப்படியே மூடி வைத்து வேக விட்டு எடுக்கவும்.
- இப்பொழுது கல்யாண வீடு கேசரி தயார்.