பொதுவான நம்ம வீட்ல ஏதாவது விசேஷங்கள் வந்துச்சு அப்படின்னா நம்ம கேசரி செய்வோம் அப்படி இல்ல அப்படின்னா பால் பாயாசம் செய்வோம் ஆனா சட்டுனு ஏதாவது ஒரு ஸ்வீட் செய்யணும் அப்படின்னா வீட்ல ரவை இருந்தா அத வச்சு கேசரி செய்யாமல் ரவை பாயாசம் செஞ்சுடுங்க. சில சமயங்களில் பாயாசம் குடிக்கணும் போல இருக்கு ஆனால் வீட்ல ஜவ்வரிசி சேமியா எதுவுமே இருக்காது அந்த மாதிரி நேரத்துல ரவை இருந்தா சூப்பரான ரவை பாயாசம் செஞ்சிருக்க இதுக்கு பாலும் ரவையும் இருந்தாலே போதும் ஒரு சூப்பரான பாயாசம் நல்லா தண்ணியா குடிக்கிறதுக்கு ருசியா செஞ்சிடலாம்.
இல்லனா எப்பவுமே ஒரே மாதிரியா சேமியா பாயாசம் ஜவ்வரிசி பாயாசம் பருப்பு பாயாசம் அப்படின்னு செய்யாம சுவையான இந்த ரவை பாயாசம் செஞ்சு சாப்பிட்டு பாருங்க டேஸ்ட் ரொம்பவே சூப்பரா இருக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்துட்டாங்கனா கூட இந்த ரெசிபியை செஞ்சு கொடுக்கலாம் ஸ்கூல் விட்டு வர குழந்தைகளுக்கு ஏதாவது ஸ்னாக்ஸ் செஞ்சு கொடுக்கணும்னா கூட இந்த ரவை பாயாசத்தை ட்ரை பண்ணி பாருங்க. வீட்ல சாமி கும்பிடும் போது நெய்வேத்தியமா இந்த ரவை பாயாசத்தை வச்சு சாமி கும்பிடுங்க.
எப்பவுமே என்ன ரெசிபி செய்றதுன்னு குழப்பமா இருந்துச்சு அப்படின்னா இந்த மாதிரி சட்டுனு செய்யக்கூடிய ஏதாவது ஒரு ஸ்வீட் செஞ்சு சாப்பிடுங்க. ரவை வெற்றி இதுவரைக்கும் செஞ்சதே இல்ல எப்படி வரும் அப்படின்னு யோசிக்கவே ஒரு தடவை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் உங்க வீட்ல அடிக்கடி இந்த ரவை பாயாசம் ரெசிபி இருக்கும் அந்த அளவுக்கு இந்த ரவை பாயாசம் சூப்பரா இருக்கும்.இப்ப வாங்க எல்லா குழந்தைகளுக்கும் பெரியவங்களுக்கும் ரொம்ப ரொம்ப பிடிச்ச மாதிரியான ஸ்வீட் ரெசிபியான ரவை பாயாசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
ரவை பாயாசம் | Rava Payasam Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 50 கி ரவை
- 1/2 லி பால்
- 10 முந்திரி பருப்பு
- 1 டீஸ்பூன் குங்குமப் பூ
- 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
- 100 கி சர்க்கரை
- 2 டேபிள் ஸ்பூன் நெய்
செய்முறை
- ஒரு கடாயில் நெய் சேர்த்து முந்திரி பருப்பை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- அதே கடாயில் ரவையை சேர்த்து வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
- பிறகு அதே கடாயில் பால் சேர்த்து கொதிக்க வைத்து ரவையை சேர்த்து சர்க்கரையை சேர்த்து கிளறவும்.
- குங்குமப்பூ ஏலக்காய் தூள் சேர்த்து 10 நிமிடத்திற்கு பிறகு வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு சேர்த்து இறக்கினால் சுவையான ரவை பாயாசம் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : எப்பவும் ஒரே மாதிரியான பாயாசம் குடிச்சு போர் அடிச்சிருச்சா அப்போ ஆரோக்கியமான இந்த உளுந்து பாயாசம் ஒரு தடவை செஞ்சு பாருங்க!