நம்ம என்னதான் பார்த்து பார்த்து சரியான அளவுல சாதம் வடிச்சு வச்சாலும் எப்படியாவது சாதம் மீந்து தான் போகும். என்னதான் நம்ம அதுல தண்ணி ஊத்தி பழைய சாதமா வச்சாலும் இந்த மழைக்காலத்தில் பழைய சாதம் சாப்பிட்டா கண்டிப்பா நமக்கு ஜலதோஷம் வரும் அதனால சாப்பிட மாட்டோம் வீணாக தான் போகும். இல்லனா மீந்து போன சாதத்துல நம்ம லெமன் சாதம் கிண்டி வைப்போம் புளி சாதம் கிண்டி வைப்போம் இல்ல நா தாளிச்ச சாதம் கிண்டி வைப்போம்.
ஆனா இந்த சாதத்தை சில நேரத்துல நம்ம வீட்டுல சாப்பிடுவாங்க ஒரு சில நேரம் சாப்பிடாமையும் போவாங்க அப்போ நமக்கு ரொம்ப டென்ஷனா இருக்கும். அதனால இந்த மாதிரி டென்ஷன் இல்லாம மீந்து போன சாதத்தை வைத்து ஈஸியா ஒரு கட்லட் எப்படி செய்றதுன்னு தான் நம்ம இப்போ பாக்க போறோம். சிக்கன் கட்லெட் மட்டன் கட்லெட் மீன் கட்லெட் அப்படின்னு எக்கச்சக்கமான கட்லெட் நம்ம சாப்பிட்டு இருப்போம் ஆனால் மீந்து போன இந்த சாதத்தை வைத்து பண்ணக்கூடிய கட்லெட் நீங்க நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு அவ்வளவு ஒரு டேஸ்டா நமக்கு இருக்கும்.
இந்த சாதம் வீணா போச்சு அப்படின்னா நமக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கும் அந்த நேரத்துல நம்ம டக்குனு இந்த கட்டில் செஞ்சு கொடுத்துட்டோம் அப்படின்னா குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க நமக்கும் கஷ்டம் இல்லாம இருக்கும். சாதம் மீந்து போச்சு அப்படின்னா ஈவினிங் ஸ்நாக்ஸ் என்ன செய்றது அப்படின்னு நீங்க யோசிக்கவே வேண்டாம் டக்குனு அந்த சாதத்தை எடுத்து வச்சு ஒரு சுவையான கட்லெட் செஞ்சு கொடுத்து அதில் கொஞ்சம் டொமேட்டோ சாஸ் வச்சு கொடுத்துட்டா போதும் நமக்கு ஸ்னாக்ஸ் என்ன செய்றது அப்படின்னு யோசிக்கிற வேலையும் கூட மிச்சம் தான்.
நீந்து போன சாதத்தை வைத்து தான் இந்த கட்லெட் பண்ணனும் அப்படின்ற அவசியம் இல்ல நம்ம சூடா சாதம் வடிச்சு கூட கட்டில் சாப்பிடணும் போல இருந்தா அந்த சாதத்தை வைத்து செய்யலாம்.இந்த சூப்பரான ரைஸ் கட்லெட் எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.
ரைஸ் கட்லெட் | Rice Cutlet Recipe In Tamil
Equipment
- 1 பெரிய பவுள்
- 1 தோசை கல்
தேவையான பொருட்கள்
- 1 கப் சாதம்
- 2 டீஸ்பூன் சோள மாவு
- 1/2 வெங்காயம்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
- 1/2 டீஸ்பூன் தனியா தூள்
- 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள்
- 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
- 1/2 டீஸ்பூன் சாட் மசாலா
- 1 துண்டு இஞ்சி
- கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் சாதத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். கையில பிசைய முடியவில்லை என்றால் மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு பல்ஸ் கொடுத்து எடுத்துக் கொள்ளவும்.
- அதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் சோழ மாவு சீரகம் பெருங்காயம் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மிளகு தூள் கரம் மசாலா தேவையான அளவு உப்பு அனைத்தும் போட்டு பிசைந்து கொள்ளவும்.
- இப்பொழுது இஞ்சியை பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். கொத்தமல்லி இலைகளையும் தூவி நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு தோசைகல்லில் எண்ணெய் ஊற்றி கலந்து வைத்துள்ள மாவில் இருந்து சிறு சிறு உருண்டைகளாக எடுத்துகட்லட் போன்று தட்டி தோசை கல்லில் போட்டு இரண்டு பக்கமும் வேகவைத்து எடுத்தால் சுவையானரைஸ் கட்லட் தயார்.