வெங்காய பக்கோடா, கடலை மாவு பக்கோடா அப்படின்னா நிறைய பக்கோடா ரெசிப்பீஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா கீரைல பக்கோடா செஞ்சு சாப்பிட்டு இருக்கவே மாட்டாங்க அதுலயும் பாலக்கீரை வச்சு கண்டிப்பா பக்கோடா ட்ரை பார்த்திருக்கவே மாட்டீங்க. அந்த மாதிரி இதுவரைக்கும் கீரை வச்சு இந்த ரெசிபி ட்ரை பண்ணி பார்த்ததே இல்லன்னா ஒரு தடவை இந்த மாதிரி பாலக்கீரை வச்சு சூப்பரான பாலக் பக்கோடா ட்ரை பண்ணி பாருங்க. ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும் இந்த பாலக் பக்கோடா வித்தியாசமான ஒரு ரெசிபியாக இருக்கும். செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி. கடலைமாவு வீட்ல இருந்துச்சுனா சட்டுனு பத்து நிமிஷத்துல இந்த ரெசிபியை செய்து முடித்து விடலாம்.
டேஸ்டான இந்த ரெசிபியை கண்டிப்பா எல்லாரும் வீட்ல ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க. குழந்தைகள் வீட்டுக்கு வந்ததும் இந்த மாதிரி ஒரு ரெசிபியை கொடுத்து சாப்பிட வச்சுட்டு அதுக்கப்புறம் படிக்க வைக்கலாம். ஈவினிங் டீ காபி ஓட இந்த பாலக் பக்கோடா ஒரு சூப்பரான காம்பினேஷனா இருக்கும். எப்பவும் டீ, காபியோட ஒரே மாதிரி வடை சமோசா பஜ்ஜி அப்படின்னு சாப்பிடாம இந்த மாதிரி ஒரு சூப்பரான ரெசிபியை செஞ்சு சாப்பிட்டு பாருங்க. இந்த டேஸ்டான பாலக் பக்கோடா எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். பாலக்கீரை உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது உடம்புக்கு இரும்பு சத்தை கொடுக்க கூடியது.
பாலக் கீரை வச்சு கடையல் பாலக்கீரை தொக்கு பாலக்கீரை வச்சு பாலக் பன்னீர் ரெசிப்பிஸ் இந்த மாதிரி நிறைய செஞ்சு இருப்பீங்க. ஆனா இது ரொம்பவே வித்தியாசமான ஒரு ரெசிபியா இருக்கும். ஒரே ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கு அப்புறமா அடிக்கடி செய்வீங்க. பாலக் கீரை வாங்கி வீட்ல ஏதாவது ரெசிப்பி செய்யும் போது அந்த கீரையிலிருந்து ஒரு பத்து பதினஞ்சு இலைகளை மட்டும் எடுத்து வச்சு இந்த ரெசிபி செய்யலாம். இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்ட்டான பாலக்கீரை வச்சு செய்யக்கூடிய பாலக் பக்கோடா ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
பாலக் பக்கோடா | Palak Pakoda Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 வாணலி
தேவையான பொருட்கள்
- 20 பாலக்கீரை இலைகள்
- 1 கப் கடலைமாவு
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் மல்லி தூள்
- 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- 1/4 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1 கொத்து கறிவேப்பிலை
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் கடலை மாவு மிளகாய் தூள் கரம் மசாலா மல்லி தூள் உப்பு நறுக்கிய கருவேப்பிலை சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாக கலந்து கொள்ளவும்.
- பாலக்கீரை இலைகளை அதில் நன்றாக முக்கி எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான பாலக் பக்கோடா தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : சுவையான பன்னீர் பாலக் புலாவ் இப்படி செஞ்சி பாருங்க!