- Advertisement -
இது போன்று சர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. வீட்டில் சொந்தக்காரர்கள் வந்தால் எப்பொழுது செய்வதுபோல் பருப்பு பாயசம், பால் பாயசம் என்று செய்து கொடுக்காமல் இது போன்று சர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் செய்து கொடுத்து பாருங்க. மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
-விளம்பரம்-
சர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் | Sweeet Potato Payasam Recipe In Tamil
இது போன்று சர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. வீட்டில் சொந்தக்காரர்கள் வந்தால் எப்பொழுது செய்வதுபோல் பருப்பு பாயசம், பால் பாயசம் என்று செய்து கொடுக்காமல் இது போன்று சர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் செய்து கொடுத்து பாருங்க. மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க.எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Yield: 4 people
Equipment
- கடாய்
தேவையான பொருட்கள்
- 3 சர்க்கரைவள்ளி கிழங்கு
- ½ லிட்டர் பால்
- 2 ஸ்பூன் நெய்
- 2 ஸ்பூன் கஸ்டர்ட் பவுடர்
- சர்க்கரை தேவையான அளவு
- பாதம் பருப்பு நுணுகியது தேவையான அளவு
செய்முறை
- முதலில் சர்க்கரைவள்ளி கிழங்கை தோல் சீவி துருவிக்கொள்ளவும்.
- அடுத்து ஒரு வாணலில் நெய் ஊற்றி பால் சேர்த்து அத்துடன் ½ டம்பளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- பால் கொதித்ததும் கஸ்டர்ட் பௌடரை கொஞ்சம் தண்ணீரில் கட்டி இல்லாமல் கரைத்து பாலில் ஊற்றவும். பிறகு துருவிய சர்க்கரைவள்ளி கிழங்கை சேர்த்து நன்கு கிண்டி விடவும்.
- கிழங்கு வெந்ததும் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்கு கிண்டிவிடவும்.
- பால் நன்கு சுண்டி பாயசம் பதம் வந்ததும் பாதம் பருப்பை தூவி பரிமாறவும்.
- Advertisement -