எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்து போர் அடிக்கிறதா? இனி இதை செய்து பாருங்கள்! இட்லி தோசை என்றாலே அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒருவகையான உணவு. இவை காலை மற்றும் இரவு உணவுகளில் அதிகம் இடம் பெற்றிருக்கும். இத்தகைய இட்லி தோசைக்கு சட்னி தயார் செய்வது தான் மிக பெரிய வேலையாகும். இல்லத்தரசிகள் பலர் இட்லி தோசை என்றால் அதற்கு என்ன சட்னி தயார் செய்வது என்ற குழப்பமும், கேள்வியும் எழும். இனி இந்த கேள்விக்கும், குழப்பத்திற்கும் முற்று புள்ளி வையுங்கள். இந்திய வீடுகளில் சட்னி இல்லாமல் எந்த டிபனும் நிறைவடையாது.
தோசை, இட்லி, இடியாப்பம், அடை தோசை, ரொட்டி, பொங்கல், வடை என எந்த ரெசிபியாக இருந்தாலும் சட்னி எப்போதும் சுவையை அதிகரிக்கிறது. இதுவரை நீங்கள் எத்தனையோ சட்னிகளை செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் வாழைத்தண்டு கொண்டு சட்னி செய்து சாப்பிட்டுள்ளீர்களா? ஆம் வாழைத்தண்டு கொண்டு சட்னி செய்யலாம். இந்த வாழைத்தண்டு சட்னி இட்லி, தோசை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். அந்த வகையில் வாழைத்தண்டு வைத்து எப்படி சுவையான சட்னி செய்வது என்பதை பார்ப்போம்.
வாழைத்தண்டு சட்னி | Banana Stem Chutney Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1 கப் வாழைத்தண்டு
- 2 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
- 1 டீஸ்பூன் கடலை பருப்பு
- 10 சின்ன வெங்காயம்
- 1/4 கப் வேர்க்கடலை
- கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
- 5 காய்ந்த மிளகாய்
- 1/4 கப் தேங்காய் துருவல்
- 1 துண்டு புளி
- உப்பு தேவையான அளவு
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 துண்டு இஞ்சி
- எண்ணெய் தேவையான அளவு
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- 2 காய்ந்த மிளகாய்
செய்முறை
- முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து வறுத்து அதனுடன் வெங்காயம், வேர்க்கடலை, கறிவேப்பிலை, கொத்தமல்லி, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
- பின் வாழைத்தண்டு சேர்த்து நன்கு வதக்கி அதனுடன் இஞ்சி, மஞ்சள் தூள், புளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் இவை நன்கு ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான வாழைத்தண்டு சட்னி தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : இரவு டிபனுக்கு வாழைத்தண்டு ஊத்தாப்பம் இப்படியும் செய்யலாமே! எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க!!





