- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Snack
சில வீடுகளில் இனிப்பு வகைகளை வீடுகளில் தயாரிப்பார்கள் சிலர் கடைகளில் வாங்குவர்கள். அந்த வகையில் இன்று நாம் சுலபமாகவும் ருசியாகவும் வீட்டிலே ஒரு அற்புதமான ஸ்வீட் செய்யலாம், அதுவும் தேங்காய் கொண்டு இதை எளிதாக செய்து விடலாம். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்
இதையும் படியுங்கள் : சுவையான வேர்க்கடலை லட்டு செய்வது எப்படி ?
அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த சுவையான தேங்காய் லட்டு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள். இதனை படித்து பார்த்து நீங்களும் வீட்டில் செய்து பாருங்கள்.
Ingredients
Method
ஒரு வாணலியில் நெய் சேர்த்து, அதில் கொப்பரைத் தூள், ஏலக்காய் தூள், மற்றும் குங்குமப்பூ அல்லது கலர் பொடியை சேர்த்து ஒன்றாக வறுக்கவும்.
சில நொடிகள் மட்டுமே வறுத்தத் தேங்காய் மீது 1 கப் கண்டென்ஸ்டு மில்க் ஊற்றி தொடர்ச்சியாகக் கிண்டவும்.
தேங்காய் களவை ஒன்று சேர்ந்து வந்தவுடன் சூடு ஆறிய பிறகு, கைகளில் நெய் தடவி சிறிய உருண்டைகளாக உருட்டவும்.
உருட்டிய லட்டுவை கொப்பரைத் தூளில் உருட்டி எடுத்தால் சுவையான தேங்காய் லட்டு தயார்.






