மேஷம்
சில ஏழைகளுக்கு பணம் கொடுப்பதன் மூலம் இன்று நீங்கள் நிம்மதியாக இருப்பீர்கள். பயணம் பலன் தரும், ஆனால் செலவுமிக்கதாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் பணம் முதலீடு செய்ய முயற்சி செய்வீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். அக்கம்- பக்கம் வீட்டாரின் அன்பு தொல்லை குறையும். இன்று உங்கள் செயல்பாடுகளில் அலட்சியம் காட்ட வேண்டாம். குடும்பத்திற்காக நேரத்தை ஒதுக்க முடியாமல் போகலாம். பல நாட்களாக நிலுவையில் உள்ள வீட்டு வேலைகளை கட்டாயத்தின் பேரில் செய்ய வேண்டியிருக்கும்.
ரிஷபம்
உங்களின் மாலை நேரத்தை பிள்ளைகள் பிரகாசமாக்குவார்கள். இன்று நீங்கள் சோம்பேறித்தனமாக உணருவீர்கள். உங்கள் வேலையை தள்ளி போட நினைப்பீர்கள். உங்கள் மனம் சற்று சோகமாக இருக்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். பணியிடத்தில் நல்லா வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். முக்கியமான வேலைகளை முடிக்க மும்முரமாக செயல்படுவீர்கள்.
மிதுனம்
இன்று, நீங்கள் பணம் தொடர்பான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். உங்கள் உறவினரால் திருமண வாழ்வில் சிக்கல் ஏற்படலாம். இன்று உங்களின் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள். எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். இன்று சில விஷயங்களுக்காக குற்ற உணர்வுடன் இருப்பீர்கள். சில எதிர்பாராத பயணங்கள் ஏற்படலாம். உங்களின் செயல்பாடுகள் வெற்றியடைய திட்டமிட்டு செயல்படவும்.
கடகம்
இன்று நீண்ட தூர பயணத்தை தவிர்த்திடுங்கள். வேலையில் நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. உங்களின் இயல்பை கட்டுப்படுத்தவும். வேலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். வீட்டில் உங்களின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு கிடைக்காமல் போகலாம். நீங்கள் செய்த ஒரு நற் செயலால் இதுவரை உங்கள் எதிரியாய் இருந்தவர்கள் இன்று நட்புடன் பழகுவார்கள். தடைகளை தாண்டி பிறகு நல்ல விஷயங்களை பெறுவீர்கள். இன்று பணம் சேமிப்பதற்கு கடினமான விஷயமாக இருக்கும்.
சிம்மம்
உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக புதிய வருமான வாய்ப்புகள் அமையும். இன்று உங்களின் மனநிலை சோம்பேறித்தனமாக இருக்கும். உடல் நிலையில் கவனம் செலுத்தவும். இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கும். உங்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும். சமூகத்தில் மூத்த உறுப்பினர்களிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவையும், ஆலோசனையும் பெறுவீர்கள்.
கன்னி
உடன்பிறப்புகளின் உதவியுடன், இன்று உங்களுக்கு நிதி நன்மை கிடைக்கும். இன்று ஓய்வு கிடைக்கும். பொழுது போக்கு விஷயங்களில் ஈடுபடுவீர்கள். மற்றவர்களிடம் மென்மையாக நடந்து கொள்ள வேண்டிய நாள். குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடு திருப்தியாக இருக்கும். உங்கள் உடன் பிறப்புகளிடமிருந்து ஆலோசனை பெறுங்கள். இன்று நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய நாள். உங்கள் வேலைகளை இன்றே செய்து முடிக்கும் முயற்சி செய்யவும்.
துலாம்
இன்று உங்கள் அழகான தோற்றம் பிறருடைய கவனத்தை ஈர்க்கும். வணிகர்களுக்கு மகிழ்ச்சிகரமான, லாபம் கிடைக்கக்கூடிய நாள். எழுத்து மற்றும் கலைத்துறை தொடர்புடையவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் நிலை பிரச்சனை காரணமாக அசோகாரியமாக உணர்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் பிள்ளை காரணமாக பொருளாதார நன்மைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. நண்பர்கள் கூடும் இடங்களில் உங்களின் நகைச்சுவையான இயல்பு உங்களை பிரபலமாக்கும்.
விருச்சிகம்
உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்போது – சிரிப்பு நிறைந்த நாள். இன்று உங்கள் வேலைகளை கண்ணும் கருத்துமாக செய்து முடிக்கவும். யாரிடமும் உதவியை எதிர்பார்க்க வேண்டாம். இன்று உங்கள் வேலையில் கவனமாக செயல்படவும். இன்று தனிமையில் வாழ விரும்புவீர்கள். இன்று பல நாட்களுக்கு பிறகு உங்களின் எண்ணங்கள் நிறைவேறும். கடந்த காலங்களில் செய்த சுப காரியங்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். உங்களின் ஆளுமை பிரகாசிக்கும். இன்று குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்லவும்.
தனுசு
வெளிப்புற வேலைகள் இன்றைக்கு களைப்படைய செய்வதாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பொழுதுபோக்கு, சுற்றுலா போன்றவற்றிற்காக திட்டமிடுவீர்கள். அன்றாட பணிகளை முடிப்பீர்கள். வியாபாரத்தில் கிடைக்கும் லாபம் இன்று பல வியாபாரிகளின் முகத்தில் மகிழ்ச்சியைத் தரும். இன்று வீட்டில் சச்சரவுகளை தவிர்க்கவும். குடும்பத்திலும், சமூகத்திலும், குடும்பத்திலும் மரியாதை அதிகரிக்கும்.
மகரம்
இன்று நீங்கள் கடன் தொகையை திருப்பிச் செலுத்துவதில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். மாலை நேரத்தில் விருந்தினர்கள் உங்கள் வீட்டில் கூடி இனிமையான மற்றும் அற்புதமான நாளாக ஆக்குவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பழைய சிக்கல்கள் தீரும். போட்டித் தேர்வுக்கு செல்பவர்கள் அமைதியாக இருக்கவும். விடாமுயற்சியுடன் வேலை செய்ய நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். ஆன்மீகத்தில் ஆர்வம் குறையும். உங்கள் வேலையில் குறுகிய காலத்தில் அதிக லாபத்தை பெறுவீர்கள்.
கும்பம்
மற்றவர்களின் வெற்றிக்காக அவர்களைப் பாராட்டி அனுபவிக்கும் வாய்ப்பு உள்ளது. இன்று பிடிவாதமான மனநிலை இருக்கும். குடும்பத்துடன் மன கசப்பு ஏற்படும். இன்று பணம் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. சகோதரி வகையில் உதவிகள் கிடைக்கும். பழைய கடனை பற்றி யோசிப்பீர்கள். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். இன்று வீட்டில் வாக்குவாதங்கள் ஏற்படுவதற்கு உள்ளது. உங்கள் வேலையில் லாபத்தை அதிகமாக எதிர்பார்க்க வேண்டாம். உங்கள் எதிரிகளை வெற்றி பெற முடியும்.
மீனம்
வேலையில் அதிக கவனம் செலுத்தவும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பணியிடத்தில், சமூகத்தில் வேலையில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கிற்காக அதிகம் செலவு செய்வீர்கள். இன்று ஆரோக்கியம் மேம்படும். இன்று உங்கள் செயலில் எரிச்சல் மனநிலை இருக்கும். உங்கள் வேலையில் கவனமாக செயல்படுவும்.