பொதுவா உருளைக்கிழங்கு வச்சு அதுல பிரெஞ்ச் ப்ரைஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்போம் அது எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும் பொதுவா கடைகளில் வாங்கக்கூடிய இந்த பிரெஞ்ச் ப்ரைஸ் வீட்ல ட்ரை பண்ணி பார்த்தா கண்டிப்பா சூப்பரான ஒரு பிரெஞ்ச் ப்ரைஸ் கிடைக்கும். ஆனா இன்னைக்கு நம்ம உருளைக்கிழங்கு வச்சு பிரெஞ்ச் ப்ரைஸ் செய்றதுக்கு பதிலா வாழைக்காய் வச்சு வாழைக்காய் பிரைஸ் செய்ய போறோம். வீட்ல வாழைக்காய் இருந்துச்சுன்னா அது வாழைப்பழமா மாறுறதுக்கு முன்னாடி இந்த சூப்பரான ரெசிபியை செஞ்சு அசத்துங்க.
மாலை நேரத்தில் ஸ்கூல் முடிஞ்சு வர்றவங்க குழந்தைகளுக்கும் ஆபீஸ் முடிஞ்சு வர உங்களோட மனைவிகளுக்கும் கணவன்மார்களுக்கும் இந்த சூப்பரான ஒரு வாழைக்காய் ஃப்ரைஸ் செஞ்சு கொடுத்து அசத்துங்க. ஒரு தடவை மட்டும் இதை செஞ்சு பாத்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. இந்த வாழைக்காய் பிரைஸ் நம்ம அப்படியே ஸ்னாக்ஸ் ஆகும் சாப்பிடலாம் இல்லனா ரசம் சாதம் புளி சாதம் தயிர் சாதம், சாம்பார் சாதம் காரக்குழம்பு சாதம் தக்காளி சாதம் அப்படின்னு எல்லாத்துக்கும் சைடிஷ் ஆகவும் சாப்பிடலாம். டேஸ்ட் அவ்ளோ சூப்பரா இருக்கும் அடிச்சுக்கவே முடியாது.
இதுல நம்ம ரவை சேக்குறதால நல்ல மொறு மொறுப்பா சாப்பிடுவதற்கு வெளியில நல்லா கிரிஸ்பியா உள்ள சாப்டா இருக்கும். குழந்தைங்க கிட்ட வாழைக்காய் பிரைஸ் பிரெஞ்ச் ப்ரைஸ் மாதிரியே இருக்கும் அப்படின்னு மட்டும் சொல்லி பாருங்க ஒன்னு கூட மிச்சம் வைக்காம எல்லாத்தையும் சாப்பிட்டு முடிச்சிடுவாங்க. அவ்ளோ ருசியா இருக்கும் இந்த ரெசிபி. இந்த ரெசிபிய ஒரு தடவை மட்டும் வீட்ல கண்டிப்பா செஞ்சு பாருங்க. குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ் இல்லன்னா ஸ்னாக்ஸ் பாக்ஸ் இதை பேக் பண்ணி கொடுத்தீங்கன்னா கண்டிப்பா டிபன் பாக்ஸ் காலியாகி தான் வீட்டுக்கு வரும்.
மாலை நேரத்தில் டீ காபியோட இந்த வாழைக்காய் பிரைஸ் சாப்பிடும்போது சொர்க்கமா இருக்கும் அப்படின்னே சொல்லலாம் அந்த அளவுக்கு ருசியா இருக்கும்.இதுல நம்ம நிறைய பொருட்கள் எல்லாம் சேர்க்கப்போறது இல்ல ரொம்ப ரொம்ப குறைவான பொருட்களை வச்சே இந்த சூப்பரான பிரைஸ் செஞ்சு முடிச்சிடலாம் இப்ப வாங்க குறைவான பொருட்களை வைத்து நிறைவான தரத்துல டேஸ்ட்ல ஒரு சூப்பரான வாழைக்காய் பிரைஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
வாழைக்காய் பிரைஸ் | Vazhakkai Fries Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 3 வாழைக்காய்
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு
- 1 டேபிள் ஸ்பூன் ரவை
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- வாழைக்காயை முதலில் நீளவாக்கில் நறுக்கி தண்ணீரில் சேர்த்து எடுத்துக் கொள்ளவும்.
- அதில் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து கலந்ததும் சோள மாவு மற்றும் ரவை சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து தயார் செய்து வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொறித்து எடுத்தால் சுவையான வாழைக்காய் ப்ரைஸ் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : செட்டிநாடு ஸ்டைல் வாழைக்காய் வறுவல் உங்க வீட்ல ஒரு தடவை செஞ்சு பாருங்க!