மதுரை  மட்டன் பெப்பர் ப்ரை

By: PREM KUMAR

மட்டன் - 1/2 KG மிளகுத்தூள் - 3 tsp இஞ்சி பூண்டு விழுது - 1 tsp பெரிய வெங்காயம் - 2 உருளைக்கிழங்கு - 3 எண்ணெய் - 3 tbsp உப்பு - தேவையான அளவு

தேவையானவை

Flight Path

முதலில் நாம் எடுத்து கொண்ட மூன்று உருளைக்கிழங்கையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.

செய்முறை: 1

Flight Path

பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து, பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்கவும்.

செய்முறை: 2

Flight Path

பின் இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, மிளகு தூள், இரண்டையும் சேர்த்து சிறிது நேரம் வதக்கி கொள்ளவும்.

செய்முறை: 3

Flight Path

அதன் பின் நாம் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் மட்டனை இதனுடன் சேர்த்து நன்றாகக் கிளறி விட்டு வேக வைக்கவும்.

செய்முறை: 4

Flight Path

பின் இதில் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீரைத் சேர்த்து மட்டன் நன்றாக வேக வைக்கவும்.

செய்முறை: 5

Flight Path

பின்பு  மட்டன் நன்கு வெந்தவுடன் கடாயை இறக்கி கொள்ளுங்கள் 

செய்முறை: 6

Flight Path

அவ்வளவு தான் சுவையான மட்டன் பெப்பர் ப்ரை தயாராகிவிட்டது இனிதே பறிமாறுங்கள்.

Flight Path