கார்த்திகை அப்படின்னு சொன்னாலே நமக்கு ஞாபகத்துக்கு வருவது முதலில் தீபம் தான். அடுத்தது ஞாபகத்துக்கு வருவது கடவுளுக்கு படைக்கப் போற நெய்வேதியம். அந்த வகையில கார்த்திகை தீபம் அன்று செய்யக்கூடிய கார்த்திகை தீபத்துக்கு என்றே உகந்த ஒரு சூப்பரான அப்பம் ரெசிபி தான் செய்யப் போறோம். இந்த அப்பம் ரெசிப்பி செய்வதற்கு ஒரு சிலர் மைதா மாவு சேர்ப்பாங்க ஒரு சிலர் கோதுமை மாவு சேர்ப்பாங்க. இந்த வகையில இப்ப நம்ம கோதுமை மாவும் வாழைப்பழமும் சேர்த்து அப்பம் செய்ய போறோம். இந்த அப்பம் செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி.
இனிப்பு அப்படின்னு சொன்னாலே குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் அதனால அவங்களுக்கு இந்த மாதிரி ஒரு அப்பம் ரெசிபி கார்த்திகை தீபம் அன்று செஞ்சு கொடுங்க. கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. மைதா மாவுல அப்பம் செஞ்சா மட்டும்தான் நல்லா இருக்கும் அப்படின்னு நினைக்க வேண்டாம் கோதுமை மாவுல செஞ்சாலும் அப்பம் சூப்பரா வரும். சாஃப்ட் ஆகவும் இருக்கும். கார்த்திகை தீபம் அன்னைக்கு வீட்டுல அப்பம் செஞ்சு கடவுளுக்கு வச்சு படச்சு வழிபட்டு விட்டு அதுக்கப்புறம் வீட்ல இருக்குற எல்லாரும் ஒண்ணா உக்காந்து சாப்பிட்டீங்கன்னா ஜாலியா இருக்கும்.
சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். இதுல நம்ம கருப்பு எள், ஏலக்காய் தூள் எல்லாம் சேர்க்கும் போது டேஸ்ட் அவ்ளோ சூப்பரா இருக்கும். பேக்கிங் சோடா சேர்க்கிறதால அப்பம் உப்பி வரும். இதுல நாட்டு சர்க்கரை சேர்க்கறதுனால ஆரோக்கியமானதுன்னு கூட சொல்லலாம். வாழைப்பழமும் சேர்த்து செஞ்சா இன்னும் அதிக டேஸ்டா இருக்கும். இந்த ரெசிபியை நீங்க எப்போ நினைச்சாலும் செய்ய முடியும் ரொம்ப ரொம்ப ஈஸியான ரெசிபி தான். இந்த சுவையான கோதுமை மாவு வாழைப்பழ அப்பம் எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.
கோதுமை வாழைப்பழ அப்பம் | Wheat Banana Appam Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் கோதுமை மாவு
- 1 கப் நாட்டு சர்க்கரை
- 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
- 1 டீஸ்பூன் கருப்பு எள்
- 1/2 டீஸ்பூன் உப்பு
- 2 வாழைப்பழம்
- 1/4 கப் தேங்காய் துருவல்
- 1/4 டீஸ்பூன் பேக்கிங் சோடா
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் வாழைப்பழத்தை மசித்து சேர்த்துக் கொள்ளவும்.
- அதனுடன் ஏலக்காய் தூள் கருப்பு எள் நாட்டு சர்க்கரை தேங்காய் துருவல் பேக்கிங் சோடா ஒரு சிட்டிகை உப்பு அனைத்தையும் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும்.
- அதனை தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான கோதுமை மாவு வாழைப்பழ அப்பம் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : வாழைப்பழம் வீட்டில் இருந்தால் போதும் சுவையான வாழைப்பழ போளி இப்படி செஞ்சி பாருங்கள்!