தோசை தென்னிந்தியாவின் மிகப் பழமையான உணவு வகைகளில் ஒன்றாகும். குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய உணவுப்பட்டியலில் முக்கிய இடம்பெற்றுள்ள இட்லியும் தோசையும் தான். அதில் பல வீடுகளில் குட்டீஸ்களின் விருப்பமாக உள்ளது தோசை தான். இவை மிகவும் பிரபலமான மற்றும் பலரால் விரும்பி உண்ணப்படும் காலை உணவு. இதை வெகு எளிதாக செய்துவிடலாம். இன்று நாம் ஒரு அட்டகாசமான மற்றும் அற்புதமான சுவையில் இருக்கும் ஒரு தோசை ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் வீட்டில் அடிக்கடி தோசை சுட்டு இருக்கிறோம்.
அதிகபட்சமான அளவு முட்டை தோசை மட்டும் தான் செய்திருப்போம். ஆனால் இன்று மிகவும் வேகமாகவும், எளிமையாகவும் செய்யக்கூடிய கோதுமை வெல்ல தோசை ரெசிபி பற்றி தான் பார்க்க போகிறோம். நீங்கள் எப்பொழுதும் போல் தோசை சுடுவதற்கு பதில் இது போன்று ஒரு இனிப்பு தோசையை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு தோசை சாப்பிட வேண்டிய இடத்தில் இரண்டு தோசை சாப்பிடுவார்கள் குறிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். இனிப்புகள் இல்லாமல் எந்த உணவையும் முழுமையானதாக கருத முடியாது.
தமிழ்நாட்டின் இன்பமான இனிப்பு வகைகள் நேர்த்தியான மற்றும் சத்தானவை. பெரும்பாலானவை குறைவான சர்க்கரையைப் பயன்படுத்தும் ஆரோக்கியமான தயாரிப்புகள். கோதுமை போன்றவை ஆரோக்கியமான புரதங்களை உள்ளடக்கியது. மாலை நேரத்தில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு செய்து கொடுக்க ஆரோக்கியமான டிபன் இந்த கோதுமை வெல்ல தோசை. அந்தவகையில் இந்த பதிவில் ஆரோக்கியமான மற்றும் இனிப்பான கோதுமை தோசை எப்படி செய்வதென்று பார்ப்போமா!
கோதுமை வெல்ல தோசை | Wheat Jaggery Dosa Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 தோசை கல்
தேவையான பொருட்கள்
- 1 கப் கோதுமை மாவு
- 50 கி வெல்லம்
- 1/4 கப் தேங்காய் துருவல்
- 1/2 டீஸ்பூன் உப்பு
- நெய் தேவையான அளவு
- 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
செய்முறை
- முதலில் ஒரு பவுளில் கோதுமை மாவு, உப்பு, தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து வெல்லம் மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு பாகு காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
- பின் வெல்ல பாகை மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கட்டிகள் இல்லாமல் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
- பின் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை தோசையாக ஊற்றி சுற்றி நெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான இனிப்பு கோதுமை தோசை தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : எப்போதும் ஒரே மாதிரியான தோசையை செய்யாமல் இதுபோல் ஆரோக்கியமான முறையில் சுரைக்காய் தோசை செய்து கொடுங்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்!!!