நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் குளிர்ச்சியாக சாப்பிட வேண்டும் என்று விரும்புவோம். சிலருக்கு புட்டிங் மிகவும் பிடிக்கும். அதிலும் அதில் சேர்க்கக் கூடிய கேரமல் சுவைக்காகவே அதை விரும்பி சாப்பிடுவார்கள். புட்டிங் சற்று விலை கூடுதலாக இருக்கும் என்பதால் என்னதான் பிடித்த உணவாக இருந்தாலும் அடிக்கடி சாப்பிட முடியாது. ஆனால் இனி அப்படி இல்லை. நீங்கள் நினைக்கும் போதெல்லாம் 15 நிமிடத்தில் உங்கள் கை பக்குவத்தில் செய்து சாப்பிடலாம்.
இதனையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் காபி புட்டிங் செய்வது எப்படி ?
பள்ளி முடித்து வரும் உங்கள் குட்டிஸ்களுக்கு இந்த கோதுமை ரவை புட்டிங்கை செய்து கொடுங்கள். அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும். வழக்கமாக செய்து கொடுக்கும் ஸ்னாக்ஸ் வகையில் இருந்து இது முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.
கோதுமை ரவா புட்டிங் | Wheat Rava Pudding Recipe in Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கரண்டி
- 1 குக்கர்
தேவையான பொருட்கள்
- 1/2 கப் கோதுமை
- 1 டீஸ்பூன் கஸ்டர்டு பவுடர்
- 2 ஏலக்காய்
- முந்திரி பருப்பு தேவையானஅளவு
- 1 டீஸ்பூன் நநெய்
- 4 டீஸ்பூன் சர்க்கரை
- 1 டம்ளர் பால்
செய்முறை
- முதலில் கோதுமை, ரவையை தண்ணீரில் சுத்தம் பண்ணி கொஞ்சம் ஊற வைத்துக் கொள்ளவும். பின் குக்கரில் 2கப் தண்ணீர்விட்டு வேக வைக்கவும்.
- பின் அதனுடன் பாலைச் சேர்த்து நன்கு கலந்து விடவும். சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
- ஏலக்காய், முந்திரிபருப்பு, 1 ஸ்பூன் கஸ்டர்டு பவுடரை பாலில் கரைத்து சேர்க்கவும்.
- விருப்பப்பட்டால் எல்லா நட்ஸ் வகைகளும் சேர்க்கலாம். நெய் ஒரு ஸ்பூன் சேர்த்து பதமாக கிளறி விடவும்.
- பின்னர் அதை கப்களில் ஊற்றி ப்ரிஜில் வைக்கவும். 2 மணி நேரம் கழித்து எடுத்து அதன் மேலே துருவிய சாக்லேட் தூவி சாப்பிடலாம். அவ்வளவு தான் சூப்பரான கோதுமை ரவை புட்டிங் ரெடி.