12 ஏலக்காய் இருந்தால் மட்டும் போதும் உங்களிடம் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்!

நாம் ஆன்மீக ரீதியாக செய்யும் பெரும்பாலான தாந்திரீக பரிகாரங்களில் ஏலக்காய் ஒரு முக்கிய பரிகார பொருளாக பயன்படுத்தப்படும். அதிலும் பணம் வசியம் செய்வது போன்ற பரிகாரங்களில் பெரும் அளவில் ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது. ஏனென்றால் ஏலக்காய் என்பது பணத்தை ஈர்க்கக்கூடிய ஒரு பொருளாக சாஸ்திரங

By ·

நாம் ஆன்மீக ரீதியாக செய்யும் பெரும்பாலான தாந்திரீக பரிகாரங்களில் ஏலக்காய் ஒரு முக்கிய பரிகார பொருளாக பயன்படுத்தப்படும். அதிலும் பணம் வசியம் செய்வது போன்ற பரிகாரங்களில் பெரும் அளவில் ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது. ஏனென்றால் ஏலக்காய் என்பது பணத்தை ஈர்க்கக்கூடிய ஒரு பொருளாக சாஸ்திரங்கள் கூறுகின்றது. இன்று நாமும் அந்த வகையில் நமக்கு இருக்கும் கூட அனைத்து விதமான பண பிரச்சனைகள் மற்றும் பணக்கஷ்டங்களை தீர்ப்பதற்கு ஆன்மீக ரீதியாக என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

பணம் தேடி வரும்

பலருக்கு ஏலக்காய் எப்படி பணத்தை ஈர்த்து கொடுக்கும் என்கிற சந்தேகம் இருக்கலாம். ஏலக்காய் நேரடியாக பணத்தை ஈர்த்து நமக்கு கொடுத்து விடாது ஏலக்காய் மகாலட்சுமி அம்சமாக விளங்கக்கூடிய ஒரு பொருள் இந்த ஏலக்காய் மகாலட்சுமி ஈர்க்கும் பின்பு மகாலட்சுமி இருக்கும் இடத்தில் என்றைக்குமே செல்வ செழிப்புக்கு குறை இருக்காது அதனாலேயே ஏலக்காய் இருக்கும் இடத்தில் பணம் தானாக தேடி வந்து சேரும் அந்த அளவிற்கு ஒரு தெய்வீக சக்தி கொண்ட பொருளாகவும் ஒரு நல்ல நறுமணம் தரக்கூடிய பொருளாகவும் இந்த ஏலக்காய் விளங்குகிறது.

பரிகாரம்

இப்படி இந்த ஏலக்காய் ஒரு சிறந்த நறுமண பொருளாகவும் மூலிகை பொருளாகவும் விளங்கிக் கொண்டிருக்கிறது இப்படி இந்த ஏலக்காயின் பயன்களை சொல்லிக்கொண்டே போகலாம் மேலும் ஏலக்காயிலிருந்து வரக்கூடிய நல்ல நறுமணம் ஒரு விதமான நேர்மறை சக்தியை கொண்டுள்ளது அதனால் ஏலக்காய் நறுமணம் உள்ள இடங்களில் நேர்மறை ஆற்றல் அதிகமாக இருக்கும். இதனால் எந்த விதமான எதிர்மறை ஆற்றல்களும் நம்மை நெருங்காது. அதனால் இன்று இந்த பரிகாரமும் செய்வதற்காக நீங்கள் ஒரு 12 ஏலக்காயை எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு பச்சை கற்பூரத்தை பொடியாக்கி சேர்க்கவும். பின் நீங்கள் பயன்படுத்தும் கர்ச்சீப் அளவிலான ஒரு மஞ்சள் துணியை எடுத்து அதில் இந்த ஏலக்காய் மற்றும் பச்சை கற்பூரத்தை சேர்த்து முடிந்து கொள்ளுங்கள். இந்த முடிஞ்சை உங்கள் வீட்டின் நிலை வாசலில் கட்டி தொங்க விடுங்கள்.

நேர்மறை ஆற்றல்

இப்படி உங்கள் வீட்டில் நிலை வாசலில் இந்த மஞ்சள் முடிச்சை கட்டி விட்டாலே போதும் எந்த விதமான எதிர்மறை சக்திகளும், துரதிஷ்டங்களும் உங்களை நெருங்க விடாமல் செய்யும். நேர்மறையான ஆற்றல் மட்டும் உங்களை சுற்றி இருக்கும். நீங்கள் வியாபாரம் தொழில் செய்யும் இடங்களில் இருக்கும் பணப்பெட்டி அதைப்போல் நீங்கள் உங்களுடனே வைத்திருக்கும் மணி பர்ஸ் போன்ற பொருட்களில் எல்லாம் ஒன்று இரண்டு ஏலக்காய் போட்டு வைக்கலாம் இதனால் உங்களிடம் பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும் பண வரவும் அதிகரிக்கும்.

கைராசிகாரர்கள்

சில பெரிய முதலாளிகள் எல்லாம் அடிக்கடி ஏலக்காய் மற்றும் சிறிது கற்கண்டு வாயில் போட்டு மென்று கொண்டே இருப்பார்கள் ஏனென்றால் உங்களிடம் இருக்கும் தரித்திரம் எல்லாம் நீங்கி நீங்கள் கைராசிக்காரர்களாக மாறிவிடுவார்கள். பணமும் உங்களிடம் வசியமாகும் அதனால் ஏலக்காய் இருக்கும் இடத்தில் கைராசி, முகராசி, வசியம், வெற்றி என அனைத்தும் தானகவே தேடி வந்து குவியும். ஏன் நீங்கள் பீரோவில் பணம் வைக்கும் இடத்தில் சிறிது ஏலக்காய் போட்டு வைத்தால் பணம் அந்த இடத்தில் குவிய தொடங்கும். அதே போல் உங்கள் வீட்டின் வரவேற்பு அறையில் எல்லோரும் பார்க்கும் வண்ணம் ஒரு கண்ணாடி பவுளில் ஏலக்காய் நிரப்பி வைக்கலாம் இதனால் கண் திருஷ்டி உங்களை நெருங்காமல் பார்த்துக் கொள்ளும்.

பணம் வீண் விரயமாகாது

அதை போல் உங்கள் வீட்டின் பூஜை அறையில் இருக்கும் பித்தளை செம்பு அல்லது செம்பு பாத்திரத்தில் நீங்கள் ஏலக்காயை நிரப்பி வைக்கும் போது உங்கள் வீட்டில் தெய்வ வசியம் உண்டாகும் இதனால் உங்கள் வீடு ஒரு சுபிக்சத்துடன் இருக்கும். அதை போல் ஏலக்காயை பொடியாக்கி அதனை ஒரு சிறிய பேப்பரில் மடித்து வைத்து நீங்கள் பணம் வைத்து பயண்படுத்தும் ஹேண்ட் பேக், மணி பர்ஸ் வீட்டில் இருக்கும் பணப்பெட்டி போன்ற இடங்களில் வைத்து பயன்படுத்தும் போது இதனால் உங்களிடமிருந்து வீண் விரயமாகும் பணத்தை கட்டுப்படுத்தி உங்களிடம் பணமானது சேர ஆரம்பிக்கும். நம்பிக்கையுடன் செய்து பாருங்கள் நல்ல பலனை உங்களுக்கு கிடைக்கும்.

Recipes AMP · Quick view
View full