வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை காண 12 ராசிக்காரர்களும் தானம் அளிக்க வேண்டிய பொருட்கள்!!

ஜோதிட சாஸ்திரங்களின் படி, ஒவ்வொரு பொருளும் நவகிரகங்களில் ஒவ்வொரு கிரகத்துடன் தொடர்புடையதாக சொல்லப்படுகிறது. நம்முடைய ராசிக்கு வளர்ச்சியை, வெற்றியை, வாழ்வில் உயர்ந்த நிலையை தரக் கூடிய பொருள் எது என்பதை தெரிந்து கொண்டு அவற்றை தானமாக கொடுப்பதால் நாம் அளவில்லாத பலன்களை பெற ம

By ·

ஜோதிட சாஸ்திரங்களின் படி, ஒவ்வொரு பொருளும் நவகிரகங்களில் ஒவ்வொரு கிரகத்துடன் தொடர்புடையதாக சொல்லப்படுகிறது. நம்முடைய ராசிக்கு வளர்ச்சியை, வெற்றியை, வாழ்வில் உயர்ந்த நிலையை தரக் கூடிய பொருள் எது என்பதை தெரிந்து கொண்டு அவற்றை தானமாக கொடுப்பதால் நாம் அளவில்லாத பலன்களை பெற முடியும்.

தர்மம் தலை காக்கும் என்பது சான்றோர்களின் வாக்கு. ஆகையால் நீங்கள் எந்த அளவிற்கு தானம் செய்கிறீர்களோ அதன் அளவிற்கு உங்கள் வாழ்வில் முன்னேற்றம் இருக்கும். ஜாதக ரீதியாக ஒரு ராசிக்காரர் எந்த வகையான தானம் செய்தால் அவரின் வாழ்க்கை எளிதில் முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும் என்பதனை இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் சிவன் கோவில்களுக்கு சென்று வரும்போது அங்கு வாசலில் உள்ள ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டும். உங்கள் வீட்டிற்கு வரக் கூடிய சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமம், பூ போன்ற மங்கல பொருட்கள் வாங்கிக் கொடுக்கலாம். இதனால் சுக்கிரன் பலம் பெற்று உங்களின் வாழ்க்கையில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். திருமணத்தில் உதவி தேவைபடுபவருக்கு உதவலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய்கிக்கிழமைகளில் சாம்பார் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் செல்வம் பெருகும். மேலும் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்த பொருட்களை தானம் செய்வதால் முன்னேற்றம் ஏற்படும். பச்சை காய்கறிகள் வாங்கி, ஆதரவற்ற குழந்தைகள் இருக்கும் ஆசிரமங்களுக்கு தானமாக அளிப்பது சிறந்தது. கோவில்களுக்கு காய்கறிகள் வாங்கி தானம் கொடுப்பதன் மூலம் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழும்.

மிதுனம்

மிதுன ராசிகாரர்கள் புதன்கிழமைகளில் பெருமாளை தரிசனம் செய்து வெண் பொங்கலை தானமாக கொடுங்கள். எல்லாவித செல்வமும் தேடி வரும். வெளியில் செல்லும் போது யாராவது சிலருக்கு தண்ணீர் பாட்டில் வாங்கிக் கொடுத்து, அவர்களின் தாகம் தீர்த்து உதவினால் மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கை சிறப்பாக அமையும். கல்வியை புரிய வைப்பது அல்லது ஆலோசனை கொடுப்பது போன்ற விஷயங்களில் ஈடுபடும் மிதுன ராசி நபர்களுக்கு அள்ள அள்ள குறையாத செல்வம் சேரும்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் பசுமாட்டுக்கு உணவு தானம் செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். இது குடும்பத்தில் வறுமையை விரட்டி செல்வத்தை சேர்க்க உதவும். வீட்டில் இருக்கும் உங்கள் அப்பாவிற்கு கால் பிடித்து விடுவது, செருப்பு வாங்கிக் கொடுப்பது ஆகியவற்றை செய்யுங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை காண முடியும். எளியவர்களுக்கு பால், தயிர் போன்ற பால் சார்ந்த பொருட்களை தானம் செய்து வந்தால் அதிர்ஷ்ட யோகங்களை பெறலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் ஏழை எளியோர்களுக்கு அடிக்கடி தயிர் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் உங்கள் மனதில் அமைதி ஏற்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையானதை கேட்டு வாங்கிக்கொடுங்கள். அது புண்ணியத்தை சேர்க்கும். உடல்நிலை சரியாதவருக்கு மருத்துவத்திற்கு உதவி செய்யலாம். நோய்வாய்பட்டவர்களுக்கு யாராக இருந்தாலும் அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் குருபகவானை தவறாமல் வழிபடவேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோதுமையால் ஆன இனிப்பு மற்றும் உணவு பொருட்களை தானம் செய்ய வேண்டும். மாணவர்களின் படிப்பு செல்வத்திற்கு உதவுங்கள் இது உங்கள் வாரிசுகளை காக்கும். திருமண வீடுகளில் கல்கண்டு சாதம் வைக்க கல்கண்டு வாங்கி கொடுக்கலாம். இதன் மூலம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். விவசாயிகளுக்கு பயிர் செய்ய உதவலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு விநாயக வழிபாடு கைகொடுக்கும். ஆதரவற்ற மாணவர்களுக்கு படிப்பு உதவித்தொகை தானமாக கொடுப்பதால் உங்கள் வாரிசுகளுக்கு நல்லது. வசதி இருப்பவர்கள் வெள்ளி தானம் செய்யலாம். இது சுக்கிரனை பலப்படுத்தும். தாகம் என்று வருபவருக்கு தாகம் தீர்க்கலாம். அல்லது தண்ணீர் எங்கு உள்ளது என்று வழி காட்டலாம். இதன் மூலம் வாழ்க்கையில் மாற்றத்தை காணலாம். ஏழை எளியவர்களுக்கு வழக்குகள் தொடர்பான விஷயங்களில் உதவி செய்யலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் தங்களால் இயன்ற அளவு மாற்றுத்திறனாளிகளுக்கு தானம் செய்ய வேண்டும். அம்மன் கோயிலிற்கு சென்று அங்குள்ள பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் தானம் செய்தால் பண வரவு அதிகரிக்கும். கோவிலில் அன்னதானம் கொடுத்து, மற்றவர்கள் உங்களை வாழ்த்தினாலே பெரிய அளவில் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற முடியும். கல்யாண வீடுகளுக்கு உணவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் உதவி செய்வதன் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெறலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் தவறாமல் முருகனை வழிபட வேண்டும். குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து பிறகு பக்தர்களுக்கும் தானம் செய்யலாம். வாரம் ஒரு முறை செவ்வாய் அல்லது வெள்ளியில் துர்க்கை அம்மனுக்கு மலர் தானம் செய்யலாம். முடியாதவர்களுக்கு மானத்தை காக்கும் ஆடை வாங்கித் தருவது மிகப் பெரிய தானமாக இருக்கும். இது வாழ்க்கையில் இரண்டு மடங்கு பலன்களை அளிக்கும். கல்வித் துறையில் இருப்பவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்ததை தானமாக கொடுக்க வேண்டும். பசுவிற்கு வாழைப்பழம், அகத்தி கீரை கொடுப்பதை வழக்கமாக வைத்து கொள்ள வேண்டும். இதனால் குடும்பத்தில் செல்வம் சேரும் அதோடு உங்களுக்கு நிம்மதியான வாழ்கை கிடைக்கும். ஹோட்டல்களில் சுத்தம் செய்யும் வேலை செய்பவர்களுக்கு உதவி செய்தால் சனி பகவான் மகிழ்ச்சி அடைந்து உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் கொடுப்பார்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாட்டை மறக்காமல் செய்ய வேண்டும். ஏழைகளுக்கு கதம்ப உணவை அடிக்கடி தானமாக கொடுக்க வேண்டும். கல்வியை பிரதிநித்துவம் செய்யும் பொருட்களான எழுதுபொருட்கள், புத்தகங்கள் போன்றவற்றை இவர்கள் தானம் செய்யலாம். மனைவி, குழந்தைகளுக்கு ஆறுதல் தருவது தான் உங்கள் ராசிக்கு முக்கியமாக கோடீஸ்வர யோகத்தை தரும். ஆன்மிக பயணம் செய்பவர்களுக்கு உதவி செய்தல், கோவிலில் மற்றவர்கள் வழிபாட்டிற்கு உதவுதல் ஆகியவற்றையும் செய்யலாம்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் பௌர்ணமி நாட்களில் சிவ தரிசனம் செய்வது நல்லது. ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவினால் புண்ணியம் அதிகரிக்கும். தானியங்கள், பழங்கள், இனிப்புகள் போன்ற உணவுப் பொருட்களை எளியோருக்கு தானம் செய்யலாம். மற்றவர்களுக்கு மரியாதை கொடுத்தாலே மீன ராசிக்கார்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். ஆசிரிய பெருமக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதும் சிறப்பான பலன்களை கொடுக்கும்.

இதனையும் படியுங்கள் : 12 ராசிக்காரர்களும் மாற்ற வேண்டிய சில குணம்!

Recipes AMP · Quick view
View full