Advertisement
ஆன்மிகம்

2023 சனி பெயர்ச்சியால் யாருக்கு பாதிப்பு ? யாருக்கு ஆதாயம் ? முழு ராசி பலன் உள்ளே!

Advertisement

இந்து புராணத்தில் படி நீதியின் கடவுளாக கருதப்படுபவர் சனி பகவான். இந்த சனி பகவான் பொதுவாக ஒரு ராசிக்காரர்களிடம் குறைந்தது இரண்டரை ஆண்டு காலம் இருந்துவிட்டு அதன் பின்பு தான் மற்றொரு ராசிக்கு மாறுவார். இந்நிலையில் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் இன்று ஜனவரி 17 இரவு 8.02 மணிக்கு மகர ராசியில் இருந்து சனி பகவான் விலகி கும்ப ராசிக்கு பிரவேசிக்கிறார். இருந்தாலும் அனைத்து கிரகங்களின் ராசி மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் சனி பகவானின் தாக்கம் இருக்கத்தான் செய்யும். அது திருமணம், காதல், வேலை, தொழில், ஆரோக்கியம், கல்வி குழந்தைகள் என பல அம்சங்களில் நமக்கு தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். இப்படி இன்று சனி பெயர்ச்சிக்கு பின்பு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன ஆதாயம் கிடைக்கப் போகிறது என்னென்ன தாக்கங்கள் ஏற்பட போகிறது என்பதை பற்றி நாம் இந்த ஆன்மீகம் குறித்து தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

sani

கடக ராசி

சனிப்பெயர்ச்சிக்கு பின் கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் கஷ்டமான மன அழுத்தத்தை சந்திக்கும் நிலை ஏற்படும், வேலை சம்பந்தப்பட்ட அழுத்தங்கள் அதிகரிக்கலாம். ஆனால் உங்களின் கடின உழைப்பு மற்றும் புத்திசாலித்தனத்தால் ஒவ்வொரு பிரச்சனையில் இருந்தும் நீங்கள் விடுபட்டு வந்துவீடுவீர்கள். உங்களின் உறவினர்களின் முழுமையான ஆதரவு உங்களுக்கு கிடைக்கும், மேலும் திடீரென்று பணம் கிடைப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

Advertisement

சிம்ம ராசி

சனி பெயர்ச்சி காரணமாக சிம்ம ராசிக்காரர்களுக்கு அவர்கள் செய்யும் வியாபாரத்தில் வெற்றிகள் மட்டும் கிட்டும். அதற்கு உங்கள் திறமை உங்களுக்கு பக்க பலமாக அமையும். நீங்கள் வேலை சம்பந்தமாக நீண்ட பயணம் மேற்கொள்வதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கவன குறைவாக இருப்பது அல்லது அதிக வேலைகளை செய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள் இல்லையெனில் உடல் நல பிரச்சனைகள், உடல் ஆரோக்கியத்திற்கு சிக்கல்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது.

விருச்சிகம் ராசி

சனிப்பெயர்ச்சிக்கு பின் விருச்சிகம் ராசிக்காரர்கள் குடும்பத்தை விட்டு வெளியே செல்லும் சூழ்நிலை ஏற்படலாம். இந்த நேரத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் அனைத்தும் தேவைகளையும் நீங்கள் பூர்த்தி செய்து சொந்தமாக வீடு கட்டுவதற்கு வங்கியில் கடன் வாங்கும் வாய்ப்புகளும் உள்ளது.

மேஷ ராசி

சனிப்பெயர்ச்சி காரணமாக மேஷ ராசிக்காரர்களின் வருமானம் அவர்களை எதிர்பாராத வகையில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதை போன்று நிலையான வருமானம் இல்லாமல் திண்டாடுபவர்களுக்கு நிலையான வருமானமும் இந்த ஆண்டு உங்களுக்கு கிடைக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக மனதில் இருக்கும் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான நேரமும் காலமும் கூடி வந்து விட்டது. அது மட்டும் இல்லாமல் திடீரென்று பணம் மற்றும் சகல ஐஸ்வர்யங்களும் சேரும்.

ரிஷப ராசி

சனி பெயர்ச்சி காரணமாக ரிஷப ராசிக்காரர்களுக்கு அவர்கள் நிறுவனங்களில் வேலை பார்ப்பவராக இருந்தாலும் அல்லது சொந்தமாக தொழில் பார்ப்பவராக இருந்தாலும் அவர்களுக்கு சனிப்பெயர்ச்சி காரணமாக மகத்தான வெற்றி கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு போன்றவை கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

மீனம் ராசி

சனிப்பெயர்ச்சிக்கு பின் மீன ராசிக்காரர்களுக்கு பண செலவுகள் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது, அது உங்களுக்கு மிகவும் நெருங்கியவர்களின் உடல் நலத்திற்காக அதிக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். நீங்கள் அயல் நாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தால் அந்திய செலவாணிகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள்

Advertisement
உள்ளது. நீங்கள் பயணிக்க உள்ள பல பயணங்கள் உங்கள் விருப்பத்திற்கு எதிராக இருந்து உங்களுக்கு பெரும் மன அழுத்தத்தை கொடுக்க வாய்ப்புகள் அதிகம். எனினும் உங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவுகள் கிடைக்கும் பட்சத்தில் அனைத்து அழுத்தங்களும் அடியோடு விலகி ஓடிவிடும்.
sani

கன்னி ராசி

சனிப்பெயர்ச்சிக்கு பின் கன்னி ராசிக்காரர்கள் உங்களுக்கு இருக்கும் கடனை திருப்பி செலுத்துவதில் கவனத்துடன் செயல்படுங்கள். சனி பகவானின் இந்த நிலை நீங்கள் பார்க்கும் வேலைக்கு மிகவும் உதவியாக இருக்கும். நீங்கள் பார்க்கும் வேலையில் அதிக நிபுணத்துவம் பெறுவீர்கள். மேலும் நீங்கள் வேலை பார்க்கும் இடங்களில் உங்களது நிலை மேலும் வலுபெறும்.

மகர ராசி
Advertisement

சனிப்பெயர்ச்சிக்கு பின் மகர ராசிக்காரர்கள் உங்களின் வருமான நிலை வலுப்பெற தொடங்கும். இதற்கு முன்பு கடந்த காலங்களில் நீங்கள் செய்த உழைப்புக்கு ஏற்ற பலன் இந்த சனி பெயர்ச்சியின் மூலமாக உங்களுக்கு திரும்ப கிடைக்கும். உங்களின் வங்கியில் இருக்கும் பணம் அதிகரிக்க தொடங்கும்.

துலாம் ராசி

சனிப்பெயர்ச்சிக்கு பின் துலாம் ராசிக்காரர்கள் நீங்கள் மாணவர்களாக இருக்கும் பட்சத்தில் படிப்பில் அதிகப்படியான சவால்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை வரும், ஆகையால் சரியான ஒரு கால அட்டவணை உருவாக்கி தொடர்ந்து படித்தால் நீங்கள் படிப்பில் நல்ல வெற்றியை பெற முடியும். துலாம் ராசிக்காரர்களில் திருமண வாழ்க்கைக்கு தயாராக இருப்பவர்களுக்கு இந்த நேரம் சரியானதாக இருக்கும்.

தனுசு ராசி

சனிப்பெயர்ச்சிக்கு பின் தனுசு ராசிக்காரர்கள் நீங்கள் நிறுவனங்களில் வேலை பார்ப்பவராக இருந்தால் உங்கள் உடன் வேலை பார்க்கும் சக ஊழியர்களின் மூல ஆதரவு கிடைக்கும். அவர்களால் நீங்கள் வேலை பார்க்கும் துறையிலே நீங்கள் ஒரு நல்ல நிலையை அடைய முடியும். உங்களின் தைரியமும் வலிமையும் மென்மேலும் அதிகரிக்கும், காதல் விவகாரங்களை பொறுத்தவரை உங்களுக்கு வெற்றி மட்டுமே கிட்டும்.

கும்பம் ராசி

சனிப்பெயர்ச்சிக்கு பின் கும்பம் ராசிக்காரர்கள் வேலை பார்க்கும் இடங்களில் உங்கள் நிலை மேலோங்கி இருக்கும். உங்கள் ஆளுமை அங்கு எடுபடும் அது மட்டும் இல்லாமல் அந்த ஆளுமைக்கு சொந்தக்காரராகவ நீங்கள் மாறிவிடுவீர்கள். உங்கள் உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

மிதுன ராசி

சனிப்பெயர்ச்சி காரணமாக மிதுன ராசிக்காரர்களுக்கு அவர்கள் வேலை பார்க்கும் இடங்களில் இடம் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. மேலும் சொந்தமாக நீங்கள் தொழில் செய்பவராக இருந்தாலும் நீங்கள் கடினமான முடிவுகளை எடுப்பதற்கு இது ஒரு நல்ல நேரமாக அமையும் மேலும் உங்கள் வருமானத்தின் அளவு அதிகரித்து உங்கள் கடன் சுமை குறையும்

Advertisement
Prem Kumar

Recent Posts

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

8 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

19 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 நாள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

1 நாள் ago