வாழ்க்கையில் முன்னேற பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்ய வேண்டியவை!!
இன்று வரை பலரும் சந்தித்து வருவது நிதி நெருக்கடி தான். பணம் இல்லாதவர்கள் அதை பெருக்குவதற்கான வாய்ப்புகளை தினம் தினம் தேடிக் கொண்டே இருக்கிறார்கள். என்ன தான் சம்பாதித்தாலும், பணம் கையில் தங்கவில்லை என புலம்புபவர்கள் தான் அதிகமானோர். வாழ்க்கையில் எல்லோரும் விருப்பமிருந்தாலும் இல்லா
இன்று வரை பலரும் சந்தித்து வருவது நிதி நெருக்கடி தான். பணம் இல்லாதவர்கள் அதை பெருக்குவதற்கான வாய்ப்புகளை தினம் தினம் தேடிக் கொண்டே இருக்கிறார்கள். என்ன தான் சம்பாதித்தாலும், பணம் கையில் தங்கவில்லை என புலம்புபவர்கள் தான் அதிகமானோர். வாழ்க்கையில் எல்லோரும் விருப்பமிருந்தாலும் இல்லாவிட்டாலும் பணத்தை நோக்கி ஓட வேண்டியிருக்கிறது. இதில் இருந்து நிரந்தரமாக விடுபட வேண்டும் என யாருக்கு தான் ஆசை இருக்காது. பணம் அத்தகைய பெரிய சக்தி வாய்ந்த ஒரு விஷயமாக மாறி விட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது. வறுமையில் இருந்து விடுபட்டு பணம் சேர, ஆரோக்கியம், மன அமைதி என அனைத்தும் கிடைக்க பிரம்ம முகூர்த்த நாளில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
பிரம்ம முகூர்த்த நேரம்
பொதுவாக பிரம்ம முகூர்த்தம் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் சக்தி கொண்டது. பிரம்ம முகூர்த்தத்தின் போது அண்ட சக்திகள் உச்சத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் பிரம்ம முகூர்த்தத்தின் போது நாம் செய்யும் தியானம், மந்திரங்கள் அல்லது பிரார்த்தனைகள் நமக்கு பலவிதமான நன்மைகளை அளித்திடும். பிரம்ம முகூர்த்தம் வழக்கமாக சூரிய உதயத்திற்கு சுமார் 1 மணி நேரம் 30 நிமிடங்களுக்கு முன்பு, தோராயமாக அதிகாலை 4.00 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரை தொடங்குகிறது. இந்த நேரம் பிரம்மாவிற்கு உரிய நேரம் என குறிப்பிடப்பட்டாலும் நினைத்த காரியங்களை மிக விரைவாக நிறைவேற்றி வைத்து, லட்சுமி கடாட்சத்தை பெருக செய்யும் நேரமாக சொல்லப்படுகிறது. பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து வழிபடுபவர்களுக்கு அனைத்து தெய்வங்களின் ஆசிகளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த நேரத்தில் எந்த 5 விஷயங்களை செய்தால் பண தட்டுப்பாடு ஏற்படாது என்பதை பார்க்கலாம்.
பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்ய வேண்டியவை
பிரம்ம முகூர்த்தம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த, உன்னதமான நேரம் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. இந்த நேரத்தில் வீட்டு வாசலில் சாணம் தெளித்து, அரிசி மாவினால் கோலம் போட்டு பின் குளிக்க வேண்டும். பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளிப்பது, பாலில் குளிப்பது சமமானதாகும். குளிக்கும் தண்ணீரில் சிறிது மஞ்சளையும் கலந்து குளிப்பதால், விஷ்ணு பகவான், பிரஹஸ்பதியின் அருள் விலகாமல் இருக்கும். இந்த நேரத்தில் குளிப்பதால் புத்துணர்ச்சி கிடைப்பதுடன், மனமும் அமைதி அடையும். விடிய காலை நேரத்தில் குளிக்க முடியாதவர்கள் பல் துலக்கி, முகம், கை, கால் கழுவி விட்டு பூஜை செய்யலாம்.
- பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து விட்டு, வீட்டில் விளக்கேற்ற வேண்டும். அதுமட்டுமல்லாமல் உங்கள் வீட்டில் துளசி செடி இருந்தால் துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றி, துளசி செடிக்கு முன்பாக ஒரு விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். இந்த நேரத்தில் விளக்கு ஏற்றுபவர்களுக்கு தேவர்களின் ஆசீர்வாதமும், தெய்வங்களின் அருளும் கிடைப்பதாக ஐதீகம் உள்ளது. பிரம்ம முகூர்த்த நேரத்தில், யாருடைய வீட்டில் விளக்கு எரிகிறதோ, அந்த வீட்டிற்குள் லட்சுமி தேவி நுழைந்து அக்குடும்பத்தினரை ஆசீர்வதித்து தற்போது வாழ்க்கையில் சந்தித்து கொண்டிருக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபட வைப்பார் என்று கூறப்படுகிறது.
பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கு ஏற்றி விட்டு உங்கள் இஷ்ட தெய்வத்தை மனதில் நினைத்து, அந்த தெய்வத்திற்கான மந்திரங்களை சொல்லி தியானத்தில் ஈடுபட வேண்டும். அதிகாலை நேரம் அமைதியாக இருப்பதால், மனம் எளிதில் அமைதி அடைவதால் இந்த நேரத்தில் நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறுவதற்கான வழிகள் பிறக்கும். அதுமட்டுமல்லாமல் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து தியானம் செய்வது உங்களுடைய உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பல விதங்களில் மேம்படுத்தும். நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும்.
பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து விட்டு, வழிபாடுகள், வழக்கமான பணிகளை முடித்ததும் விலங்குகள், பறவைகள், குறிப்பாக பசு, நாய், புறா, கிளி, எரும்பு போன்றவற்றிற்கு உணவு வழங்கினால் புண்ணியமும், அதிர்ஷ்டமும் பெருகும் என்றும் நம்பப்படுகிறது. இந்த நேரத்தில் நாம் விலங்குகளுக்கு உணவு அளிப்பதால் நம்முடைய வீடுகளில் அல்லது வாழ்க்கையில் ஏற்படும் தடைகள், துன்பங்கள் நீங்கி அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
பிரம்ம முகூர்த்த நேரத்தில் நம்முடைய இல்லத்தில் அமைதியான ஒரு இடத்தில் அல்லது வெளியில் தூய்மையான சூழலில் யோகா, தியானம் செய்யலாம். இந்த நேரத்தில் தியானம் மற்றும் ஜபம், யோகா உள்ளிட்ட செயல்கள் இந்த நேரத்தில் செய்தால் பல மடங்கு பலன் தரும் என வைதீக நூல்கள் கூறுகின்றன. இதனை நாம் தொடர்ந்து பின்பற்றி வந்தால் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அற்புதமான பலன்களை பெறலாம்.
இதனையும் படியுங்கள் : எதிரிகள் தொல்லை விலக, நினைத்த காரியங்கள் நடக்க கூற வேண்டிய வாராகி மந்திரம்!!