பணம் நிலையாக உங்களிடமே சேர வேண்டுமா ? வெறும் 7 நாட்கள் இதை மட்டும் செய்யுங்கள் போதுமா!

பலருக்கும் சம்பாதித்த பணம் கையில் நிலைக்கவில்லை ஓடிக்கொண்டே இருக்கிறது என்ற பிரச்சனை இருந்து கொண்டு தான் இருக்கிறது. என்னதான் வீட்டில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு சென்று பணம் சம்பாதித்தாலும் அவர்கள் வருமானத்தை சேர்க்க நினைத்தாலும் சேர்க்க முடியாமல் அந்த பணமும் கையில் புழக்கத்தி

By ·

பலருக்கும் சம்பாதித்த பணம் கையில் நிலைக்கவில்லை ஓடிக்கொண்டே இருக்கிறது என்ற பிரச்சனை இருந்து கொண்டு தான் இருக்கிறது. என்னதான் வீட்டில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு சென்று பணம் சம்பாதித்தாலும் அவர்கள் வருமானத்தை சேர்க்க நினைத்தாலும் சேர்க்க முடியாமல் அந்த பணமும் கையில் புழக்கத்திற்கு இல்லாமல் ஏதாவது ஒரு திடீர் செலவு வந்து கொண்டே தான் இருக்கும். இப்படிப்பட்ட நேரங்களில் நாம் முறையாக சில பரிகாரங்களை சரியாக செய்வதால் இந்த பிரச்சனைகளை சரி செய்ய முடியும் என சாஸ்திரங்கள் கூறுகிறது அதனால் பணம் நம் கையில் தாங்க என்ன செய்ய வேண்டும் என்பதனை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

நம் கையில் பணம் தங்குவதற்கு ஒரு சிறிய மூடியுடன் கூடிய செம்பு கிண்ணம் எடுத்துக் கொண்டு அதில் பச்சை பாசிப்பருப்பை நிரப்பி உங்கள் வீட்டில் அருகில் பயன்பாட்டில் இருக்கும் சுத்தமான நீர் ஒடையில் இந்த கிண்ணத்தை விட்டு விடுங்கள்.

மேலும் பணம் கையில் தங்குவதற்கு உங்கள் வலது கையில் வெள்ளியால் ஆன வளையம் அணிந்து கொள்ளலாம் அதனுடன் ஆஞ்சநேயர் வழிபாடு தினசரி செய்து வாருங்கள் சம்பாரிக்கும் பணம் கையில் தங்கும்

கோயில்களில் மடப்பள்ளிகள் இருக்கும் அல்லவா அங்கு சென்ற உப்பு, சர்க்கரை, கடலை பருப்பு, சுத்தமான நெய் போன்ற பொருட்களை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தானமாக கொடுத்து வாருங்கள். இப்படி செய்வதன் மூலம் உங்கள் கையில் பணம் நிலையாக தங்கும்.

சுத்தமான காய்ச்சாத பசும்பாலை ஆலமரத்துக்கு ஊற்றி வர வேண்டும் இதை ஏழு நாட்களுக்கு தொடர்ந்து உங்களால் எவ்வளவு பால் ஊற்ற முடியும் அந்த அளவிற்கு ஊற்றி வாருங்கள் இப்படி செய்வதன் மூலமாக பணம் உங்கள் கையில் நிலையாக இருக்கும்.

நீங்கள் தினசரி குளிக்கும்போது சிறிதளவு கெட்டியான தயிரை எடுத்து குளிக்கும் தண்ணீரில் கலந்து ஒரு ஏழு நாட்கள் மட்டும் குளித்து வாருங்கள் இப்படி செய்வதன் மூலமாகவும் உங்கள் சம்பாதிக்கும் பணம் உங்கள் கையில் நிலையாக தங்கும்.

Recipes AMP · Quick view
View full