கடனிலிருந்து மீள்வதற்கு கூற வேண்டிய மந்திரம்!

அனைவருடைய வாழ்க்கையிலும் மிகப்பெரிய பிரச்சனை என்றால் அது கடன் பிரச்சினை தான். ஒரு சில சமயங்களில் அவசர தேவைக்காக கடன் வாங்க கூடாது என்றால் நினைத்தால் கூட ஒரு சிலர் வாங்கி விடுவார்கள் ஆனால் அதற்கான வட்டியையும் அடைக்க முடியாமல் கடனையும் திருப்பிக் கொடுக்க முடியாமல் நிறைய பிரச்சனைகளை

By ·

அனைவருடைய வாழ்க்கையிலும் மிகப்பெரிய பிரச்சனை என்றால் அது கடன் பிரச்சினை தான். ஒரு சில சமயங்களில் அவசர தேவைக்காக கடன் வாங்க கூடாது என்றால் நினைத்தால் கூட ஒரு சிலர் வாங்கி விடுவார்கள் ஆனால் அதற்கான வட்டியையும் அடைக்க முடியாமல் கடனையும் திருப்பிக் கொடுக்க முடியாமல் நிறைய பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள். கடனை திருப்பி செலுத்த முடியாமல் இந்த சமுதாயத்தில் நிறைய பேர் கஷ்டத்தில் உள்ளார்கள். அந்த வகையில் கடனை திருப்பி செலுத்துவதற்கு நமக்கு தெய்வத்துடைய தேவைப்படும். அப்படி கடனை தீர்ப்பதற்கு கூற வேண்டிய மந்திரத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

கடன் பிரச்சனை

கடன் பிரச்சினைகள் தீர வேண்டும் என்று தெய்வத்தை முழுவதுமாக பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார்கள் ஆனால் என்னதான் நிறைய வழிபாடுகளும் பரிகாரங்களும் செய்தாலும் கூட கடன் பிரச்சினைகளிலிருந்து வெளியே வர முடியாத சூழ்நிலையில் மாட்டிக்கொள்வார்கள். அதற்கு நாம் மிகவும் சரியான பரிகாரத்தை பார்த்து செய்ய வேண்டும். நிலாக கடன் பிரச்சினையில் இருப்பவர்கள் ஒரு மந்திரத்தை கூறுவதன் மூலம் கடன் பிரச்சனை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். சிறிய தேவையாக இருந்தாலும் பெரிய தொகையாக இருந்தாலும் அந்த கடன் பிரச்சினைகள் முழுவதுமாக நீங்கிவிடும். கடன் சுமையிலிருந்து வெளிவருவதற்கு நிறைய பரிகாரங்களில் செய்தாலும் அது கிடைக்கவில்லை என்றால் இந்த பரிகாரத்தை முழுமனதோடு செய்து பாருங்கள்.

மந்திரத்தை உச்சரிக்க வேண்டிய முறை

இந்த மந்திரத்தை காலை எழுந்ததும் கூற வேண்டும் இல்லையென்றால் இரவு தூங்குவதற்கு முன்பாக கூற வேண்டும். காலையில் எழுந்த இந்த பரிகாரத்தை இந்த மந்திரத்தை நாம் உச்சரிக்க வேண்டுமென்றால் அதற்கு முன்னர் கை கால் முகத்தை கழுவிக்கொண்டு பல்துலக்கி விட்டு இந்த மந்திரத்தையும் கூறலாம். குளித்து முடித்த பிறகும் கூட இந்த மந்திரத்தை சொல்லலாம் ஆனால் காலையில் சொன்னால் மிகவும் நல்லது. அசைவம் சாப்பிட்ட பிறகு இந்த மந்திரத்தை கூறக்கூடாது

மந்திரம்

லலிதம் ஸ்ரீதரம்
லலிதம் பாஸ்கரம்
லலிதம் சுதர்சனம்

இந்த மந்திரத்தை 11 முறை கூறவேண்டும் கூறுவதற்கு முன்பாக ஒரு டம்ளரில் நிறைய தண்ணீர் எடுத்துக்கொண்டு இரண்டு கைகளிலும் வைத்து கிழக்கு நோக்கியவாறு அமர்ந்து இந்த மந்திரத்தை கூறுவது நல்லது. பிரபஞ்சத்தை முழுவதுமாக நினைத்துக் கொண்டு இந்த பரிகாரத்தை நாம் செய்ய வேண்டும். கைகளில் நிறை டம்ளர் தண்ணீரை வைத்துக்கொண்டு பிரபஞ்சத்திடம் நாம் கேட்கும் அனைத்து விஷயங்களும் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இதனை செய்வதன் மூலம் நிச்சியமாக உங்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கடன் பிரச்சனைகள் தீரும். எனவே முழு மனதோடு இதனை செய்து பாருங்கள்.

இதனையும் படியுங்கள் : கடன் பிரச்சினைகள் தீர பிரியாணி இலை பரிகாரம்!

Recipes AMP · Quick view
View full