அடகு வைத்த நகையை விரைவில் திருப்ப சொல்ல வேண்டிய மந்திரம்!!

இந்த காலகட்டத்தில் ஒரு கிராம் தங்கம் வாங்குவது என்பது மிகவும் கடினமான ஒன்று. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது அந்த சூழ்நிலையில் அவசர தேவைக்காக அடகு வைத்த தங்க நகைகளை நீங்க முடியாமல் ஒரு சிலர் மிகவும் வருத்தத்தில் இருப்பார்கள். எவ்வளவு தான் சம்பாதித்தால

By ·

இந்த காலகட்டத்தில் ஒரு கிராம் தங்கம் வாங்குவது என்பது மிகவும் கடினமான ஒன்று. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது அந்த சூழ்நிலையில் அவசர தேவைக்காக அடகு வைத்த தங்க நகைகளை நீங்க முடியாமல் ஒரு சிலர் மிகவும் வருத்தத்தில் இருப்பார்கள். எவ்வளவு தான் சம்பாதித்தாலும் ஏதாவது ஒரு பணத்தை வைக்காக தங்க நகைகளை அடகு வைப்பது மிகவும் சாதாரணமான ஒன்று. சம்பாதித்த நகையை அடகு வைப்பது மிகவும் துயரான ஒரு விஷயம். அந்த அடகு வைத்த நகையை விரைவில் திருப்புவதற்கு ஆன்மீகம் சார்ந்த இந்த விஷயத்தை செய்து பாருங்கள்.

அடகு வைத்த நகை

நகை வாங்கும் பொழுது நாம் எப்படி நல்ல நேரம் பார்த்து வாங்குகிறோமோ அதே போல் நகையை அடகு வைக்கும் பொழுதும் ஒரு சில விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். அவசரத்திற்காக நேரம் காலம் பார்க்காமல் நகையை அடமானம் வைத்து விட்டால் பிறகு அந்த நகையை திருப்புவது கடினமான ஒன்றாக மாறிவிடும். அதேபோல் ஒருவருடைய ஜாதகத்தின் படி அவர்களுடைய கைகளால் நகையை அடகு வைத்தால் அந்த நகையை திருப்ப முடியாது என்று சொல்லப்படுகிறது. எனவே என்னதான் அவசர தேவையாக இருந்தாலும் நேரம் காலம் பார்க்காமல் தங்க நகைகளை அடமானம் வைக்க கூடாது.

நகையைத் திருப்ப கையாள வேண்டிய வழிமுறைகள்

அடகு வைத்த நகையை திருப்புவதற்கு முன்பாக ஜாதகம் சார்ந்த விஷயங்களை பார்க்க முடியாவிட்டாலும் ஒரு சில விஷயங்களை நாம் பின்பற்ற வேண்டும். அருகில் இருக்கும் நகையை மொத்தமாக திருப்ப முடியாவிட்டாலும் ஏதாவது ஒரு தொகையை கட்டுவதற்கு ரேவதி நட்சத்திரம் வரும் நாள் அன்று ஏதாவது ஒரு நகைக்கு சிறிய தொகை கட்ட வேண்டும். இது நகையை விரைவில் திருப்புவதற்கு ஒரு நல்ல வழியாக கூறப்படுகிறது.

குளிகை நேரத்தில் நகை திருப்புவது

ஒவ்வொரு நாளும் குளிகை நேரம் ராகு காலம் எமகண்டம் நல்ல நேரம் என அனைத்தும் வரும். அதில் குளிகை நேரத்தில் அடகு வைத்த நகையில் ஒரு சிறிய குண்டுமணி தங்கத்தை திருப்ப முயற்சி செய்தால் அந்த முயற்சி வெற்றி பெறும் நகைகள் அனைத்தும் வீட்டிற்கு திரும்ப வரும். இதனோடு சேர்த்து ஒரு பதிகத்தை உச்சரிப்பதன் மூலம் நகையை விரைவில் மீட்டெடுக்கலாம்.

நகையை திருப்ப சொல்ல வேண்டிய தேவாரப் பதிகம்

மெய்யைமுற் றப்பொடிப் பூசியோர் நம்பி வேதம்நான் கும்விரித் தோதியோர் நம்பி கையிலோர் வெண்மழு ‌ ஏந்தியோர் நம்பி கண்ணு மூன்றுடை யாயொரு நம்பி செய்யநம் பிசிறு செஞ்சடை நம்பி திரிபுரந் தீயெழச் செற்றதோர் வில்லால் எய்தநம் பியென்னை ஆளுடை நம்பி எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே

மேற்கூறிய வழிமுறைகளுடன் சேர்த்து இந்த பதிகத்தையும் தினமும் சொல்லி வர நம்பிக்கையோடு செய்துவர நிச்சயமாக உங்களுடைய நகை விரைவில் வீட்டிற்கு வரும்.

இதனையும் படியுங்கள் : கடனிலிருந்து மீள்வதற்கு கூற வேண்டிய மந்திரம்!

Recipes AMP · Quick view
View full