பணத்தை அள்ளித் தரக்கூடிய கசகசா பரிகாரம்!!
ஒரு சிலர் எந்த வேலையை செய்ய ஆரம்பித்தாலும் வருமானம் அதிகரிக்கும்.முயற்சி செய்து பார்க்கலாம் என்று விளையாட்டாக ஆரம்பிக்கும் தொழில் கூட பல லட்ச ரூபாயை லாபமாக கொடுக்கும். பல லட்ச ரூபாயை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் எல்லாம் மிகவும் சீக்கிரத்திலேயே ஒரு சிலருக்கு அமைந்துவிடும். எதைத் தொட்டா
ஒரு சிலர் எந்த வேலையை செய்ய ஆரம்பித்தாலும் வருமானம் அதிகரிக்கும்.முயற்சி செய்து பார்க்கலாம் என்று விளையாட்டாக ஆரம்பிக்கும் தொழில் கூட பல லட்ச ரூபாயை லாபமாக கொடுக்கும். பல லட்ச ரூபாயை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் எல்லாம் மிகவும் சீக்கிரத்திலேயே ஒரு சிலருக்கு அமைந்துவிடும். எதைத் தொட்டாலும் அதிர்ஷ்ட காற்று அவர்கள் பக்கம் அடிக்க தொடங்கி விடும் இப்படி எதைத் தொட்டாலும் பணமாக மாறும்போது மனிதனுக்கு அதைவிட சந்தோஷம் வேறு எதுவும் இருக்க முடியாது இதே போல் உங்களுக்கும் பனமழை அதிகரிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு தாந்திரீக பரிகாரத்தை செய்ய வேண்டும். அதனை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
பணம் தரும் கசகசா
இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் வாசம் அதிகமாக நிறைந்த வசீகரத் தன்மை கொண்ட கசகசா. எல்லோர் வீட்டு சமையல் அறையிலும் கண்டிப்பாக இந்த பொருள் இருக்கும் அதை வைத்து தான் இன்று நாம் இந்த பரிகாரத்தை செய்யப் போகிறோம். கசகசாவை வைத்து செய்யக்கூடிய இந்த பரிகாரம் நிச்சயமாக பலனை கொடுக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் நிச்சயமாக கசகசாவை பயன்படுத்தி இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.
பரிகாரம் செய்ய வேண்டிய முறை
ஒரு மண் அகல் விளக்கு எடுத்துக்கொண்டு அதில் நல்லெண்ணெய் ஊற்றி 1/4 டீஸ்பூன் கசகசாவை கலந்து பஞ்ச திரி போட்டு விளக்கு ஏற்ற வேண்டும். இதனை பூஜை அறையில் தான் ஏற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. பூஜை அறைக்க வெளிப்பக்கம் எந்த இடத்தில் வேண்டுமானாலும் நீங்கள் இதனை ஏற்றலாம். தினமும் ஒரு மணி நேரம் உங்கள் வீட்டில் இந்த விளக்கை இருந்தால் போதும் நீங்கள் எந்த விஷயத்தில் முதலீடு செய்தாலும் அதில் நிச்சயமாக சக்ஸஸ் கிடைக்கும்.
பரிகாரம் தரும் பலன்கள்
வேலைக்கு செல்பவர்களாக இருந்தாலும் வேலைகள் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று நினைப்பவர்களாக இருந்தாலும் சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைப்பதற்கும் பணத்தை பல மடங்கு பெருக்குவதற்கும் இந்த கசகசா விளக்கை வீட்டில் ஏற்றலாம். இந்த விளக்கை நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர்ந்து ஏற்றி வந்தால் வீட்டில் செல்வம் மழை பொழியும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு வழி தெரியாமல் மிகவும் திணறி கொண்டிருந்தால் இந்த விளக்கை வீட்டில் ஏற்றி வைக்கலாம். ஒரு சில நாட்களிலேயே வீட்டில் இருக்கக் கூடிய அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு கிடைக்கும். தினமும் விளக்கு ஏற்றும் போது பழைய கசகசாவை துடைத்துவிட்டு புதிதாக எண்ணெய் மாற்றி கசகசாவை போட்டு விளக்கு ஏற்ற வேண்டும் திரியும் புதிதாக தான் போட வேண்டும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த விளக்கை ஏற்றி வைத்துவிட்டு குலதெய்வத்திடம் மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
இதனையும் படியுங்கள் : செலவான பணம் மீண்டும் நம்மிடமே வந்து சேர செய்ய வேண்டிய பரிகாரம்!!