தங்கம் சேர ஆனி மாதம் செய்ய வேண்டிய மந்திர வழிபாடு!!

குடும்பத்தில் பலவிதமான நன்மைகள் நடப்பதற்கும் பணம் அதிக அளவில் சேர்வதற்கும் பலவிதமான பரிகாரங்களையும் வழிபாடுகளையும் மேற்கொள்வோம். அந்த வகையில் தங்கம் நம்மை வந்து சேர்வதற்கும் ஆனி மாதத்தில் செய்ய வேண்டிய ஒரு மந்திர வழிபாடு உள்ளது. இந்த வழிபாட்டை முழு நம்பிக்கையோடு ஆனி மாதம் செய்யும

By ·

குடும்பத்தில் பலவிதமான நன்மைகள் நடப்பதற்கும் பணம் அதிக அளவில் சேர்வதற்கும் பலவிதமான பரிகாரங்களையும் வழிபாடுகளையும் மேற்கொள்வோம். அந்த வகையில் தங்கம் நம்மை வந்து சேர்வதற்கும் ஆனி மாதத்தில் செய்ய வேண்டிய ஒரு மந்திர வழிபாடு உள்ளது. இந்த வழிபாட்டை முழு நம்பிக்கையோடு ஆனி மாதம் செய்யும் போது ஏதாவது ஒரு ரூபத்தில் தங்கம் வீடு தேடி வரும். அப்படிப்பட்ட ஒரு வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தங்க நகைகள்

வீட்டில் ஏதாவது விசேஷம் நடக்கப்போகிறது என்றால் நமக்கு தங்கம் வாங்க வேண்டும் என்ற நினைவு தான் அதிகமாக இருக்கும். தங்கத்தை வாங்குவதற்கு பணம் மட்டும் இருந்தால் போதாது இறைவனுடைய அருளும் முழுமையாக வேண்டும். அப்படி தங்கம் வாங்குவதற்கு மட்டுமில்லாமல் அடமானத்தில் இருக்கக்கூடிய தங்கத்தை திருப்புவதற்கும் ஆனி மாதத்தில் சொல்ல வேண்டிய ஒரு மந்திரம் உள்ளது. அந்த மந்திரத்தை ஆனி மாதம் முழுவதும் முழு மனதோடு நம்பிக்கையோடு கூறி வந்தால் அந்த மந்திரத்தினுடைய பலனால் நாம் நினைத்தது எல்லாம் நடக்கும். நாம் நினைத்தது போல் தங்கம் வீடு வந்து சேரும் இந்த மந்திரத்தை காலை குளித்து முடித்த பிறகு நம்முடைய வீட்டின் வழக்கு திசைகள் வடக்கு பார்த்தவாறு நின்று கொண்டு கூற வேண்டும்.

மந்திரம்

“ஓம் ஸ்வர்ண குபேராய நமஹ” மந்திரத்தை கூறும் முறை

இந்த மந்திரத்தை நிறுத்தி நிதானமோடு குறைந்தது பத்து நிமிடம் கூற வேண்டும். தங்கம் நம்மிடம் வந்து கொண்டே இருப்பதைப் போல கற்பனை செய்து கொண்டே இந்த மந்திரத்தை கூற வேண்டும். இந்த மந்திரத்தை சத்தமாக உச்சரிக்கக் கூடாது மனதிற்குள் உச்சரிக்க வேண்டும் மந்திரத்தை கூறி முடித்த பிறகு வானத்தை பார்த்தவாறு வாயால் காற்றை மூன்று முறை ஊதிவிட வேண்டும். நாம் கூறிய மந்திரம் சக்தி வாய்ந்ததாக மாறி பஞ்சபூதங்களில் ஒன்றான காற்றுடன் இணைவதன் மூலம் நம் வீட்டில் தங்கம் சேர்வதற்கான வாய்ப்புகளை பஞ்சபூதங்கள் உருவாக்கி தரும். நாம் எந்த செயலை செய்வதற்காக முயற்சி செய்தாலும் தெய்வத்துடைய அருள் இருந்தால் தான் அது நிறைவேறும். பஞ்சபூதங்களின் அருளையும் பரிபூரணமாக பெற்றால் நாம் நினைத்தது நினைத்தபடி நடந்திடும் எனவே இந்த மந்திரத்தை மேற்கூறியபடி கூறி அனைத்து நன்மைகளையும் பெற்றிடுங்கள்.

இதனையும் படியுங்கள் : நினைத்தது நடப்பதற்கு முருக பெருமான் சஷ்டி வழிபாடு!!

Recipes AMP · Quick view
View full