கடன் பிரச்சினைகள் தீர்ந்து, நாம் வேண்டியது கிடைக்க அபிஜித் நட்சத்திர வழிபாடு!!

இன்றைய கால கட்டத்தில் பலருக்கும் இருக்கும் பெரிய பிரச்சனை என்றால் அது பணப் பிரச்சனை தான். இது இல்லாதவர்கள் மிக மிக குறைவு தான். அதிலும் பணப் பற்றாக்குறை காரணமாக கடன் வாங்கி, அதை திருப்பி செலுத்த வருமானத்தில் பெரும்பாலான தொகையை செலவிட்டும் தவிப்பவர்கள் ஏராளம். பலருக்கு வாங்கிய கடன

By ·

இன்றைய கால கட்டத்தில் பலருக்கும் இருக்கும் பெரிய பிரச்சனை என்றால் அது பணப் பிரச்சனை தான். இது இல்லாதவர்கள் மிக மிக குறைவு தான். அதிலும் பணப் பற்றாக்குறை காரணமாக கடன் வாங்கி, அதை திருப்பி செலுத்த வருமானத்தில் பெரும்பாலான தொகையை செலவிட்டும் தவிப்பவர்கள் ஏராளம். பலருக்கு வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதிலேயே சம்பாதிக்கும் பணம் அனைத்தும் செல்கிறதே என்ற கவலையே பெரும் கவலையாக இருக்கும். பலரும் நம்முடைய கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று தான் முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள். முயற்சிகள் வெற்றி அடைவதற்கு பலவிதமான வழிபாட்டு முறைகளையும் பரிகாரங்களையும் செய்வார்கள். அந்த வகையில் தீர்க்க முடியாத கடன் பிரச்சனைகள் விரைவில் தீர சொல்ல வேண்டிய பெருமாளின் திருநாமத்தை பற்றி இந்த ஆன்மீகப் பதிவில் பார்ப்போம். 

அபிஜித் நட்சத்திரம் என்றால் என்ன?

அபிஜித் என்பது உத்திராடத்திற்கும் திருவோணத்திற்கும் இடையில் உள்ள ஒரு சூட்சும நட்சத்திரமாகும். இதற்கு “வெற்றி பெற்றவர்” என்று பொருள், மேலும் இது பல சுப காரியங்களுக்கு உகந்த நேரமாக கருதப்படுகிறது. இது 28-வது நட்சத்திரமாக கருதப்படுகிறது, மேலும் இது பொதுவாக ராகு காலம் மற்றும் எமகண்டம் போன்ற தோஷங்கள் இல்லாத நேரமாகும். மாதம் தோறும் ஒன்று அல்லது இரண்டு முறைகள் அபிஜித் நட்சத்திர நேரமானது வரும். எந்தவொரு காரியத்தைத் தொடங்கவும் இது ஒரு நல்ல நேரமாக கருதப்படுகிறது, மேலும் இந்த நேரத்தில் தொடங்கும் காரியங்கள் நல்ல முடிவுகளைத் தரும்.

அபிஜித் நட்சத்திர நேரத்தில் கூற வேண்டிய திருநாமம்

விசேஷமான அபிஜித் நட்சத்திர நேரத்தில், நாம் இறைவனிடம் என்ன பிரார்த்தனை வைத்தாலும் அது அப்படியே கூடிய விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை. பொதுவாக, நட்சத்திரங்கள் 27 என்பது வழக்கு. 28வது நட்சத்திரமாக இருக்கும் சக்தி வாய்ந்த அபிஜித் நட்சத்திரத்தை மனிதர்களிடம் கொடுத்தால், அவர்கள் அதை தவறாகப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதற்காக ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, இதனை தன்னுடைய மயில் இறகில் ஒளித்து வைத்ததாக நம்முடைய சாஸ்திரத்தில் உள்ள புராணக் கதைகள் சொல்கின்றன. அப்படிப்பட்ட இந்த அபிஜித் நட்சத்திர நேரத்தில் பெருமாளின் திருநாமங்களில் கடன் பிரச்சினை தீர ஒரு திருநாமம் இருக்கிறது. அந்த திருநாமத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

இந்த வழிபாட்டை செய்வதற்கு அபிஜித் நட்சத்திரம் வரக்கூடிய நேரத்தில் உங்கள் வலது உள்ளங்கையில் ஒரு ஜாதிக்காயை வைத்துக் கொள்ள வேண்டும். பின் “ஓம் புரந்தராய நம” என்ற திருநாமத்தை குறைந்தபட்சம் 27 முறையிலிருந்து 108 முறை வரை கூறி எனக்கு பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று பெருமாளிடம் வேண்டுதல் வைக்க வேண்டும். பின் நம்முடைய கையில் உள்ள ஜாதிக்காயை பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். இந்த வழிபாட்டை ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய அபிஜித் நட்சத்திர நேரத்தில் தொடர்ந்து செய்து வேண்டும். இந்த வழிபாட்டை நாம் தொடர்ச்சியாக செய்து வரும் பொழுது விரைவிலேயே கடன் பிரச்சினைகள் தீரும். நம்பிக்கையுடன் இந்த பெருமாள் வழிபாட்டை அபிஜித் நட்சத்திரம் நேரத்தில் செய்து பாருங்கள் நிச்சயம் உங்கள் வாழ்வில் வெற்றிகளும் மங்கல நிகழ்வுகளும் கைகூடும் என்பது ஐதீகம்.

இதனையும் படியுங்கள் : கடன் தீர்க்கும் முருகப்பெருமான் பரிகாரம்!!

Recipes AMP · Quick view
View full