ஐஸ்வர்யம் பெருக அஷ்ட லட்சுமி வழிபாடு!

வாழ்க்கையில் கஷ்டங்கள் இல்லாமல் வாழ வேண்டும் என்றால் மகாலட்சுமி தேவியாருடைய முழு அருளையும் பெறவேண்டும். மகாலட்சுமி தேவியாருடைய அருள் முழுவதுமாக கிடைத்தால் தான் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் தீர்ந்து செல்வ செழிப்போடு வாழ முடியும். மகாலட்சுமி தேவியார் உடைய அருளை பெறுவதற்கு பல வழிகள்

By ·

வாழ்க்கையில் கஷ்டங்கள் இல்லாமல் வாழ வேண்டும் என்றால் மகாலட்சுமி தேவியாருடைய முழு அருளையும் பெறவேண்டும். மகாலட்சுமி தேவியாருடைய அருள் முழுவதுமாக கிடைத்தால் தான் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் தீர்ந்து செல்வ செழிப்போடு வாழ முடியும். மகாலட்சுமி தேவியார் உடைய அருளை பெறுவதற்கு பல வழிகள் இருந்தாலும் மகாலட்சுமி தேவியார் கூறிய சில நாட்களில் வழிபாடு செய்யும்போது முழு அருளும் கிடைக்கும் அதனை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதவில் பார்க்கலாம்.

மகாலட்சுமிக்கு உகந்த நாள்

ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை தினம் வட இந்தியாவிலுள்ள அனைவருமே மகாலட்சுமிக்கு பூஜை செய்வார்கள். அதனால் தான் அவர்கள் செல்வ செழிப்போடு வாழ்கிறார்கள் என்று கூட கூறுகிறார்கள். ஐப்பசி மாதத்தில் அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரக்கூடிய அந்த 15 வளர்பிறை நாட்களுமே மகாலட்சுமி தேவியை வழிபடுவதற்கான சிறந்த நாட்களாக கருதப்படுகிறது. அந்த நாட்களில் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வதன் மூலம் விரைவில் நமக்கு செல்வ செழிப்பு கிடைக்கும்.

ஐப்பசி மாத அமாவாசை

ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை தினத்தில் மகாலட்சுமியை வழிபாடு செய்ய முடியவில்லை என்றால் ஐப்பசி பௌர்ணமி வருவதற்குள் ஏதாவது ஒரு வளர்பிறை நாளில் மகாலட்சுமி தயாரிக்க வழிபாடு செய்யலாம். 15 நாட்களுமே உகந்த தினம் என்றாலும் 15 நாட்கள் செய்ய முடியாதவர்கள் முடிந்த வரையில் அந்த நாட்களில் மகாலட்சுமி தாயாரை அஷ்டலட்சுமிகளாக நினைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

வழிபாடு செய்யும் முறை

வீட்டில் மகாலட்சுமி தாயார் உடைய சிலை இருந்தால் அதற்கு பால் அபிஷேகம் பன்னீர் தேன் அபிஷேகம் மஞ்சள் சந்தனம் பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்வது மிகவும் நல்லது. மகாலட்சுமிக்கு உகந்த நெல்லிக்காயில் நெல்லிக்காய் தீபம் ஏற்றி வைத்து கனகதாரா ஸ்தோத்திரத்தை படித்து மகாலட்சுமி தேவியாரை பூக்களால் அலங்கரித்து குங்குமத்தால் அர்ச்சனை செய்து துளசி இலைகளால் அர்ச்சனை செய்து சிறப்பாக வழிபாடு செய்யலாம்.

மகாலட்சுமி தேவியாருக்கு உரிய 8 மலர்கள்

மகாலட்சுமி தேவியாருக்கு உரிய எட்டு விதமான மலர்களால் அலங்காரம் செய்து எட்டு விதமான நெய்வேத்தியங்களை வைத்து எட்டு தீபங்கள் ஏற்றி வைத்து அஷ்டலட்சுமிகள் வழிபாடு செய்வது இன்னும் சிறப்பான பலன்களை கொடுக்கும். பச்சை நிற வளையலை மகாலட்சுமி தாயார் முன்வைத்து சந்தனம் மஞ்சள் போன்றவற்றால் அம்மனை குளிர வைத்து நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

பௌர்ணமி

ஐப்பசி மாதத்தில் பௌர்ணமி வருவதற்குள் ஏதாவது ஒரு நாளில் மகாலட்சுமி தயாரிக்க வழிபாடு செய்தால் நம்முடைய கஷ்டங்கள் தீரும். முழு மனதோடு மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபாடு செய்து வந்தால் வறுமைகள் நீங்கி கஷ்டங்கள் நீங்கி நல்ல வாழ்க்கை செல்வ செழிப்பான வாழ்க்கை மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

இதனையும் படியுங்கள் : வீடு முழுவதும் மகாலட்சுமி கடாட்சம் நிறைய ஏற்ற வேண்டிய தீபம்!

Recipes AMP · Quick view
View full