Advertisement
அசைவம்

காரசாரமான ருசியில் ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு இப்படி ஒரு தரம் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க!

Advertisement

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை அன்று பெரும்பாலான அசைவ பிரியர்கள் மட்டன் தான் அதிகமாக சமைப்பார்கள். அசைவப் பிரியர்களின் முதன்மையான தேர்வு மட்டன் குழம்பாகவே இருக்கும், குறிப்பாக வீக் எண்ட் நாட்களில் மட்டன் உணவு விரும்புகிற அசைவப் பிரியர்கள் அதிகம். அசைவம் என்றால் போதும் எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். அசைவத்தில் எல்லோருக்கும் எல்லாம் பிடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு சிலருக்கு கோழி, மீன், இறால், நண்டு போன்றவை பிடிக்கலாம். ஆனால் ஒரு சிலருக்கு ஆட்டுக்கறி பிடிக்காது, ஒரு சிலர் ஆட்டுக்கறி குழம்பை விரும்பி சாப்பிடுவர்கள்.

நாம் எப்பொழுது மட்டன் வாங்கினாலும் மட்டனை பயன்படுத்தி அதிக பட்சமாக மட்டன் குழம்பு அல்லது மட்டன் கிரேவி மட்டும் தான் பெரும்பாலும் சமைப்போம். அதுவும் ஒரே மாதிரியான மட்டன் குழம்பு வைக்கும் பொழுது மட்டன் பிரியர்களுக்கு அதை சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருக்கும். அப்படி விரும்பி சாப்பிடுபவர்களுக்கு உதவும் வகையில் இந்த தொகுப்பில் ஆந்திரா ஸ்டைல் ஆட்டுக்கறி குழம்பு மிகவும் சுவையாக எப்படி வைக்கலாம் என்று பார்க்கலாம். இந்த ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இது தவிர சப்பாத்திக்கும் அட்டகாசமாக இருக்கும். இதன் செய்முறை எளிது என்பதால் பேச்சுலர்களும் இதை செய்து சாப்பிடலாம்.

Advertisement

ஆந்திராவில் மட்டனை வைத்து வேறுமாதிரியான ரெசிபிகள் தயார் செய்வார்கள் அப்படி வைக்கப்படும் ஒவ்வொரு மட்டன் ரெசிப்பிகளுக்கும் ஒரு தனி வகையான ருசியும், மணமும் கொண்டும் இருக்கும். ஆந்திரா உணவுகள் அனைத்தும் நல்ல காரமாகவும், சுவையுடனும் இருக்கும். அதிலும் அசைவ உணவுகள் என்றால் சொல்லவே வேண்டாம். அவ்வளவு அருமையாகவும், காரமாகவும் இருக்கும். இந்த மட்டன் குழம்பு சாபிடுவதால் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் இரத்த சோகையை கட்டுப்படுத்தலாம். எனவே கர்ப்பிணிகள் மட்டனை சாப்பிட்டால், அதில் உள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு | Andhra mutton curry recipe in tamil

Print Recipe
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை அன்று பெரும்பாலான அசைவ பிரியர்கள் மட்டன் தான் அதிகமாக சமைப்பார்கள். அசைவப் பிரியர்களின் முதன்மையான தேர்வு மட்டன் குழம்பாகவே இருக்கும், குறிப்பாக வீக் எண்ட் நாட்களில் மட்டன் உணவு விரும்புகிற அசைவப் பிரியர்கள் அதிகம். அசைவம் என்றால் போதும் எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். அசைவத்தில் எல்லோருக்கும் எல்லாம் பிடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு சிலருக்கு கோழி, மீன், இறால், நண்டு போன்றவை பிடிக்கலாம்.
Advertisement
ஆனால் ஒரு சிலருக்கு ஆட்டுக்கறி பிடிக்காது, ஒரு சிலர் ஆட்டுக்கறி குழம்பை விரும்பி சாப்பிடுவர்கள். நாம் எப்பொழுது மட்டன் வாங்கினாலும் மட்டனை பயன்படுத்தி அதிக பட்சமாக மட்டன் குழம்பு அல்லது மட்டன் கிரேவி மட்டும் தான் பெரும்பாலும் சமைப்போம். அதுவும் ஒரே மாதிரியான மட்டன் குழம்பு வைக்கும் பொழுது மட்டன் பிரியர்களுக்கு அதை சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருக்கும். அப்படி விரும்பி சாப்பிடுபவர்களுக்கு உதவும் வகையில் இந்த தொகுப்பில் ஆந்திரா ஸ்டைல் ஆட்டுக்கறி குழம்பு மிகவும் சுவையாக எப்படி வைக்கலாம் என்று பார்க்கலாம்.
Course dinner, LUNCH
Cuisine andhra, Indian
Advertisement
Keyword andhra Mutton Curry
Prep Time 15 minutes
Cook Time 15 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 105

Equipment

  • 1 கடாய்
  • 1 குக்கர்
  • 1 பவுள்

Ingredients

  • 1/2 கி மட்டன்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 கப் சின்ன வெங்காயம்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1 தக்காளி
  • கொத்தமல்லி தழை சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

அரைக்க

  • 1 டீஸ்பூன் கசகசா
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 4 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் மல்லி
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 பட்டை கிராம்பு ஏலக்காய்

Instructions

  • முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவி குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 6 விசில் வரை விடவும்.
  • பின் குக்கரை அடுப்பில் இருந்து இறக்கி விசில் போனதும் குக்கரை திறந்து அதில் உள்ள நீரை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் கசகசா, சோம்பு, மிளகு, மல்லி, சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வறுத்து ஆறியதும் இதை மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • அதன்பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தைப் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  • பின் வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள் மற்றும் மிளகுத் தூளை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின்னர் தக்காளி மற்றும் மட்டனை சேர்த்து, நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்கி உப்பு, நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  • அதன்பிறகு நாம் வடிகட்டி வைத்துள்ள மட்டன் வேகவைத்த தண்ணீரை ஊற்றி மூடி போட்டு கொதிக்க விடவும்.
  • குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது அதில் மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லியை தூவி அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு தயார்.

Nutrition

Serving: 700g | Calories: 105kcal | Carbohydrates: 5.9g | Protein: 42.2g | Fat: 8.9g | Saturated Fat: 1.9g | Sodium: 152mg | Fiber: 1.2g | Vitamin A: 16IU | Vitamin C: 334mg | Calcium: 23mg | Iron: 60mg

Advertisement
Prem Kumar

Recent Posts

அட்சய திருதியை 2024 என்ன பொருள் வாங்கி வைத்து, எந்த முறையில் பூஜை செய்தால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் ?

இந்தியாவில் இந்துக்கள், ஜயினர்கள் ஆகிய மதத்தினரால் மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது அட்சய திருதியை திருநாள். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை…

1 மணி நேரம் ago

ரொம்பவே சிம்பிளான ஒரு வர மிளகாய் துவையல் எப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

வீட்டில் வேலை பார்த்து பார்த்து ரொம்ப சலிச்சு போனவங்க இட்லி தோசைக்கு பேச எந்த சட்னியும் அரைக்காமல் இந்த மாதிரி…

1 மணி நேரம் ago

ரோட்டுக்கடை ஸ்டைலில் சுவையான மற்றும் மொறு மொறுவென்ற இந்த நெத்திலி மீன் ஃப்ரை செய்து பாருங்கள் இனி இப்படித்தான் மீன் வறுவல் செய்வீர்கள்!!

ரோட்டு கடைக்கு சென்றால் அங்கு விற்கும் உணவு பொருட்களை பார்த்து பசித்து எடுத்து சாப்பிடுவது ஒரு வழக்கமாக வைத்திருப்போம்..! ரோட்டுக்கடை…

3 மணி நேரங்கள் ago

கருங்காலி மாலை அணிய வேண்டிய ராசிக்காரர்கள்

பொதுவாக ஆன்மீகத்தில் பலரால் நம்பப்பட்ட ஒரு சில விஷயங்கள் ஒரு சில காலகட்டத்தில் மிகவும் சுவாரசியமாக பேசப்படும். அதேபோல் ஆன்மிகத்தை…

3 மணி நேரங்கள் ago

முலாம்பழ சர்பத் இந்த வெயிலுக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு குடிச்சு பாருங்க!

முலாம்பழம் வச்சு சர்பத்தா அப்படின்னு யோசிக்கிறீங்களா! ஆமாங்க முலாம் பழம் வச்சு சூப்பரான இதுவரைக்கும் நீங்க சாப்பிடாத ஒரு சுவைல…

5 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் காளான் கொத்துக்கறி இப்படி செய்து கொடுத்து பாருங்க கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க!

வீட்ல விரதம் இருந்தாலோ புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடல அப்படின்னாலும் அந்த நேரங்கள்ல நம்ம காளான் சோயா காலிஃப்ளவர் இத…

6 மணி நேரங்கள் ago