குழந்தை பாக்கியம் கிடைக்க செய்ய வேண்டிய ஆஞ்சநேயர் வழிபாடு!!

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒவ்வொரு பிரச்சனைகள் இருக்கும் சரியான நேரத்தில் சரியான விஷயங்கள் ஒரு சிலருக்கு நடக்காமல் போகும். உதாரணமாக திருமணம் சரியான நேரத்தில் நடக்காமல் போகும் குழந்தை பாக்கியமும் ஒரு சிலருக்கு சரியான நேரத்தில் கிடைக்காமல் போகும். குழந்தை பாக்கியம் பெறுவதற்காக ஒ

By ·

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒவ்வொரு பிரச்சனைகள் இருக்கும் சரியான நேரத்தில் சரியான விஷயங்கள் ஒரு சிலருக்கு நடக்காமல் போகும். உதாரணமாக திருமணம் சரியான நேரத்தில் நடக்காமல் போகும் குழந்தை பாக்கியமும் ஒரு சிலருக்கு சரியான நேரத்தில் கிடைக்காமல் போகும். குழந்தை பாக்கியம் பெறுவதற்காக ஒரு சிலர் பலவகையான மருந்துகளை சாப்பிட்டு பலவகையான வேண்டுதல்களை வைத்து மனதார மிகவும் வருத்தத்திற்கு உள்ளாகி இருப்பார்கள். இன்றைய காலகட்டத்தில் மருத்துவ வசதிகளும் பல அதிகரித்துக் கொண்டே உள்ளது ஆனால் என்னதான் செய்தும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை என்றால் முறையான மருத்துவ சிகிச்சையோடு சேர்த்து ஆஞ்சநேயரை இந்த முறையில் வழிபட்டு வந்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது‌. அந்த வழிபாட்டு முறையை இந்த ஆன்மீகம் குறித்த பதவில் பார்க்கலாம்.

காரிய வெற்றி தரும் ஆஞ்சநேயர்

பலவிதமான தெய்வங்களை வழிபாடு செய்திருப்போம் ஆனால் காரிய தடை ஏற்பட்டால் முதலில் விநாயகரை தான் வழிபாடு செய்வோம் அதன் பிறகு ஆஞ்சநேயரை வழிபாடு செய்வோம். இந்த இரண்டு தெய்வங்களும் காரிய தடைகளை நீக்கி வெற்றிகளை தரக்கூடிய தெய்வங்கள் நவக்கிரகங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் ஆஞ்சநேயரும் விநாயகரும் தீர்த்து வைப்பார்கள். அதனால் ஆஞ்சநேயரை நாம் வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பலவிதமான கிரக தோஷங்கள் நீங்கும் வெற்றியும் சேர்ந்து வரும்.

ஆஞ்சநேயர் வழிபாடு

ஆஞ்சநேயரை வழிபாடு செய்வதற்கு பல வழிமுறைகள் இருந்தாலும் முக்கியமான வழிபாடு வடை மாலையில் சாற்றுவது தான்‌. வடைமாலை தயார் செய்யும் போது கருப்பு உளுந்தையும் பச்சரிசியையும் சேர்த்து அரைத்து வடை செய்ய வேண்டும். நம் கைப்பட செய்த வடையை எத்தனை வடை சாற்ற வேண்டுமோ அத்தனை வடையை செய்து அந்த எண்ணிக்கையில் தயார் செய்து கொள்ள வேண்டும். வடை மாலையை தயார் செய்து கொண்டு சனிக்கிழமை தோறும் தொடர்ந்து 5 சனிக்கிழமைகள் அருகில் இருக்கக்கூடிய ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று மாலை சாற்ற வேண்டும். மேலும் இரண்டு தீபங்களை ஏற்றி வைத்து முழு மனதோடு வழிபாடு செய்ய வேண்டும். ஆஞ்சநேயருக்கு அவர்களுடைய பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும் ஆஞ்சநேயரை 21 முறை வலம் வர வேண்டும். பிறகு ராம நாமத்தை உச்சரித்து அரை மணி நேரம் ஆவது ஆஞ்சநேயர் முன்பாக அமர்ந்து வழிபாடு செய்ய வேண்டும். பிறகு அந்த வடை மாலை எடுத்து வடையை அனைவருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம். தம்பதியராக சென்று இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் போது விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ராகு தோஷத்தால் ஏற்பட்ட பிரச்சனைகளும் நீங்கும் இந்த வடைமாலை வழிபாட்டை ஆஞ்சநேயருக்கு முழு மனதோடு செய்து அதற்கான நல்ல பலனை பெற்றுக் கொள்ளுங்கள்.

இதனையும் படியுங்கள் : திருமண வரம் தரும் விநாயகர் வழிபாடு

Recipes AMP · Quick view
View full