மீளவே முடியாத கடன் தொல்லையிலிருந்து மீண்டுவர இந்த 1 தீபம் மட்டும் ஏற்றுங்கள் போதும்!

கடன் பிரச்சினை என்பது ஒருவரின் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு தள்ளிவிடுகிறது பிறவிப்பெருங்கடன் என்று முன்னோர்கள் சொல்வார்கள் நம்முடைய பிறவியே ஒரு கடன்தான். ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காரணத்திற்காக கடன் வாங்குகின்றனர். அந்த கடனை திரும்ப செலுத்த முடியாமல் திணறிப்போய் விடுகின்றனர்.

By ·

கடன் பிரச்சினை என்பது ஒருவரின் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு தள்ளிவிடுகிறது பிறவிப்பெருங்கடன் என்று முன்னோர்கள் சொல்வார்கள் நம்முடைய பிறவியே ஒரு கடன்தான். ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காரணத்திற்காக கடன் வாங்குகின்றனர்.

அந்த கடனை திரும்ப செலுத்த முடியாமல் திணறிப்போய் விடுகின்றனர். சம்பாதிக்கும் பணம் குடும்ப செலவிற்கு போதுமானதாக இல்லாத பொழுதும், தவிர்க்கமுடியாத சில நெருக்கடியான சூழல் வரும் பொழுதும் தான் கடன் வாங்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆனால் இந்தக் கடனை உடனே திருப்பி செலுத்த முடியாமல் நிறைய பிரச்சனைகளில் மாட்டிக் கொள்கிறார்கள். கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபட என்ன பரிகாரம் செய்யலாம் என்பதைப் பற்றி இந்த ஆன்மிகப் பதிவில் பார்க்கலாம்.

அரச மர‌ வழிபாடு

தெய்வ வடிவங்களாகக் கருதப்படும் பலவகைமரங்களுள் அரசமரம் முதன்மையானது. மரங்களின் அரசன் என்று போற்றப்படுவது, அரச மரமாகும். இதில் மும்மூர்த்திகளும் வாசம் செய்வதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. தேவலோகத்து மரம் என்றும் அரச மரத்தை வர்ணிப்பார்கள்.

அரச மர வழிபாடு என்பது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் வழிபாடாகும். அரச மரத்தடி விநாயகரை சுற்றுவது பல விதமான தோஷங்கள், பிரச்சனைகள் தீருவதற்கு சிறந்த பரிகாரமாக சொல்லப்படுகிறது. தெய்வ அம்சம் பொருந்திய மரங்களில் ஒன்றாக அரச மரம் கருதப்படுகிறது. அரச மரத்தடி விநாயகர் மற்றும் நாகரை வலம் வந்தால் காரியத் தடைகள் விலகும், தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

பரிகாரம் செய்யும் முறை

இந்த பரிகாரத்தை நாம் சனிக்கிழமைகளில் தான் செய்ய வேண்டும். இந்த பரிகாரம் செய்வதற்கு நான்கு முக விளக்கு, எண்ணெய் அல்லது நெய், திரி மற்றும் மஞ்சள் குங்குமம் மட்டும்தான் தேவை. இந்த விளக்குடன் நீங்கள் சனிக்கிழமைகளில் அரச மரத்தடிக்கு சென்று இந்த நான்முக விளக்குக்கு திரி போட்டு எண்ணெய் ஊற்றி மஞ்சள் குங்குமம் வைத்து அதனுடன் ஒரு பூவும் வைத்து விளக்கை ஏற்ற வேண்டும். பின் சிறிது நேரம் அங்கேயே அமர்ந்து எனக்கு இருக்கும் கடன் தொல்லைகளில் இருந்து நான் வெளிவர வேண்டும் என மனதார லட்சுமி தாயாரையும், பெருமாளையும் வேண்டி கொள்ள வேண்டும் இதை செய்தவுடன் நீங்கள் வீட்டிற்கு வந்துவிடலாம்.

இந்த பரிகாரத்தை நாம் தொடர்ந்து ஏழு வாரங்கள் செய்து வர வேண்டும். சிலருக்கு செய்து கொண்டிருக்கும் சில வாரங்களிலேயே நல்ல பலன் கிடைக்கும். சிலருக்கு செய்து முடித்த சில வாரங்களுக்குள் நல்ல பலன் கிடைக்கும். இத்தகைய கடன் பிரச்சனையிலிருந்து வெளிவருவதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் அல்லது எந்த கடனை அடைக்க நீங்கள் வேறு ஏதேனும் பணம் பெரும் முயற்சியில் ஈடுபட்டாலும் அதுவும் வெற்றி அடையும் என்று சொல்லப்படுகிறது.

Recipes AMP · Quick view
View full