புதன் பெயர்ச்சியால் கெடு பலன்களை சந்திக்க உள்ள ராசிகள்!!

நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் கல்வி, நரம்பு, படிப்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் கன்னி மற்றும் மிதுன ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்

By ·

நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் கல்வி, நரம்பு, படிப்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் கன்னி மற்றும் மிதுன ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த புதன் கிரக பெயர்ச்சி 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் குழப்பத்தை உண்டாக்கப் போகிறது. இதனால், வேலையில் நஷ்டத்தை சந்திக்க நேரிடலாம். புதன் பெயர்ச்சி காலத்தில், பாதிப்பிற்கு உள்ளாகும் ராசிகள், கவனத்துடன் செயல்பட்டு, புத பகவானை திருப்தி படுத்த பரிகாரங்களை மேற்கொள்வதன் மூலம் பல வித நெருக்கடிகளைத் தவிர்க்கலாம். எந்த ராசிகள் கெடு பலன்களை சந்திக்க உள்ளார்கள் என்றும் அவர்கள் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களின் ஜாதகத்தில் புதனின் நிலை பலவீனமாக இருக்கும், இதனால் நிதி வாழ்க்கையில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். வேலையில் உங்கள் பணிச்சுமை அதிகரிக்கலாம். அப்பாவின் உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள். புதிய முயற்சிகளில் விழிப்புணர்வு அவசியம். திடீர் முடிவுகள் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தொழில் ரீதியாக நீங்கள் பாதிக்கப்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும் வணிகம் சற்று மந்தமாக இருக்கும். தினமும் 19 முறை “ஓம் பௌமாயை நமஹ்” என்று ஜபிக்கவும்.

மிதுனம்

மிதுன ராயினருக்கு புதன் பெயர்ச்சியினால், செலவுகள் ஒன்றன் பின் ஒன்றாக ஏற்படலாம். கடன் வாங்கும் நிலை ஏற்படலாம். வியாபாரத்தில் போட்டியாளர்களிடமிருந்து கடுமையான போட்டியை சந்திக்க நேரிடும். உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள். பயணத்தில் எச்சாிக்கை தேவை. பணியிடத்தில் வாக்குவாதத்தினை தவிா்க்க வேண்டும். தடைபட்ட காரியங்கள் நடப்பதற்கு சற்று தாமதம் ஆகும். சரியான நேரத்தில் சரியான முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தருவதற்கு சற்று தாமதமாகும். தினமும் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வதால் கெடு பலன்கள் குறையும்.

கடகம்

கடக ராசிகளுக்கு புதனின் சஞ்சாரத்தால், பணிச்சுமை அதிகமாக இருக்கலாம். செலவுகள் உங்கள் வருமானத்தை விட அதிகமாக இருக்கலாம், இது உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். நண்பர்கள் எதிரிகளாகும் நேரம் சர்வ எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டமாகும். அலுவலகத்தில் பாலிடிக்ஸ் அதிகரிக்கும். சிலருக்கு நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். தம்பதியரிடையே சிறு சிறு பிரச்சினைகள் வந்து போகும். கடன் சிக்கல்களில் நீங்கள் மாற்றிக் கொள்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. “ஓம் சோமாய நமஹ்” என்று தினமும் 21 முறை பாராயணம் செய்வதம் மூலம் நிவாரணம் கிடைக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி காலத்தில் வருமானம் குறையும். வேலை நிமித்தமாக நீங்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கும், ஆனால் போதுமான பலன் கிடைக்காத பட்சத்தில் நீங்கள் அதிருப்தி அடையலாம். உங்கள் உடல் நலனில் காட்டுவது அவசியம். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச்சின்ன சண்டை சச்சரவுகள் வந்து போகும். அலுவலகத்தில் வேலை செய்யும் சிலருக்கு பணியில் கெட்ட பெயா் வரும் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். “ஓம் குரவே நமஹ” என்று தினமும் 21 முறை பாராயணம் செய்வது பலன் தரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியில் புதன் சஞ்சரிக்க உள்ள நிலையில்,வேலையில், தொழிலில், வியாபாரத்தில் சரிவை காணலாம். பணம் சம்பாதிப்பதில் சிக்கல்கள் வரலாம். நிதி நிலை பாதிக்கலாம். அலுவலக வேலை செய்பவர்கள் தங்கள் வேலையில் நெருக்குதல்களை சந்திக்கலாம். வீட்டில் தம்பதியர் இடையே பிரச்சினை வந்து போகும். சின்னச் சின்ன சண்டைகள் வரலாம் வீண் பிடிவாதம் பிடிக்காமல் விட்டுக்கொடுத்து போவது நல்லது. மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தினமும் 11 முறை “ஓம் ஹனுமதே நம” என்று பாராயணம் செய்யவும்.

இதனையும் படியுங்கள் : சிம்மத்தில் கேதுவால் பல நன்மைகளை பெறப்போகும் ராசிகள்!

Recipes AMP · Quick view
View full