திருப்பி கொடுக்க முடியாத கடனையும் திருப்பி கொடுக்க வேண்டுமா ? ஆறு தீபங்கள் மட்டும் போதும்!
ஒரு மனிதன் நிம்மதியாக வாழ்வதற்கு அந்தக் காலத்தில் உணவு, உடை, இருக்க ஒரு இடம் மட்டும் இருந்தால் போதும் என்று சந்தோஷமாக வாழ்ந்தார்கள். ஆனால் எல்லாவற்றையும் இயந்திரம் ஆக்கப்பட்ட இந்த காலத்தில் இவை மூன்றும் இருந்தால் மட்டும் நிம்மதி கிடைப்பதில்லை. நம் அன்றாட தேவைக்கு செலவாகும் பணம் ந
ஒரு மனிதன் நிம்மதியாக வாழ்வதற்கு அந்தக் காலத்தில் உணவு, உடை, இருக்க ஒரு இடம் மட்டும் இருந்தால் போதும் என்று சந்தோஷமாக வாழ்ந்தார்கள். ஆனால் எல்லாவற்றையும் இயந்திரம் ஆக்கப்பட்ட இந்த காலத்தில் இவை மூன்றும் இருந்தால் மட்டும் நிம்மதி கிடைப்பதில்லை. நம் அன்றாட தேவைக்கு செலவாகும் பணம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது தவிர ஒரு நாளும் குறைவதில்லை. அப்படி நம் அன்றாட தேவைக்கு வாங்கும் பணம் தான் கடனாக நம் பின்னேயே வருகிறது. எவ்வளவு தான் அந்த கடனை அடைக்க முற்பட்டாலும் முடிவதில்லை அதற்கு காரணம் கூட நம் சூழ்நிலை தான்.
நம் அனைவரும் கடன் வாங்கியாவது சொகுசு வாழ்க்கை வாழலாம் என்ன நினைத்து கடனை வாங்குவதில்லை. ஏதோ ஒரு அவசர தேவைக்காக கடனை வாங்கி அடக்க முடியாமல் துன்பப்பட்டு வருகிறோம். இப்படி அடக்க முடியாத கடனை கூட அடைத்து நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்கு ஒரு வழி உண்டு. அதுதான் காலபைரவருக்கு நாம் செய்யும் பரிகாரம். காலபைரவருக்கு நாம் ஒரு குறிப்பிட்ட பொருளை கொண்டு பரிகாரம் செய்தால் அடிக்க முடியாத கடனும் அடைந்து விடும் என சொல்கிறார்கள். அது என்ன பொருள் என்பது பற்றியும், காலபைரவரை எப்படி வணங்க வேண்டும் என்பதனைப் பற்றியும் இந்த ஆன்மீக பதிவில் பார்க்கலாம்.
சிவனின் அவதாரமாக விளங்கும் காலபைரவர் :
சிவனின் ருத்ர அவதாரமாக விளங்குபவர் தான் காலபைரவர். பொதுவாக காலபைரவனின் பரிகாரங்கள் அனைத்தும் தேய்பிறை அஷ்டமியில் நான் செய்யப்படுகின்றன. இப்படி நாமும் மாதாந்திர தினத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி அன்று அவரை வழிபட்டு பரிகாரத்தை செய்தால் நாம் வேண்டிக் கொண்டதனை விட கை மேல் பலன் தந்து நமக்கு அருள் புரிவார்.
பொதுவாக தேய்பிறையில் பரிகாரம் செய்தால் நம் கஷ்டங்கள் நீங்கிவிடும். தேய்பிறையில் பரிகாரம் செய்யும் பொழுது நம் கஷ்டங்களும் தேய்ந்து கொண்டே போய்விடும் என நம்பப்படுகிறது. ஆனால் நம் கடனை அடைப்பதற்கு காலபைரவருக்கு செய்யும் இந்த பரிகாரமானது நாள், கிழமை என பார்த்து செய்யத் தேவையில்லை. நமக்கு தோணும் மாத்திரத்தில் காலபைரவரை மனதார வழிபட்டு பரிகாரத்தை செய்யலாம்.
கடனை அடைக்கும் பரிகாரம் :
இந்த பரிகாரமானது காலபைரவர் மூல தெய்வமாக இருக்கும் கோவிலில் செய்தால் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பக்கத்தில் காலபைரவர் கோயில் இல்லாதவர் அருகில் இருக்கும் சிவன் ஆலயத்தில் இருக்கும் காலபைரவருக்கு இந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த பரிகாரம் செய்வதற்கு கால பைரவரின் முன் ஆறு நெய் தீபங்கள் ஏற்றி கொள்ளுங்கள் பின் அவரது காலடியில் ஒரு கைப்பிடி முந்திரிப் பருப்பினை வைத்து தன்னுடைய கடன் அடைய வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு காலபைரவரை ஆறு முறை சுற்றி வலம் வர வேண்டும். அவரை சுற்றி வரும் பொழுது கூட மனதில் உங்கள் வேண்டுதலை வேண்டிக் கொண்டே சுற்ற வேண்டும். பின் அவரது காலடியில் இருக்கும் முந்திரி பருப்பினை ஆலயத்தில் இருக்கும் நபர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும்.
இந்த பரிகாரத்தை நீங்கள் தொடர்ந்து செய்யும் பொழுது உங்கள் வீட்டில் ஏற்படும் மாற்றங்களை நீங்களே உங்கள் மனதார உணரலாம். உங்கள் கடன் அடைவதற்கான வழியையும் அதற்கு தேவையான பணத்தையும் அந்த காலபைரவரே உங்களுக்கு உருவாக்கி தருவார். எனவே நீங்களும் காலபைரவரை வழிபட்டு உங்கள் கடனை அடைத்து நிம்மதியான வாழ்க்கையை வாழலாம். நம்பிக்கையுடன் இதை செய்து பாருங்க உங்களுக்கு நல்லதே நடக்கும்.