பீட்ரூட்டில் சூப்பரான ஸ்வீட் பணியாரம் வெறும் 10 நிமிடத்தில் செய்துவிடலாம்! இதனுடைய சுவை கேக்கை விட சூப்பரா இருக்கும்!

பொதுவாக உடல் ஆரோக்கியத்திற்கு காய்கறிகளை நன்றாக சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள். அப்படி காய்கறிகளை பற்றி கூறும் போது பீட்ரூட் பற்றி கூறாதவர்களே இருக்க மாட்டார்கள். அதிலும் சிறு பிள்ளைகளுக்கு கொடுக்க சொல்லும் போது கட்டாயமாக பீட்ரூட்டை கொடுக்க வேண்டும் என்று தான் சொல்வார்கள். இத

By ·

பொதுவாக உடல் ஆரோக்கியத்திற்கு காய்கறிகளை நன்றாக சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள். அப்படி காய்கறிகளை பற்றி கூறும் போது பீட்ரூட் பற்றி கூறாதவர்களே இருக்க மாட்டார்கள். அதிலும் சிறு பிள்ளைகளுக்கு கொடுக்க சொல்லும் போது கட்டாயமாக பீட்ரூட்டை கொடுக்க வேண்டும் என்று தான் சொல்வார்கள். இதற்கு காரணம் பீட்ரூட் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். இதில் அதிக அளவு இரும்பு சத்து, நார் சத்து என உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்து இருப்பது மட்டும் இல்லாமல், நம் உடலில் தோலின் நிறத்தை சிகப்பாக மாற்ற இந்த பீட்ரூட் உதவியாக இருக்கும்.

ஆனால் இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் குழந்தைகள் அனைவருமே இந்த பீட்ரூட்டை சாப்பிட மாட்டார்கள். ஏன் பெரியவர்களுக்கு கூட பீட்ரூட் என்றால் சற்று தயங்கித் தான் சாப்பிடுவார்கள். இது போன்றவர்களுக்காக தான் இந்த பீட்ரூட் பணியாரம்.பணியாரம் என்றால் வெங்காயம் தக்காளி எல்லாம் போட்டு வதக்கி அப்படி செய்வதில்லை. இதன் சுவை கேக்கை போலவே இருக்கும். ஆகையால் இதை குழந்தைகள் கட்டாயமாக விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்தவுடன் ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக கூட இதை கொடுக்கலாம். பெரியவர்களும் இதை சாப்பிடலாம். உடலுக்கும் அத்தனை ஆரோக்கியமானது.

நம் குழந்தைகளுக்கு என்ன தான் கடையில் தின்பண்டங்களை வாங்கி கொடுத்தாலும் நம் வீட்டில் செய்து கொடுப்பதை போல ஆரோக்கியமாக இருக்காது. ஆனால் வீட்டில் செய்வதென்றால் அதற்கான பொருள்கள் எல்லாம் அந்த நேரத்தில் இருக்க வேண்டுமே என்ற கவலையும் உங்களுக்கு தோன்றுவது நியாயம் தான். வீட்டில் கொஞ்சம் பீட்ரூட் இருந்தால் கூட போதும் அதை வைத்து சூப்பரான இந்த இனிப்பு பணியாரம் செய்து விடலாம்.வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

இதையும் படியுங்கள் : காலை டிபனுக்கு கொஞ்சம் வித்தியாசமா ருசியான பீட்ரூட் ஆப்பம் செஞ்சி பாருங்கள்!

Recipes AMP · Quick view
View full