காலில் கருப்பு கயிறு கட்டுவது நல்லதா? அப்படி கட்டுபவர்கள் கருப்பு கயிற்றில் எத்தனை முடிச்சுகள் போட வேண்டும்!

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே அனைத்து சாஸ்திரங்களும் தோற்றம் பெற்றுள்ளது. அந்த வகையில் இந்து சமய சாஸ்திரத்தில் கயிறு கட்டுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது

By ·

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே அனைத்து சாஸ்திரங்களும் தோற்றம் பெற்றுள்ளது. அந்த வகையில் இந்து சமய சாஸ்திரத்தில் கயிறு கட்டுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. காலில் பல நபர்கள் கயிறு கட்டுவார்கள். அதிலும் கருப்பு நிற கயிறை கட்டுவார்கள். தற்போதைய பெண்கள் மத்தியில் காலில் கருப்பு கயிறு கட்டுவது ஆகி வருகிறது. பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் கருப்பு நிற கயிறை காலில் கட்டுவார்கள். தற்போது இது ட்ரெண்ட் ஆகி வந்தாலும் பழங்காலத்திலிருந்து நம் முன்னோர்களால் பின்பற்றப்பட்டுவரும் நடைமுறை தான் இது. அதைத் தவிர சிலர் தங்களிடம் தீய சக்திகள் அண்டக்கூடாது, வீட்டில் சுப காரியங்கள் நடக்க வேண்டும் என வேண்டிக்கொண்டு அந்த கயிற்றை கட்டிக் கொள்வார்கள். அப்படி நாம் கட்டிக் கொள்ளும் கருப்பு கயிறை எத்தை நாட்கள் கட்ட வேண்டும், எப்படி கட்ட வேண்டும், அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

காலில் கருப்பு கயிறு கட்டுவது ஏன்? 

காலில் கருப்பு நிற கயிறு கட்டுவது நம் வாழ்க்கையில் நமக்கு வரும் தீமையில் இருந்து விலக உதவுகிறது என்று நம்ப படுகிறது. உடல்நலம் பாதிக்காமல் இருக்கவும், திருஷ்டி ஏற்படாமல் தடுக்கவும் கருப்பு நிறக் கயிறை காலில் கட்டுகின்றனர். காலில் கருப்பு கயிறு கட்டுவதன் மூலம் சனி தோஷம் நீங்கும். சனி பகவான் முதலில் ஒருவரின் கால்களை தான் பற்றுவார் எனவும் கூறப்படுகிறது. எனவே, காலில் கருப்பு கயிறு கட்டுவதன் மூலம், சனி தோஷம் நீங்கும். ராகு, கேது பாதிப்புகள் உண்டாகாது என்று சொல்லப்படுகிறது.

காலில் கருப்பு நிற கயிறு கட்டுவதன் ஆன்மிகப் பலன்கள் 

ஜோதிட ரீதியாக கருப்பு கயிறு எதிர்மறை சக்திகளை ஈர்த்து, கண் திருஷ்டி மற்றும் தீய சக்திகளிலிருந்து பாதுகாப்பை வழங்குகிறது. இது மனதிற்கு அமைதியையும் பாதுகாப்பு உணர்வையும் தருகிறது. கருப்பு கயிறு கட்டுவதால் சனி பகவானின் பார்வையால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் என்றும், ராகு, கேது போன்ற எதிர்மறை கிரக பாதிப்புகளிலிருந்து காக்கும் என்றும் நம்பப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் துன்பங்கள் குறைக்கும் என்று கூறப்படுகிறது. பொதுவாக கருப்பு நிறம் மனதிற்கு அமைதி தரும் அதனை காலில் அணிவதால் மனம் மற்றும் உடல் சீரான நிலையில் இருக்கும். ஆன்மீக ரீதியாக மட்டுமல்லாமல் ஆரோக்கிய ரீதியாக காலில் கருப்பு கயிறு கட்டுவதால் இரத்த ஓட்டம் மேம்படும், உடலில் ஏற்படும் வலிகள் மற்றும் அசௌகரியங்களை குறைக்க உதவும் என்று நம்பப்படுகிறது. 

எந்த காலில் கயிறு கட்ட வேண்டும்? 

கயிறு கட்டும் முறை காலம்காலமாக மக்களிடையே இருந்து வருகிறது. அனால் கயிறு கட்டும் போது பெண்கள் இடது காலில் தான் கட்ட வேண்டும். அதுபோல ஆண்கள் வலது காலில் தான் கட்ட வேண்டும் மாற்றி கட்டுதல் கூடாது. காரணம் பெண்கள் இடது காலில் கருப்பு கயிறு கட்டினால் ஆன்மிக ரீதியாக பெண்ணிய சக்திகளுடன் தொடர்புடையதாகவும், எதிர்மறை சக்திகளிலிருந்து பாதுகாப்பாகவும் கருதப்படுகிறது. ஆண்கள் வலது காலில் கருப்பு கயிறு கட்டினால் அவர்களின் சக்தி, ஆற்றல் மற்றும் செயல்திறன் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த கருப்பு கயிறு கட்டுவதற்கு முன் 9 முடிச்சுகள் போட்டு, சனி பகவானை வணங்கி, சனிக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை புனித நாள்களில் கட்டுவது சிறந்தது. இதனை அணியும் போது மனதில் காயத்திரி மந்திரம் அல்லது சனி பகவானின் மந்திரத்தை 21 முறை உச்சரித்தால் மிகவும் நல்லது.‌

இதனையும் படியுங்கள் : கருங்காலி மாலை அணிவதன் பலன்கள்

Recipes AMP · Quick view
View full