எந்த விரலால் விபூதி பூசினால் என்ன பலன் கிடைக்கும்!!

கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும் போது, அங்கே அர்ச்சகர் நமக்கு விபூதியும் குங்கும்மும் அளிப்பார்.அப்படி அளிக்கப் படும் விபூதியை வாங்கி நெற்றியில் இடும்போது, நாம் அதை எப்படி, எந்தெந்த விரல்களால் எடுத்து நெற்றியில் இடுகிறோம் என்பதை நம்மில் பலருக்கு தெரிவதில்லை. விபூதி ஆன்மிகத்தில்

By ·

கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும் போது, அங்கே அர்ச்சகர் நமக்கு விபூதியும் குங்கும்மும் அளிப்பார்.அப்படி அளிக்கப்  படும் விபூதியை வாங்கி நெற்றியில் இடும்போது, நாம் அதை எப்படி, எந்தெந்த விரல்களால் எடுத்து நெற்றியில் இடுகிறோம்  என்பதை நம்மில் பலருக்கு தெரிவதில்லை. விபூதி ஆன்மிகத்தில் மிக முக்கியமான பொருளாக கருதப்படுகிறது. ஆன்மிகம் மட்டுமின்றி அறிவியல் ரீதியாகவும் பலவிதமான நன்மைகளை வழங்கக் கூடியது விபூதி. விபூதியை எடுக்க சில விரல்களை பயன்படுத்தும் போதும் தீமையும், சில விரல்களை பயன்படுத்தும் போது அதீத நன்மைகளும் ஏற்படும் என நம்பப்படுகிறது. ஆகையால் இந்த ஆன்மிகப் பதிவில் எந்த விரலால் விபூதி பூசினால் என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

Image of hanging ringing bell in temple gate

விபூதியின் மகிமை 

விபூதி (திருநீறு) என்பது இந்து சமயத்தில் மிகவும் புனிதமான பொருளாக கருதப்படுகிறது. இந்த விபூதி பெரும்பாலும் பசு சாணம் மற்றும் மூலிகைகளை எரிப்பதால் கிடைககிறது. இதனை நெற்றி, மார்பு, மகா சக்கரங்கள் போன்ற பகுதிகளில் பூசுவது மரபு. இத்தகைய விபூதியைப் பூசுவதால் இறைவனின் அருள் கிடைக்கும், நம்முடைய பாவங்கள் அகலும் அதுமட்டுமல்லாமல் மனதில் நல்ல எண்ணங்கள் அதிகரிக்கும். நெற்றியில் அணியும் திருநீறு விளக்கும், உயர்ந்த தத்துவம் என்னவென்றால், ‘நாடாண்ட மன்னனும், நூல் பல கற்ற பண்டிதரும் கடைசியில் பிடி சாம்பல் ஆவார்கள்’ என்பதாகும். நெற்றியில் பிரம்மன் எழுதிய தலையெழுத்தை அழித்து, இறையருளை பதிக்கும் தன்மையும் திருநீற்றுக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. 

எந்த விரலில் விபூதி பூசினால் என்ன பலன் கிடைக்கும் 

கட்டை விரல் மூலம் விபூதி பூசினால் உடல் ஆரோக்கியம் குன்றும், எளிதில் குணமாகாத நோய்கள் ஏற்படும் என நம்பப்படுகிறது.

ஆட்காட்டி விரல் மூலம் விபூதி பூசினால் உடைமைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும், வீண் செலவு, நாசம் ஏற்படும்‌‌ அதனால் இந்த விரலால் விபூதி பூசுவதை தவிர்க்க வேண்டும். 

நடு விரல் மூலம் விபூதி பூசினால் மன அமைதி கெடும் என்று கூறப்படுகிறது.

மோதிர விரல் மூலம் விபூதி பூசினால் வளம், ஐஸ்வரியம் அதிகரிக்கும், வாழ்க்கையில் சந்தோஷம் நிலைத்திருக்கும்.

சுண்டு விரல் மூலம் விபூதி பூசினால் காரியங்களில் தடை, கிரகதோஷங்கள் ஏற்படும் என்று நம்பப்படுகிறது.

மோதிர விரல் மற்றும் கட்டை விரலை குவித்து எடுத்து, மோதிர விரலால் விபூதி பூசிக்கொண்டால் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறலாம்.

விபூதி பூசும் சரியான முறை

விபூதி என்றால் ஐஸ்வர்யம் என்று பொருள். விபூதி என்னும் சொல்லுக்கு மகிமை என்றும் பொருள். இந்த விபூதியை நெற்றி, மார்பு, கை, தோள் போன்ற புனிதமான பகுதிகளில் பூசலாம். விபூதியை பூசும் போது மூன்று படுக்கை வசக் கோடுகளாக நெற்றியில் வைத்து பூச வேண்டும். இவ்வாறு பூசுவது  சிவ பக்தர்களுக்கு மிகவும் சிறப்பானது என கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் விபூதி பூசும் போது கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி நின்று தான் பூச வேண்டும். சம்புடத்தில் இருந்து விபூதியை எடுக்கும் போது, “ஓம் நமசிவாய” அல்லது “திருச்சிற்றம்பலம்” என்றும் விபூதியை தரிக்கும் போது பஞ்சாட்சர மந்திரத்தையும் ஜபிக்க வேண்டும்.

விபூதி பூசும் போது தவிர்க்க வேண்டியவை

விபூதியை பூசும் போது ஆள்காட்டி, நடுவிரல், சிறு விரல் கொண்டு பூசக் கூடாது இது கெடு பலங்களை வழங்கும் என்று நம்பப்படுகிறது. திருநீரு பூசும் போது எக்காரணம் கொண்டும் திருநீர் கீழே சிந்துதல் கூடாது. புனிதம் தவறிய மற்றும் சுற்றுப்புற நலமில்லாத இடங்களில் விபூதி பூசக் கூடாது. விபூதியை எடுக்கும் போது மற்றவர்கள் அல்லது நமக்கு இளையவர்கள் கையிலிருந்து வாங்காமல் நாம் தனியாக எடுத்து தான் பூச‌ வேண்டும். நெற்றியில் ஈட்ட பிறகு எஞ்சிய திருநீற்றை கோயில் தூண்களில் போடுதலும் கூடாது. அதனை, ஒரு இலையில் மடித்து பத்திரப்படுத்தலாம். 

இதனையும் படியுங்கள் : ஈசானிய மூலையில் செய்ய வேண்டியவை

Recipes AMP · Quick view
View full