மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான சுரைக்காய் பக்கோடா இனி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பக்கோடா இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. பக்கோடாகளில் பல வகை உண்டு. அதில் வெங்காய பக்கோடா, காலிஃப்ளவர் பக்கோடா, சிக்கன் பக்கோடா, முந்திரி பக்கோடா, இறால் பக்கோடா, பன்னீர் பக்கோடா, மற்றும் உருளைக்கிழங்கு பக்கோடா மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன

By Prem Kumar · 3/3/2024

பக்கோடா இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. பக்கோடாகளில் பல வகை உண்டு. அதில் வெங்காய பக்கோடா, காலிஃப்ளவர் பக்கோடா, சிக்கன் பக்கோடா, முந்திரி பக்கோடா, இறால் பக்கோடா, பன்னீர் பக்கோடா, மற்றும் உருளைக்கிழங்கு பக்கோடா மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது சுரைக்காய் பக்கோடா. சுரைக்காய் 70 சதவீதத்திற்கும் மேல் நீர்ச்சத்து அதிகமுள்ள ஒரு காய் வகை. உடலை நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்வது தொடங்கி உடல் எடையைக் குறைப்பது வரையிலும் நிறைய ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருக்கிறது. ஆண்டு முழுவதும் தடையற கிடைப்பவை. அதனால் இந்த பக்கோடாவை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

இந்த சுரைக்காய் புரதம், வைட்டமின்கள் மற்றும் உணவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதை வைத்து கூட்டு, பருப்பு கூட்டு, அல்வா, கீர் போன்ற இனிப்பு மற்றும் காரமான உணவு வகைகளை சுரைக்காய் கொண்டு செய்யலாம். மாலை வேளையில் மொறுமொறுப்பாக டீ, காபியுடன் ஏதேனும் சாப்பிட நினைக்கும் போது, வீட்டில் சுரைக்காய் இருந்தால், அதனைக் கொண்டு பக்கோடா செய்து சாப்பிடுங்கள். இது 10 நிமிடத்தில் செய்யக்கூடியது. மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. வெகு எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி குறைந்த நேரத்திலேயே நாம் செய்து விடலாம். மாலை நேரங்களில் என்ன செய்வது என்று தடுமாறிக் கொண்டிருந்தால் யோசிக்காமல் இந்த எளிதாக செய்யக்கூடிய சுரைக்காய் பக்கோடாவை செய்து உங்கள் காபியுடன் சுவையுங்கள்.

இதனையும் படியுங்கள் : வீட்டிலயே சுட சுட ஸ்நாக்ஸ் சாப்பிட ருசியான ப்ராக்கோலி பக்கோடா இப்படி செய்து பாருங்க!

Recipes AMP · Quick view
View full