பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர ஏலக்காய் பரிகாரம்!!

காசு பணம் இல்லாமல் அடுத்தவர்களிடம் கையேந்தி கடன் கேட்டு நிற்கும் போது தான் நமக்கு பணத்தினுடைய அருமை முழுவதுமாகவே தெரியும். பொதுவாக நமக்கு அனுபவம் கற்றுத் தராத பாடங்களே கிடையாது. பள்ளிக்கூடத்தில் போய் படிக்காத பாடத்தை கூட இந்த அனுபவ பாடம் நமக்கு கற்றுத் தந்துவிடும் அவசியம் இல்லாத

By ·

காசு பணம் இல்லாமல் அடுத்தவர்களிடம் கையேந்தி கடன் கேட்டு நிற்கும் போது தான் நமக்கு பணத்தினுடைய அருமை முழுவதுமாகவே தெரியும். பொதுவாக நமக்கு அனுபவம் கற்றுத் தராத பாடங்களே கிடையாது. பள்ளிக்கூடத்தில் போய் படிக்காத பாடத்தை கூட இந்த அனுபவ பாடம் நமக்கு கற்றுத் தந்துவிடும் அவசியம் இல்லாத போது நாம் தேவையில்லாமல் ஆடம்பர பொருட்களை விரும்ப கூடாது இந்த உலகத்தில் சேமித்து வைத்தால் மட்டுமே நம்மால் வாழ முடியும். நல்ல நண்பனாக உனக்கு இருக்கக்கூடியது சேமிப்பு மட்டுமே. ஒருவன் நன்றாக வாழ்ந்து கெட்டுப் போனால் அது மரணத்தை விட மிகவும் மோசமான ஒன்று இந்த விஷயங்கள் எல்லாவற்றையும் மனதில் நிறுத்திக் கொண்டாலே பல பிரச்சினை குறைந்து எளிமையான நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும் வாழ்க்கைக்கான பக்குவமும் நமக்கு கிடைக்கும். பண பிரச்சினைகள் இல்லாமல் வாழ்வதற்கு நாம் அனுபவ பாடங்களை கற்றுக்கொண்டு அதிலிருந்து மீண்டு வருவது தவறு கிடையாது பல பிரச்சினைகளில் இருந்து வெளியே வருவதற்கு ஏலக்காயை வைத்து செய்யக்கூடிய பரிகாரத்தை பார்க்கலாம்.

தெய்வ வழிபாடு

தினமும் வீட்டில் இருக்க கூடிய அனைவரும் தெய்வத்தை வழிபட்டு விட்டு தான் வெளியே செல்வார்கள் அந்த சமயத்தில் நாம் தெய்வத்திடம் வேண்டுதல்களை வைப்போம் உங்களுடைய தேவைகளை இறைவனிடம் கூறும்போது கடன் பிரச்சனை வருமானப் பிரச்சனை குடும்பத்தில் இருக்கக்கூடிய அனைத்து பிரச்சனைகளையும் கூறி கடவுளை வழிபடுவோம் அப்படி நாம் வழிபடும்போது இந்த ஒரு குறிப்பிட்ட விஷயத்தை மட்டும் செய்து பாருங்கள்.

ஏலக்காய் பரிகாரம்

தினமும் தெய்வத்தை வழிபடும்போது வாயில் ஒரு ஏலக்காயை போட்டு அதனை வாயில் வைத்துக் கொண்டே நீங்கள் இறைவனிடம் வேண்டுதல்களை வைக்க வேண்டும் ஒரே ஒரு ஏலக்காயை மட்டும் வாயில் போட்டுக்கொண்டு என்ன வரம் நாம் கேட்டாலும் அது நமக்கு உடனே கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏலக்காய்க்கு வசிய தன்மை இறை வசியம் அனைத்துமே அதிகமாகவே உள்ளது எனவே இறைவன் உங்களுடைய வேண்டுதல்களை செவி கொடுத்து கேட்பார் உங்களுக்கு இந்த பிரபஞ்சமும் அந்த வேண்டுதலை விரைவாக நிறைவேற்றிக் கொடுக்கும்.

பரிகாரத்தின் பலன்கள்

தினமும் காலையில் தெய்வத்தை வழிபடும் போது இதனை செய்ய வேண்டும் கோவிலுக்கு போனாலும் கூட இந்த பரிகாரத்தை செய்யலாம் ஒரே ஒரு ஏலக்காய் மட்டும் வாயில் போட்டுக்கொண்டு சாமி கும்பிட வேண்டும். இதனால் நமக்கு வரப்போகின்ற பாதிப்புகள் அனைத்தும் நீங்கிவிடும் தெய்வத்தை வழிபட்டு விட்டு பிறகு அந்த இலக்காயை வாயில் போட்டும் என்று சாப்பிடலாம். பிறகு யாருடைய கால் தடமும் படாத இடத்தில் அதனை துப்பி விட வேண்டும் இந்த எளிமையான பரிகாரத்தை செய்வதன் மூலம் நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.

இதனையும் படியுங்கள் : கடன் பிரச்சினைகள் தீர செய்ய வேண்டிய பரிகாரம்!

Recipes AMP · Quick view
View full